twitter











எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெற உள்ளது. மொத்தமாக உள்ள 196 ஆசனங்களுக்காக இம்முறை தேர்தலில் 7831 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இவர்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும், 298 சுயேச்சைக் குழுக்கள் சார்பிலும் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், இலங்கையின் தேர்தல் வரலாற்றில் அதிகளவு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக அமைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவே மாவட்டம் ஒன்றில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கிய தேர்தலாகும்.






















தமிழர் தாயகப் பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் அதிகளவில் அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மொத்தம் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 அரசியல்கட்சிகள், 12 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒருகட்சியினதும், 3 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கபட்டுள்ளது.















கண்காணிப்புக்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் போது உள்ளுர், வெளியூர் என பல கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இம்முறை அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடந்த போது அது சுமுகமாக நடைபெற்று முடிந்தது என பஃவ்ரல் உட்பட பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எல்லோரும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர். ஆனால் நடந்த விடயங்களின் உண்மைத்தன்மை எவ்வளவு தூரம் வெளிவந்தது??? அத்துமீறல்களும், வன்முறைகளும் இடம்பெற்றதை மறுக்க முடியாது. இதனையும் சில மீடியாக்கள் மறைமுகமாக வெளியிட்டன. இருந்தாலும் ஒரு விதத்தில் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.

இம்முறையும் தேர்தல் சுமுகமாக நடக்குமா என்பதில் சந்தேகம் தான். ஆனாலும் கடந்த முறை இரு வேட்பாளர்களுக்கு மட்டுமே போட்டி. அதுவும் பெரிய தலைகள் இம்முறை அப்படியில்லைத் தானே! மாவட்டந்தோறும் பல போட்டியாளர்கள். இதில் யார், யாருக்கு கள்ளஓட்டுப் போடுவது, யார் யாரை மிரட்டுவது.? எனவே எல்லாம் வேலை இல்லாத ஒன்று தான். திட்டமிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்து சின்னாபின்னமாக்க பெரும்பான்மை, அதைச்ச சார்ந்த சிறுபான்மை தயாராகும் வேளையில், உங்கள் உரிமைகளை சரியான விதத்தில் தெரிவு செய்வது உங்கள் கைகளிலேயே உள்ளது.

சிந்தித்து செயற்படுங்கள்.

7 comments:

  1. சனத்துக்கு இப்ப என்ன சொன்னாலும் ஏறாது - மரத்துப் போச்சுதுகள்! எல்லாரும் மரத்த சனத்தின்ர சீவனில் குடும்பம் ஓட்டப் பாக்குதுகள்!

  1. //ஜனாதிபதி தேர்தல் நடந்த போது அது சுமுகமாக நடைபெற்று முடிந்தது என பஃவ்ரல் உட்பட பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எல்லோரும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர். //
    //ஆனால் நடந்த விடயஇதனையும் சில மீடியாக்கள் மறைமுகமாக வெளியிட்டனங்களின் உண்மைத்தன்மை எவ்வளவு தூரம் வெளிவந்தது??? //
    எல்லாம் ஓகே .இந்த பந்தி மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன ?விளக்கம் கோர முடியுமா ?எங்க பார்ப்பம் ?

  1. இலங்கையில பிறந்த கடமைக்கு யாருக்காவது ஓட்டை போட்டிடு வாங்கோ!

  1. விளக்கம் கேட்டேன் எங்க பதிலையே காணோம் .........ஹி ஹி
    இதுதான் பதிவர்கள் விடுகிற பிழை .எழுதுவார்கள் ஏதாவது கேட்டால் ஒரே ஓட்டமா ஓடிடுவார்கள்.எழுத வெளிக்கிட்டால் முழுமையாக எழுதுங்கள் .வாசிப்போருக்கு உண்மை தெரிந்தால் நல்லது தானே .பதிலை எதிர்பார்க்கிறேன் விரைவில் .........

  1. தங்க முகுந்தன் said...
    சனத்துக்கு இப்ப என்ன சொன்னாலும் ஏறாது - மரத்துப் போச்சுதுகள்! எல்லாரும் மரத்த சனத்தின்ர சீவனில் குடும்பம் ஓட்டப் பாக்குதுகள்!//

    தேர்தலில் யாருக்கும் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை. (வடக்கு - கிழக்கு)

  1. aswamethan said...

    எல்லாம் ஓகே .இந்த பந்தி மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன ?விளக்கம் கோர முடியுமா ?எங்க பார்ப்பம் ?//

    aswamethan said...
    விளக்கம் கேட்டேன் எங்க பதிலையே காணோம் .........ஹி ஹி
    இதுதான் பதிவர்கள் விடுகிற பிழை .எழுதுவார்கள் ஏதாவது கேட்டால் ஒரே ஓட்டமா ஓடிடுவார்கள்.எழுத வெளிக்கிட்டால் முழுமையாக எழுதுங்கள் .வாசிப்போருக்கு உண்மை தெரிந்தால் நல்லது தானே .பதிலை எதிர்பார்க்கிறேன் விரைவில் ......///

    நீங்க கேட்ட விளக்கத்தை தருவதாக இருந்தால் அதை விலாவாரியாக பதிவிலேயே எழுதியிருப்பேன். சில விடயங்கள் தணிக்கை. அதை மீறி நான் வெளியிடுவது எனக்கு நல்லதல்ல. நேரில் உங்களை சந்தித்தால் அந்த தரவுகளை தருகின்றேன்.

  1. VARO said...
    இலங்கையில பிறந்த கடமைக்கு யாருக்காவது ஓட்டை போட்டிடு வாங்கோ!//

    இது நல்லா இருக்கே!

Post a Comment