twitter






















“இலங்கையில எத்தனை புத்தகத்தை வாசித்தாலும் இந்திய புத்தகம் வாசிக்கிற மாதிரி ஒரு திருப்தி எனக்கு இல்லை” என்கிறார் கல்லூரி மாணவி மஞ்சுளா. இவருடைய கருத்தோடு ஒத்ததாகவே இலங்கை வாசகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்;றனர். கடந்த வருடம் BMICH ல் நடை பெற்ற புத்தக கண்காட்சியில் சந்தித்த வாசகர்களும்; இக்கருத்தையே முன் வைத்தார்கள். இலங்கையில் அற்புதமான இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் எழுத்தாளர்கள் பலர் இருந்தும் அவர்களை அறியாதோர் பலர் இருக்கின்றனர். ஆனாலும் சாதாரண வாசகர்கள் பெருமளவில் இலங்கை புத்தகங்ககளை நாடுவதே இல்லை. என்ன காரணம்? இதற்கான பதிலை கண்டறிய முற்பட்டோம்.













புத்தக கண்காட்சியிலே இந்தியப் புத்தகங்களை வருவோர் போவோரெல்லாம் வாங்கும் போது இலங்கைப்புத்தகங்களை ஒரு சிலர் தான் வாங்கிச் செல்கின்றனர். அவர்களும் தங்கள் படிப்புக்கோ அல்லது சொந்த தேவைக்காகவோ தான். இந்திய புத்தகம் அதிகளவாகவே விற்பனையானதற்கு வாசகர்கள் பல்வேறு கருத்தினை முன் வைத்தார்கள். “இந்திய புத்தகங்களின் மொழிநடை வாசிக்கிறதிற்கு லேசாக இருக்குது. நடைமுறையுடன் சேர்ந்த மாதிரியே இருக்குது. புத்தகத்தை எடுத்து வாசிச்;சம் என்றால் தொடர்ந்து வாசித்து கொண்டு போறம் விளங்கேலை என்று திருப்பி வாசிக்க வேண்;டிய தேவை இல்லை”. என்கிறார் குடும்பப் பெண் ஒருவர்.

“இந்தியப் புத்தக கதையமைப்பு ஒரு படத்தை பார்ப்பது போல இருக்குது வாசிக்கும்போது ஆர்வத்தை தூண்டுகிறது. நாங்கள் அந்த உணர்விற்குள் நிற்கிற மாதிரியே இருக்கிறது. பக்கத்தில் நிண்டு யார் கூப்பிட்டாலும் காதில விளாது. அப்;படியே கதைக்குள்ள போய் விடுவேன்”. என்கிறார் வெளிநாடு செல்ல இருக்கும் சாவித்ரி. “இந்திய புத்தகங்களின் அட்டை படத்தை பார்த்தாலே புத்தகத்திற்கு பக்கத்துல போய் நிண்டு ஒரு முறை தடவிப்பார்க்க வேண்டும் போல் இருக்கும். அப்படி ஒரு அழகு இருக்குதே அதிலே ஒரு ரசனையை தூண்டுகிறது அதன் பின் புத்தகத்தை சொந்தமாக வேண்ட வேண்டும் போல இருக்கும்” என்கிறார் பாடசாலை ஆசிரியரான பாலேஸ்வரன்.

















“இந்திய எழுத்தாளர்களது படைப்புக்கள் நமக்கு பழக்கப்பட்டு விட்டது. இவர்களது படைப்புக்கள் இன்னமும் பழக்கப்பட இல்லை. இலங்கை புத்தகத்தை நாம் மாற்றி வாசிப்பதற்கு எங்களது ரசனையை இன்னமும் எழுத்தாளர்கள் கண்டு பிடிக்கவில்லை. எமக்கு ஏற்ற வகையில் அவர்களால் எழுத்து மூலம் எழுதி விளங்கப்படுத்த முடியவில்லை இந்தியர்களது எழுத்துப் பாணிக்கு அடிமைப்பட்டு விட்டோம். அதில் இருந்து இன்னமும் மீளமுடியாது உள்ளோம்” என்கிறார் கொழும்பு பல்கலைகழக மாணவன் டேவிட்.

இலங்கை எழுத்தாளர்களை பிரபல்யமாக தெரிவது இல்லை. இந்திய எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை எழுத்தாளர்கள் தங்களை பிரபல்யப்படுத்தும் வகையிலும் சீரியசாக எழுதுவது இல்லை. தொடர்ச்சியான எழுத்து பாணியில் தொடர்ந்து எழுதுவது இல்லை. எழுத்தாளர்கள் இந்தியாவில கூட்டாக கலந்துரையாடி செயற்படும் பழக்கம் உண்டு. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. அதிகளவாக எல்லோரிடமும் இங்கே போட்டியும் பொறாமையுமாகத்தான் காணப்படுகிறது.














1960 காலப்பகுதிகளில் இலங்கையில் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக போராடியது அந்தக் காலப்பகுதிகளில் சஞ்சிகைகள் வெளிவந்தன. அந்த போராட்டத்தின் விளைவாக ஓரளவுக்கேனும் இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்களிற்கு வளர்ச்சியை காட்டியது. இது தொடர்ந்திருந்;தால் வளர்ச்சி நிலையை எட்டிஇருக்கும்.

“இலங்கை எழுத்தாளர்கள் காட்சிப்படுத்தல் ஊடக எழுதாதற்கு காரணம் வாசகர்களை பல்வேறு விதமாக யோசிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்;. அவர்களை ஒற்றை வழியாக யோசிக்க வைக்க விடக்கூடாது. அவ்வாறு அவர்களை யோசிக்க வைத்தால் சிந்திக்கிற ஆற்றல் தடைப்பட்டு விடும் ஆதலால்தான் அவர்கள் காட்சி படுத்தல் ஊடாக எழுதுவது இல்லை. அதுமட்டும் அல்ல அவர்களுடைய சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. அது மட்டும் அல்ல எல்லோருக்கும் விளங்க கூடிய வகையில் இந்தியத் தமிழ் உள்ளது” என பேராசிரியர் சிவத்தம்பி கூறுகிறார்.











இந்தியத்தமிழ் எல்லோருக்கும் விளங்க கூடியதாக உள்ளது ஏனெனின் சிறு வயதில் இருந்தே சினிமா பார்த்து பார்த்து இந்தியாவில் பேசும் தமிழ் மொழிக்கு பழக்கப்பட்டு விட்டார்கள்;. ஆகவே அவர்களிற்கு கடினமான விதத்தில் இந்திய மொழியில் கூறினாலும் உடனே புரிந்து கொள்வார்கள்;. இலங்கை மொழியில் நல்ல விடயங்களை சுலபமாக எழுதினால் கூட கடினமான நடையாகத்தான் இருக்கின்றது. இதற்கு ஊடகங்கள்தான் காரணம் என்கிறார் ஊடகவியளார், விரிவுரையாளர் தேவகௌரி.
“இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது இல்லை எழுத்தாளர்களிற்கு தேவையான நிதிகள் வழங்கப்படுவது இல்லை. விடய ரீதியான படைப்புகளிற்கு அரசினால் நிதியீட்டம் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த வருடம் தமிழ் மொழியிற்கு எந்தவிதமான நிதியீட்டமும் பாடசாலைகள் உட்பட வழங்கப்படவில்லை. இதனால் புத்தகசாலைகளில் இலங்கை எழுத்தாளர்களின் புத்தகம் பெரிதாக விற்பனை ஆகவில்லை என்கிறார். ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லை எழுத்தாளர்களிற்கு தேவையான நிதி வழங் கப்படுகிறது” என்கிறார் நூல் விமர்சகரான மதுசூதனன்.

சாதாரண மக்கள்தான்; வாசகர்களாக உள்ளார்கள். ஆகவே அவர்களிற்குதான் எழுத்தாளர்கள் எழுதும் எழுத்தைப்பற்றி தெரிந்து இருக்கின்றது ஆகவே அவர்களுடைய கருத்தை மறுதலிக்க முடியாது.

4 comments:

  1. //இலங்கையில் அற்புதமான இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் எழுத்தாளர்கள் பலர் இருந்தும் அவர்களை அறியாதோர் பலர் இருக்கின்றனர்.//

    இது யார் விட்ட தவறு என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்

  1. முந்தின காலம் மவுசு இருந்தது தான் ,இப்ப எங்க ?நாமளே நம்மள வித்திட்டம் .அதைத்தான் சொல்லலாம்

  1. //“இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது// //
    //இலங்கை எழுத்தாளர்களின் புத்தகம் பெரிதாக விற்பனை ஆகவில்லை இல்லை //

    ////இதற்கு காரணம் நங்கள் தான் .எங்களுடையத நாங்களே வங்கமாட்டம் .பிறகு மற்றவன் வந்குவன?////

  1. roshaniee said..

    //இதற்கு காரணம் நங்கள் தான் .எங்களுடையத நாங்களே வங்கமாட்டம் .பிறகு மற்றவன் வந்குவன?//

    நிச்சயமாக, எங்கள் எழுத்தாளர்களுக்காகவும் புத்தகங்களுக்காகவும் பரிந்து பேசும் எத்தனைபேர் நம்மவர்களின் புத்தகங்களை வாங்கிப் படிக்கின்றனர்.

Post a Comment