twitter


















எம்பெஸ்ஸியிற்கு கடிதம் கொடுத்து ஒரு வருடம் ஆகி விட்டது. “நாளைக்கு ஒருக்கால் எம்பெஸ்ஸி பக்கம் போயிற்று வந்து விடு” என எனக்கு அம்மா நச்சரித்து கொண்டு இருந்தா.. ஒன்றும் செய்ய முடியாத நிலை. ஏனெனில் நான் கொழும்பில இருக்கிறேன். அதை விட மூத்த பிள்ளையும் நானே. பொறுப்பு எல்லாம் என் தலையில் தான்.
எம்பெஸ்ஸியிற்கு போவோம் என முடிவு எடுத்தேன். 10.30 ற்கே புறப்பட்டு விட்டேன். அங்கு போன பின்புதான் விஷயமே தெரிந்தது. நான் இலங்கையில எங்க இருந்தாலும் பறவாயில்லை வெளிநாடு என்ற ஒன்றுக்கே போகப்படாது என்று.

ஏனென்று நீங்க கேட்பது புரியுது. 10.30 ற்கு போனேன் என்று சொன்னேன் தானே வீட்டிற்கு வந்தது 02 மணிக்குதான். அவ்வளவு நேரமும் நேரத்தையும் வீணாக்கியது தான் மிச்சம். பொறுமையை கடைபிடித்து கொண்டு நின்றேன் கடைசியல ஒரு நிமிடம் கூட கதைக்கவில்லை. எப்படி இருக்கும்..?

கனடா எம்பெஸ்ஸி என்றால் வந்திருப்போரை வரவேற்று பெரிய குஷன் சீற் எல்லாம் தருவார்கள் அங்கே களைப்பாறலாம் என்று மட்டும் நினைத்திடாதீங்க. அங்கு சென்ற நேரத்தில் இருந்து வெளியே வருமட்டும் ஒரு நிமிடம் கூட உட்காரவில்லை. இடமே இல்லைங்க பிறகு எங்கே இருப்பது...? கால் எப்படி கடு கடுத்திருக்கும்? அப்படி கால் கடுக்க நின்றால்தானாம் கனடா போகலாமாம். இப்படி எல்லாம் கனடா போக வேண்டுமோ?

நாலைஞ்சு இங்கிலிசு வார்த்தையை பயன்படுத்தி அவரிடம் போய் கதைப்பம் என்றால் தமிழிலையே கதைத்தார்கள். பறவாயில்லை என்ர இங்கிலிஸை கேட்க அவை குடுத்து வைக்கலை. ஒற்றை வரியிலே என்ன பிரச்சனை என்றார்கள். அப்ளை பண்ணி ஒரு வருடம் ஆகி விட்டது அதுதான்… பிரச்சனை இல்லை வீட்டிற்கு போங்க கடிதம் அனுப்பி வைக்கிறோம். என்றார்கள்.

அவ்வளவு தான் வேறை கதை கதைக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எழும்பி வந்ததுதான் மிச்சம். இப்படித்தான் கஸ்ரப்பட்டு… எல்லோரும் வெளிநாடு போயிருப்பினமோ…?

இப்படி எல்லாம் வெளிநாடு போக வேண்டுமோ…?

9 comments:

  1. பிள்ளை உனக்கு இதே கஸ்டமெண்டா பிறகெப்படி மிச்சவேலை செய்வாய்?

  1. அடி பாவி! உனது அனுபவமா? அல்லது அண்ணா? புhவம்டி அவன்! வெளிநாடு போறன் எண்டு நீ குடுக்கிற அக்கப்போர் தாங்கேலாமல் இருக்கு. பெரிய வெள்ளைக்காரன் பரம்பரையோ! ஊரில நாலு வீட்டை கூட்டித்தானே சம்பாதிக்கிறனி! அங்கையும் போய் அதை செய்ய ஆசைப்படுறியோ???

  1. குடும்பமா விஸா கிடைச்சிட்டுதாமே! கனடா போப்போறியள் எண்டு கேள்விப்பட்டன்.

  1. இது என்ன அனுபவம்??? என் அனுபவததை கேட்டால் வெளிநாடு போக மனம் வருமா??

  1. NIRU said...
    பிள்ளை உனக்கு இதே கஸ்டமெண்டா பிறகெப்படி மிச்சவேலை செய்வாய்?//

    அப்பிடியா ராசா!

  1. VARO said...
    அடி பாவி! உனது அனுபவமா? அல்லது அண்ணா? புhவம்டி அவன்! வெளிநாடு போறன் எண்டு நீ குடுக்கிற அக்கப்போர் தாங்கேலாமல் இருக்கு. பெரிய வெள்ளைக்காரன் பரம்பரையோ! ஊரில நாலு வீட்டை கூட்டித்தானே சம்பாதிக்கிறனி! அங்கையும் போய் அதை செய்ய ஆசைப்படுறியோ???//

    வந்தமா… வாசிச்சமா… போனமா… என்று இருக்கணும். அதை விட்டிட்டு கிண்டக்கூடாது.

  1. roshaniee said...
    குடும்பமா விஸா கிடைச்சிட்டுதாமே! கனடா போப்போறியள் எண்டு கேள்விப்பட்டன்.//

    ஓம் பிள்ளை, அங்க போய் உன்னை எடுக்கிறன்.

  1. Atchu said...
    இது என்ன அனுபவம்??? என் அனுபவததை கேட்டால் வெளிநாடு போக மனம் வருமா??//

    அட! அப்ப சொல்லுங்க கேட்பம்

  1. ///இப்படி எல்லாம் வெளிநாடு போக வேண்டுமோ…?///
    நான் நினைக்கிறன் சும்மா பிளயிட் டிக்கெட் கிடைச்சாலும் அந்தப்பக்கம் தலை வைச்சுகூட படுக்க மாட்டியள் போல .இப்படி அனுபவப்பட்டால் தான் வெளிநாட்டு மோக பிசாசுகள் அடங்குங்கள்

Post a Comment