twitter


அகில இந்திய திரைப்பட விழாவை கொழும்பில் நடத்தினால் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் நட்சத்திரங்கள் வருவார்கள். உலக அளவில் கலா ரசிகர்களின் பார்வை இலங்கை மேல் விழும் என்பது அவரது எண்ணம். தானே நேரடியாக முக்கிய நட்சத்திரங்களிடம் பேசி வருகிறார். அப்படிதான் ரஜினியிடம் பேச முயல, அவர் முதலிலேயே இந்த முயற்சியை முறியடித்ததாக தகவல்! முதலில் இதில் கலந்து கொள்வதாக இருந்த அமிதாப்பச்சன் கூட இந்த அமைப்பின் கௌரவ தூதர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். (நன்றி-அமிதாப் வீட்டின் முன் கூடி அவருக்கு நெருக்கடி கொடுத்த நாம் தமிழர் இயக்கத்திற்கு) தற்போது இந்த விழாவின் தூதர் சல்மான்கான்!
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு இந்த கொழும்பு விழாவை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது. அப்படியிருந்தும் ஜுன் 3,4,5, தேதிகளில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள கொழும்பு கிளம்ப முடிவெடுத்திருக்கிறார்களாம் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், கத்ரீனா கைப், மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்கு கோரிக்கை அனுப்பிய இந்த அமைப்பு, அப்படி மீறி அவர்கள் செல்வார்களேயானால் தென்னிந்தியாவில் எங்கும் இவர்கள் நடித்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.
சமூக பிரக்ஞையே இல்லாத இந்த ரத்த காட்டேரிகளுக்கு இந்த கூக்குரல் காதில் விழுமா என்பதுதான் இன்னும் புரியாத புதிராக இருக்கிறது!யுத்த வெற்றி கொண்டாட்டமானது இழுபறி நிலையில் காணப்படுகின்ற போதும் அரசாங்கம் வன்னி மக்களை மீள்குடியேற்றுவதில் முனைப்பாக இருக்கிறது. ஆனால் அதுவும் இயற்கையின் சீற்றத்தால் என்னவோ மேற்கூறிய நிலைதான். பகுதி பகுதியாக மக்கள் மீள்குடியேற்றப்பட்டு கொண்டு இருக்கும் வேளை வவுனியா அகதி முகாம்களிலும் நலன்புரி முகாம்களிலும் மக்கள் தொடர்ந்தும் இன்னல் படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க உயிரை கையில பிடித்து கொண்டு வந்தவையை அதே மாதிரி வெறும் கையோட கொண்டு போய் தள்ளி விட்டுக்கிடக்குது. அதுகள் வாழ்க்கையை பிழைக்கிறதுக்கு கையில தடி தண்டு கூட இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கேக்க… எங்கடை ஆக்கள் தலையில தூக்கி வைச்சு வாக்கு போட்டிச்சினமே அவையள் இவையளை விட கேவலமாக ஒட்டாண்டியாய் போய் இறங்கிச்சினமாம். அதுக்குள்ள சும்மா போகக் கூடாது எண்டு கையில பேப்பரை கொண்டு போச்சினமாம். கொண்டு போன பேப்பரை சும்மா திருப்பி கொண்டு வாறதே அதுக்காகவே ஏதோ கேட்டு கேட்டு எழுதிச்சினமாம். என்னத்தை எழுதினவை என கூட நின்டவைய கேட்டாத்தான் தெரியும்.... இத நான் சொல்லலைப்பா இன்றைய பத்திரிகைகள் சொல்லுது.

எழுதின பேப்பரை இங்கை கொண்டு வந்து கத்துறதுக்கு இடையில ஜாதிகஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் கத்துறார் “81களில் யாழில் வாழ்ந்த 21000 சிங்களவர்கள் மீண்டும் அங்கு குடியேற்ற வேண்டுமாம் அது மட்டும் இல்லாமல் அவை பல்கி பெருகி 41000 என இவர் கணக்கு போட்டுட்டார்.”

அங்கையிருந்து குற்றுயிரும் கொலையுயிருமா வந்த சனத்தை இன்னும் கரை சேர்க்க இல்லையாம் அதுக்குள்ள…..

முதலில இடம் பெயர்ந்த சனத்தை ஒழுங்குபடுத்தி விடட்டும் அதுக்கு பிறகு சிங்கள மக்களை குடியேற்றுவதோ இல்லை என ஆற அமர இருந்து யோசிக்கலாம்.

இங்க பாருங்கோ அடுத்த செய்தி எஞ்சியுள்ள வன்னி மக்கள் எப்போது மீள்குடியேற்றப்படுவார் என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.தே.மு குறிப்பிட்டுள்ளது. இந்த பாவப்பட்ட சனத்தை எப்ப மீள்குடியேற்றி அவர்களுடைய பழைய நிலைக்கு கொண்டு வரப்போகிறார்கள்?

எல்லாம் அடிபட்டுபோய் வந்த மக்களுக்கு இயற்கையும் ஒத்துழைக்காத போதும் எவ்வளவு கெதிய மீள்குடியேற்ற வேண்டுமோ அவ்வளவு கெதியா மீள்குடியேற்ற முயற்சிக்காமல்…..

இங்க போட்டி என்னென்டா பட்டவை என்ன பாடும் படட்டும் எங்கட ஆட்களை கொண்டே எல்லாம் சிறப்பு மிக்க யாழ்ப்பாணத்தில் சொந்தகாரர் வர்றதுக்கிடையில அங்கை கொண்டுபோய் இருத்த வேணுமாம். ஏனென்றால் அவை 81 ஆம் ஆண்டில இருந்து உருத்துக்காரராம். பிறந்ததில இருந்து தவண்ட மண்காரர் நாலுதடி கொட்டிலுக்கு சொந்தகாரராம் அதுவும் சொந்த இடத்திலை இல்லையாம். இதுதான்போல இப்பத்தைய உலகநியதியாம். வெள்ள அனர்த்தத்திற்கு அரசு உடனடியாக 80 கோடி ரூபாவை ஒதுக்கி உள்ளது. முதல்ல மீளகுடியேற்றத் திட்டத்துக்கு ஒதுக்கின காசு இந்த வெள்ளத்தோட அடிச்சு கொண்டு போடும். இதுதானே எங்கட அரசின்ர மந்திரிக தந்திரிக உதவித்திட்ட கொள்கை.

அப்ப சுனாமிக்கான நிதி ?
பிறகு மீள்குடியேற்ற நிதி ?
இப்ப வெள்ள நிவாரண நிதி…
நாளைக்கு ஏதோ ஒன்னு இலங்கைய தேடி வரும். பிரச்சினை இல்லை

என்ன நிதி வந்தாலும் கீழை கிடக்கிறவன் எப்பவும் கீழதான் மேல நிக்கிறவனுக்கு நல்லவாசி இடையில நிக்கிறவனுக்கு ஒன்னுமில்ல. அந்த திரிசங்க நிலையில் தான் தமிழர்கள்……