twitter

ஏங்க சிரிப்பா இருக்கா… உண்மைங்க… யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டம் கிடைத்த அனைவரும் சொல்லிக் கொண்ட வசனம் இது…

வடக்குக் கிழக்கை பொறுத்த மட்டில் கம்பஸ் கிடைக்கிறது அவ்வளவு கொடுமையா?... கம்பஸ் கிடைக்காதவர்களெல்லாம் தங்கள் வழிகளில் முன்னேறி இன்று உயரத்தில் இருக்கும் போது, கம்பஸ் கிடைத்த இறுமாப்பை எங்கு காட்டுவது… காத்திருந்தது தான் மிச்சம். துன் மகனை படிக்க வைத்து கம்பஸ் அனுப்பிய தந்தை மூன்று வருட கால தாமதத்தால் மகளின் முழுமையை பார்க்க முதல் இறந்த சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றது. இனி பட்டம் கிடைத்தென்ன, சந்தோஷப்பட அப்பாவா இருக்கிறார்… என சொல்லிய மாணவர்கள் எத்தனை பேர்.

எனக்கு கம்பஸ் என்றாலே பிடிக்காது ஏனெனில் நான் ஏயலில் எடுத்த றிசல்ட் அப்படி.. அதனால என்னை கம்பஸிற்குள்ளே விடமாட்டன் என்றுட்டான்கள். அதுதான் பிடிக்கல நானும் ஒரு காலத்தில கம்பஸ் போகனும் என்ற ஆசையிலதானுங்க இருந்தனான். என்ன செய்வது….?
ஆனால் கடந்த காலங்களில் கம்பஸ் படிப்பது வீண் என்பது என்னுடைய வாதம். கம்பஸில படிக்கிற காலத்திற்கு தனியார் உயர்கல்வியை மேற் கொணடால் காலமும் மிச்சமானது. அதேநேரம் நடைமுறையுடன் சேர்ந்த கல்வியை கற்று முடித்து விடலாம். படிக்கும்போதே கற்ற கல்வியுடனான வேலையையும் அனுபவத்துடனும் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.

யாழ் பல்கலைகழகத்தை பாருங்களேன் நான்கு வருடத்திற்கு பிறகுதான் பட்டமளிப்பு விழா நடக்குது. பல்கலை கழகம் படித்த மாணவர்கட்கு இது எவ்வளவு பாரதூரமான தாக்கியுள்ள ஒரு விடயம். சில ஆயுதக்குழுக்களின் அழுத்தம் காரணமாகவே (அச்சுறுத்தல்) இப்பட்டமளிப்பு விழா இடைநிறுத்தப்பட்டது. நாடு சுமூகமான நிலை அடைந்ததால் (அப்பிடீன்னு எல்லோரும் சொல்றான்கள்) பட்டமளிப்பு விழா நடைnறுகிறது என்கிறார்கள்.
ஐந்து வருட காலம் நடைபெறாத இந்த பட்டமளிப்பு விழா தொடர்ந்து மூன்றுநாட்கள் நடைபெற்றது. இவ்வளவு காலமும் இப் பட்டமளிப்பு விழாவை எதிர்பார்த்த மாணவர்கட்கு எவ்வளவு சந்தோஷத்தை அளித்துள்ளது இந்த பட்டமளிப்பு விழா.

சுமார் மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தி இரண்டு (3972) மாணவர்கட்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது. இதில் வர்த்தகம், கலைப்பிரிவு மாணவர்கள் அதிகளவாக பட்டம் பெற்று வெளியேறினார்கள் (முடிந்தது சனியன்)
பிரிந்து இருந்த நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இருந்தது.; சொன்ன காதல்கள், சொல்லாத காதல், சொல்லி…. விட்ட காதல்கள்… எல்லாம் அவர்களை சந்திக்கிற ஒரு கணம் மீள நினைத்து பார்க்கும் சந்தர்ப்பம். எத்தனையோ பேர் தங்கள் கணவன், மனைவி, பிள்ளை குட்டிகள் சூழ தமது நண்பர்களை அறிமுகப்படுத்தி பட்டத்தினை ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாக அமைகிறது. இதற்குள் எவ்வளவோ நடந்து விட்டது.. என்னவெல்லாம் முடிந்து விட்டது.

இப்பட்டமளிப்பு விழா பிந்தியதால் எத்தனையோ பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் இதற்கான பதில் சொல்ல யார் உள்ளார்கள்………? வேலைக்காகவே பல பட்டதாரி மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளார்கள். இதனால் பட்டதாரி மாணவர்கள் பலரை இலங்கை இழந்து உள்ளது. பட்டங்களை வழங்காது இலங்கையில் இருந்து சாதிக்க வேண்டிய புத்திசாலிகளை வெளியேற வைத்துள்ளார்கள்.

அது மட்டும் அல்லாது எத்தனையோ மாணவர்கள் கஸ்ரப்பட்டு கல்வி கற்றும் பட்டங்களை பெறாது போரால் இறந்துள்ளனர். இறந்த மாணவர்களது ஆசைகள் அனைத்தும் நிராசையாக மாறியுள்ளது. இவை அனைத்தும் ஒரு தடைவ சிந்தித்து பார்க்க வேண்டிய ஒரு விடயம்.

பட்டமளிப்பு விழா பிந்துவதால் எத்தனையோ வேலைகளுக்கு அப்பொயின்ட் மென்ட் குடுக்காமல் கிடக்குது. இதனால் வேலை வாய்ப்புக்கள் இருந்தும் இதனையே சாட்டாகக் காட்டி தட்டிக்கழிக்கிறார்கள். இதுவும் வேலையில்லா வீதத்தை தூண்டுகிது எனலாம். உரியவர்கள் கவனமெடுத்தால் போதும். இனிவரும் காலங்களில் சாக்கடை அரசியலுக்கு மாணவர்களைப் பயன்படுத்தாதீர்கள்…

கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி தலைநகரில் ஒரு வலைப்பதிவர் சிறு சந்திப்பு நிகழ்ந்ததை ‘அகசியம்’ மூலம் அறிந்தேன். பார்க்க ‘தலைநகரில் பதிவர்கள் சந்திப்பு – பகீர் ரிப்போர்ட்’

நேற்று முன்தினமும் (மார்ச் 21) மீண்டும் கொழும்பில் பதிவர்கள் எல்லோரும் கதைப்பதற்காக ஒன்று கூடியுள்ளார்கள் என்பதே அதே ‘அகசியம்’ இன் மூலம் அறிந்தேன். பார்க்க ‘ப்ளீஸ் என்னைக்கற்பழிச்சிடாதீங்க – காங்கோன் புலம்பல்’

மாதம் ஒரு முறை சந்திப்பீர்களா? இனி எப்போது? அடுத்த மாதம் 21ஆம் திகதியா? எங்கே? யார் தலைநகர் வருகின்றார்? யார் ஏற்பாடு செய்கிறார்கள்? தயவுசெய்து காற்றுவாக்கிலாவது தெரியப்படுத்தவும். இது பங்குபற்றுபவர்களுக்கு நல்லது என நினைக்கின்றேன்.

காரணம் உங்கள் மீது பழி வந்துவிடாமல் இருப்பதற்காகத் தான். சந்திப்பு பற்றியும், நோக்கம் பற்றியும் முழுமையாக கேட்டறிந்து கொண்டேன். இவ்வாறான சந்திப்புக்கள் ஆரோக்கியமானவை. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்ப்பதிவர்கள் தங்களிடையே நட்புறவை வளர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் ‘பதிவர்’ என்ற சொல்லினைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவேண்டும். அன்று ஹோல்பேஸில் சந்தித்தார்களே! அந்த நட்பு எதனால் உருவானது? யோசித்து பார்க்க வேண்டும். எனவே ‘பதிவர்கள் சந்திப்பு’ என்ற பெயரில் மீண்டும் மீண்டும் சந்திக்கும் போது அந்த மாவட்ட பதிவர்களுக்காவது குறைந்த பட்சம் தெரியப்படுத்துங்கள்.

ஏதோவொரு வகையில் எல்லாப்பதிவர்களும் ஒரு வலையமைப்பில் இருக்கிறார்கள். எனவே தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு கூறுவார்கள். அதற்கு ஏற்றவகையில் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்யுங்கள். தாய்க் குலங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். கூகிள் குழுமத்தினூடாக இனி அறியத்தருவதாக ஆலோசித்ததாகக் கேள்விப்பட்டேன்.

பதிவர் ஹிஷாம் குழுமத்தில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அதே போல் வரோவின் மூஞ்சிப்புத்தகத்தில் இன்னொருவர் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கும் கலந்து கொண்ட சிங்கங்கள் பதிலளியுங்கள்.


(சாரி வரோ, உன் தலை பல இடத்தில உருளுதா? என்ன செய்ய.. தெரிந்தவர்களை மேற்கோள் காட்டினால் நான் தப்பித்துக்கொள்ளலாம்.)

பி.கு : இந்தப்பதிவை குற்றச்சாட்டாக யாரும் எடுக்க வேண்டாம், சிறிய ஆலோசனை மட்டுமே!நூலகத்தில் இருந்து படிப்பது எப்படி? என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும்தானே! நான் படிக்கிற காலத்திலை எல்லாம் எனக்கு தெரிஞ்ச நூலகம் என்றால் அது பள்ளிக்கூட நூலகம் தானுங்க…

ஊருகளில் எல்லாம் நூலகம் இருக்குது. ஆனால் அங்கை எல்லாம் போய் படிப்பது இல்லை. ஏனென்னறால் அங்கு போனால் பொடியல்மார் சேர்ந்து ஒரே கும்மாளம் போடுவது. கத்திக்கொண்டு கிரிக்கட் அடிப்பது, கிரிக்கட் மட்ச் பார்ப்பது… என ஏகப்பட்ட பிரச்சினையள். பொம்பிளைப் பிள்ளையல் அந்தப்பக்கம் படிக்கிறதிற்கு நினைச்சு கூட பார்க்க மாட்டுதுகள். அதுதான் அங்க நிலமை.
ஆனால் கொழும்பில அப்படி எல்லாம் இல்லை. ஸ்ரடி லீவு என்றதும் பிள்ளையல் படிக்குதுகளோ இல்லையோ லைபிறரிக்கு ஒரு கட்டு புத்தகத்தையும் கொண்டு போயிடுங்கள்.

அதிலையும் ஸ்கூல் பிள்ளைகள் இருக்குதுகளே கடவுளே! தாங்க முடியாது… ஏனென்றுதானே கேட்கிறீர்கள்?

வெள்ளவத்தையில ஒரு லைபிறரி இருக்குது. அங்கை போய் படிப்பம் என்று முடிவு எடுத்தன். வீட்டில வெளிநாட்டில இருந்து ஆக்கள் வந்து இருக்கினம். வீட்டில நிறைய சனம் வேற வீட்டில படிக்க முடியாது. கத்திக் கொண்டு இருக்குங்கள். லைபிறரிதான் சரியான வழி எங்களுக்கு என கிழம்பினேன். அங்கை போனபின்பு தான் விளையாட்டே…

ஆனால் அந்த லைபிறரி சரியான கட்டுப்பாடு. ஆனால் அதையும் மீறி பள்ளிக்கூட பிள்ளைகளின் அட்டகாசம் இருக்குதே அதுதான் தாங்க முடியல……


பள்ளிக்கூட பிள்ளைகள் சின்ன பிள்ளைகள்தானே நாங்கள் அவையை விட வயசில ஏழெட்டு வயசு கூடத்தானே……
அவர்கள் கதைப்பதும், நெளிப்பதும், கண்ணைக்காட்டுவதும், செருப்பை தேய்ப்பதும், வேணும் என்றே மேசையை ஆட்டுவதும், அவையின் வகுப்பு பொடியங்கள் பெட்டையளுடன் கொழுவுப்படுவதும், பேனையல் பென்சில்களால் தூக்கி எறிவதும்… என்னைப்போல கொஞ்சம் பெரிய ஆக்கள் நிமிர்ந்து பார்த்தால் சொறி சொல்வது என்று, இப்படியே அன்றைய நாள் போச்சுது.

பத்தாக்குறைக்கு என்னை தட்டி எக்ஸ்கியூஸ்மீ பக்கத்திலை இருக்கிற என்டை பிரெண்டை தட்டி விடுங்கோ…… எனக்கு கடுப்புத்தான் ஏறிச்சுது…… இதுமட்டுமில்லை கண்காணிப்பாளர் வந்தால் நல்ல பிள்ளை மாதிரி இருப்பது எப்படி இருக்கும்…?

லைபிறரியில படிக்க போனால் நாம படிக்கிறமோ இல்லையோ மற்றவையை டிஸ்ரப் பண்ணக்கூடாது. அதிலும் வயது கூடினவை சீரியசா படிப்பினம.; அது மட்டும் அல்ல அவையின்ர படிப்பு பெரிய பெரிய படிப்பு. (எனக்கே தெரியாது அது என்ன என்ன படிப்பு என்று)

எக்ஸாம் என்றால் ஒரு முறைதான் வரும். (அடுத்த முறையும் வரும்) ஆனால் முதல் தடவை எழுதுற மாதிரி வராது அது என்ர அனுபவம். சின்னப்பிள்ளைகளுக்கு இது எல்லாம் விளங்காது.

ஏனெனில் அதுகளின் வயது அப்படி…… எதைக் கண்டாலும் வெருளுகின்ற வயது அதுகளுக்கு……
ஏதோ தங்களைத்தான் எல்லோரும் பார்க்கின்றார்கள் என்ற நினைப்பு வேற……… ஆனால் யாரும் அவர்களை பார்க்க மாட்டார்கள். ‘இதுகள் வேற தலையிடி..’ என்று மனசில சொல்லுவினம்.
ஏனெனின் அந்த வயதை கடந்துதான் நாங்களும் வந்தோம்…………

லைபிறரி என்பது சொறிச்சேட்டை விடுகிற இடமல்ல. அங்கு சென்றால் அனுபவித்து ரசித்து விளங்கி கல்வி கற்கின்ற இடம். இதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தலைநகரில் றோட்டு, பார்க்கு, பீச்சு, தியேட்டர் எண்டு எல்லா இடத்திலயும் தானே டாவடிக்கிறீங்க. இதில லைப்றரியையாவது விட்டு வையுங்களன். அங்கேயும் கடலையா?...

“கற்றது கை மண்ணளவு…” எண்டுறது மாதிரி கிரிக்கட்ல எனக்குத் தெரிஞ்சதும் ஒரு பிடி தான். ஆனாலும் றொம்ப விருப்பம்… பைத்தியம் எண்டெல்லாம் இல்லை. எங்கட நாடு எண்டதாலயோ என்னவோ தெரியல இலங்கை விளையாடினா பிடிக்கும்… அதுக்காக இலங்கை வீரர்களைத் தான் பிடிக்கும் எண்டில்லை.

நண்பர் ‘அகசியம்’ வரோதயன் என்னைத் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். “கிரிக்கட் காய்ச்சல் - தொடர்பதிவு” கிரிக்கட் பிடித்த பெண் ரசிகை எண்டெல்லாம் பில்ட்அப் வேற… சரி அவருக்காகவாவது ஏதாவது எழுதத் தானே வேணும்.. தொடர்பதிவில் நான் அழைத்தால் இன்னும் இருவராவது தொடர்வார்கள். இது ஒரு சுவாரசியமான விளையாட்டும் தானே!

சரி ஆரம்பிப்போமா?

விதி முறைகள்:

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

மிக மிக அண்மைக்கால வீரர்களாகவும், எல்லோருக்கும் பொதுவானவர்களாகவும் தான் இருப்பார்கள்.(1) பிடித்த போட்டிவகை : ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20

(2) பிடிக்காத போட்டிவகை : டெஸ்ட் போட்டிகள்

(3) பிடித்த அணி : இலங்கை

(4) பிடிக்காத அணி : எதுவுமில்லை

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர் : மகேந்திரசிங் தோணி

(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்; : வி.வி.எஸ் லக்ஸ்மன்

(7) பிடித்த விக்கட் காப்பாளர் : குமார் சங்கக்காரா

(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : கம்ரான் அக்மல்

(9) பிடித்த களத்தடுப்பாளர் : யுவராஜ் சிங்

(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : நுவன் சொய்ஸா

(11) பிடித்த வேகப்பந்து வீச்சாளர் : சமிந்த வாஸ்

(12) பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் : அன்ரு நெல்

(13) பிடித்த ஸ்பின்னர் : முரளி

(16) பிடிக்காத ஸ்பின்னர் : அனில் கும்ளே

(17) பிடித்த ஆடுகளங்கள் : லண்டன் லோட்ஸ்

(18) பிடிக்காத ஆடுகளங்கள் : எதுவுமில்லை

(19) பிடித்த சகலதுறை வீரர் : ஜக் கலீஸ்

(20) பிடிக்காத சகலதுறை வீரர் : இர்பான் பதான்

(21) பிடித்த அணித் தலைவர் : சனத் ஜெயசூரிய

(22) பிடிக்காத அணித்தலைவர் : சவ்ரவ் கங்குலி

(23) கனவான் வீரர்கள் : சச்சின் டெண்டுல்கர்

(24) பிடித்த வர்ணனையாளர் : டோனி கிரேக்

(25) பிடிக்காத வர்ணனையாளர் : ரசல் ஆனல்ட்

(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் : ரொம் மூடி

(27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் புச்சனன் (சரியா? அவுஸ்ரேலியா OLD கோச்)

(28) பிடித்த போட்டி : கிரிக்கட்டே பிடிக்கும், இதிலென்ன..

(29) பிடித்த வளரும் வீரர் : சஜித பீரிஸ் (ரீமுக்கு இன்னும் வரலயாக்கும்)

(30) பிடிக்காத வளரும் வீரர் : பெரிசா தெரியல.

வரோவின் ஐடியாவுடன் நான் தொடர அழைப்பவர்கள்…

1. நா கௌபோய் மது (வலைப்பதிவு - இங்காலிப்பக்கமே ஆளைக்காணல)
2. வியாபஹிஷைலஜா (வந்து வந்து போறா, எதிரிகள் கூடீட்டாங்க பொல)
சில விடயங்களை தலைவிதி என்று தூக்கி ஓரமாகப் போட்டு விட்டுப்போகலாம். சில விடயங்கள் மனதை அரித்தெடுக்கும். இயற்கை சமனிலை என்பது இறைவனால் எப்படியாவது பேணப்பட்டுக் கொண்டு தான் இருக்கும். அமைதியாக இருக்கும் நாடுகள் (போர் அல்லாமல்) இயற்கையால் அழிவுறுவதும், அமைதியற்ற நாடுகள் போரால் அழிவுறுவதனையும் நாங்கள் கண்கூடாகப் பார்க்கின்றோம். 2002 ஆம் ஆண்டு சமாதானத்தால் கொஞ்சம் தலைநிமிர்ந்த போது கூட நாங்கள் சுனாமியால் சிதைக்கப்பட்டோம். இதெல்லாம் எமக்கு ஒன்றைப் புலப்படுத்துகின்றது. “நமக்கு மேல் ஒருவன் இருக்கின்றான். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்”.

இனக்கலவரம், மதக்கலவரம் என்பது மிக மோசமான ஒன்றாகும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இடையிடையே நடந்தாலும், இலங்கையில் 2 தடவை பாரிய இனக்கலவரங்களும், சில சிறிய மதக் கலவரங்களும் இடம்பெற்றன. இந்தியாவில் இடம்பெற்ற மும்பாய் மதக்கலவரத்தையும் மறக்க நாங்கள் முடியாது. கடந்த ஆண்டு சீனாவில் இடம் பெற்ற கலவரத்தில் கூட பலர் பலியாகினர். இந்த நிலையில் நைஜீரியாவில் புதிதாக ஒரு கலவரம் ஆரம்பமாகியுள்ளது.
நைஜீரியாவில் நடந்த மோதலில் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு 500 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் ஜோஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப்பகுதி மலைப்பாங்கான பகுதி ஆகும். இதன் அருகில் உள்ள அதாவது நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் பெரும் பகை இருந்து வருகிறது, பல ஆண்டுகளாக இந்த பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜோஸ் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒரு வன்முறைக்கும்பல் கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டித்தள்ளியது. பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் இறந்தவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

இது குறித்து நைஜீரிய அதிபர் ஜேனாத்தான் கூறுகையில் இந்த சம்பவம் நடந்த பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் கடமையில் உள்ளனர். இறந்தவர்கள் முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை. 300க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என கூறினார். ஆனாலும் உலக அளவில் இன, கோஷ்டி மோதலில் 500 பேர் வரை இறந்திருப்பது உலக அளவில் இது பெரும் கவலை தரும் செய்தி ஆகும். ஏற்கனவே நைஜீரியாவில் பல மோதல்கள் நடந்துள்ளது. இது போன்ற கொடூர மோதல் நிகழ்ந்ததில்லை என அங்குள்ள உள்ளூர் வாசி தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகையில் இரவில் வந்த கும்பல் கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டனர். பின்னர் ஒவ்வொரு வீடாக நுழைந்து கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டினர். வீதிகளில் பிணங்களாக கிடக்கிறது இவ்வாறு கூறினார்.

இனம், மதங்களுக்கிடையே சச்சரவுகள், மோதல்கள் வருவது இயல்பு. ஆனால் பொறுப்பிலுள்ளவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து இச்சம்பவங்களை நிறுத்த வேண்டும்.