twitter

















ஏங்க சிரிப்பா இருக்கா… உண்மைங்க… யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டம் கிடைத்த அனைவரும் சொல்லிக் கொண்ட வசனம் இது…

வடக்குக் கிழக்கை பொறுத்த மட்டில் கம்பஸ் கிடைக்கிறது அவ்வளவு கொடுமையா?... கம்பஸ் கிடைக்காதவர்களெல்லாம் தங்கள் வழிகளில் முன்னேறி இன்று உயரத்தில் இருக்கும் போது, கம்பஸ் கிடைத்த இறுமாப்பை எங்கு காட்டுவது… காத்திருந்தது தான் மிச்சம். துன் மகனை படிக்க வைத்து கம்பஸ் அனுப்பிய தந்தை மூன்று வருட கால தாமதத்தால் மகளின் முழுமையை பார்க்க முதல் இறந்த சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றது. இனி பட்டம் கிடைத்தென்ன, சந்தோஷப்பட அப்பாவா இருக்கிறார்… என சொல்லிய மாணவர்கள் எத்தனை பேர்.

எனக்கு கம்பஸ் என்றாலே பிடிக்காது ஏனெனில் நான் ஏயலில் எடுத்த றிசல்ட் அப்படி.. அதனால என்னை கம்பஸிற்குள்ளே விடமாட்டன் என்றுட்டான்கள். அதுதான் பிடிக்கல நானும் ஒரு காலத்தில கம்பஸ் போகனும் என்ற ஆசையிலதானுங்க இருந்தனான். என்ன செய்வது….?
















ஆனால் கடந்த காலங்களில் கம்பஸ் படிப்பது வீண் என்பது என்னுடைய வாதம். கம்பஸில படிக்கிற காலத்திற்கு தனியார் உயர்கல்வியை மேற் கொணடால் காலமும் மிச்சமானது. அதேநேரம் நடைமுறையுடன் சேர்ந்த கல்வியை கற்று முடித்து விடலாம். படிக்கும்போதே கற்ற கல்வியுடனான வேலையையும் அனுபவத்துடனும் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.

யாழ் பல்கலைகழகத்தை பாருங்களேன் நான்கு வருடத்திற்கு பிறகுதான் பட்டமளிப்பு விழா நடக்குது. பல்கலை கழகம் படித்த மாணவர்கட்கு இது எவ்வளவு பாரதூரமான தாக்கியுள்ள ஒரு விடயம். சில ஆயுதக்குழுக்களின் அழுத்தம் காரணமாகவே (அச்சுறுத்தல்) இப்பட்டமளிப்பு விழா இடைநிறுத்தப்பட்டது. நாடு சுமூகமான நிலை அடைந்ததால் (அப்பிடீன்னு எல்லோரும் சொல்றான்கள்) பட்டமளிப்பு விழா நடைnறுகிறது என்கிறார்கள்.
ஐந்து வருட காலம் நடைபெறாத இந்த பட்டமளிப்பு விழா தொடர்ந்து மூன்றுநாட்கள் நடைபெற்றது. இவ்வளவு காலமும் இப் பட்டமளிப்பு விழாவை எதிர்பார்த்த மாணவர்கட்கு எவ்வளவு சந்தோஷத்தை அளித்துள்ளது இந்த பட்டமளிப்பு விழா.

சுமார் மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தி இரண்டு (3972) மாணவர்கட்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது. இதில் வர்த்தகம், கலைப்பிரிவு மாணவர்கள் அதிகளவாக பட்டம் பெற்று வெளியேறினார்கள் (முடிந்தது சனியன்)
















பிரிந்து இருந்த நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இருந்தது.; சொன்ன காதல்கள், சொல்லாத காதல், சொல்லி…. விட்ட காதல்கள்… எல்லாம் அவர்களை சந்திக்கிற ஒரு கணம் மீள நினைத்து பார்க்கும் சந்தர்ப்பம். எத்தனையோ பேர் தங்கள் கணவன், மனைவி, பிள்ளை குட்டிகள் சூழ தமது நண்பர்களை அறிமுகப்படுத்தி பட்டத்தினை ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாக அமைகிறது. இதற்குள் எவ்வளவோ நடந்து விட்டது.. என்னவெல்லாம் முடிந்து விட்டது.

இப்பட்டமளிப்பு விழா பிந்தியதால் எத்தனையோ பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் இதற்கான பதில் சொல்ல யார் உள்ளார்கள்………? வேலைக்காகவே பல பட்டதாரி மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளார்கள். இதனால் பட்டதாரி மாணவர்கள் பலரை இலங்கை இழந்து உள்ளது. பட்டங்களை வழங்காது இலங்கையில் இருந்து சாதிக்க வேண்டிய புத்திசாலிகளை வெளியேற வைத்துள்ளார்கள்.

அது மட்டும் அல்லாது எத்தனையோ மாணவர்கள் கஸ்ரப்பட்டு கல்வி கற்றும் பட்டங்களை பெறாது போரால் இறந்துள்ளனர். இறந்த மாணவர்களது ஆசைகள் அனைத்தும் நிராசையாக மாறியுள்ளது. இவை அனைத்தும் ஒரு தடைவ சிந்தித்து பார்க்க வேண்டிய ஒரு விடயம்.

பட்டமளிப்பு விழா பிந்துவதால் எத்தனையோ வேலைகளுக்கு அப்பொயின்ட் மென்ட் குடுக்காமல் கிடக்குது. இதனால் வேலை வாய்ப்புக்கள் இருந்தும் இதனையே சாட்டாகக் காட்டி தட்டிக்கழிக்கிறார்கள். இதுவும் வேலையில்லா வீதத்தை தூண்டுகிது எனலாம். உரியவர்கள் கவனமெடுத்தால் போதும். இனிவரும் காலங்களில் சாக்கடை அரசியலுக்கு மாணவர்களைப் பயன்படுத்தாதீர்கள்…

7 comments:

  1. உங்களுக்கும் பட்டம் கிடைச்சுதோ!

  1. ஏங்க சிரிப்பா இருக்கா… உண்மைங்க… யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டம் கிடைத்த அனைவரும் சொல்லிக் கொண்ட வசனம் இது…//

    அட கடவுளே! என்ன கொடுமை சார் இது ?

    //சில ஆயுதக்குழுக்களின் அழுத்தம் காரணமாகவே (அச்சுறுத்தல்) இப்பட்டமளிப்பு விழா இடைநிறுத்தப்பட்டது.//

    நிறுத்தினதால என்ன கிடைச்சுது ?

  1. ///////கம்பஸில படிக்கிற காலத்திற்கு தனியார் உயர்கல்வியை மேற் கொணடால் காலமும் மிச்சமானது. அதேநேரம் நடைமுறையுடன் சேர்ந்த கல்வியை கற்று முடித்து விடலாம். படிக்கும்போதே கற்ற கல்வியுடனான வேலையையும் அனுபவத்துடனும் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்./////////////

    அதுக்குத்தான் நானும் ஆசைப்பட்டு படிக்கிறன் முடிவு என்னவோ தெரியாது

  1. இதில் வர்த்தகம், கலைப்பிரிவு மாணவர்கள் அதிகளவாக பட்டம் பெற்று வெளியேறினார்கள்

    அதிகளவான மாணவர்கள் மேற்படிப்பு என்ற பெயரில் வேலைக்காக வெளிநாடு சென்றது வர்த்தகம் கலைபிரிவு மாணவர்கள்தான் .............

  1. அட உண்மையாகவே கம்பஸ் பிள்ளையல் பாவம்தான் என.......

  1. பட்டமளிப்பு விழா பிந்துவதால் எத்தனையோ வேலைகளுக்கு அப்பொயின்ட் மென்ட் குடுக்காமல் கிடக்குது. இதனால் வேலை வாய்ப்புக்கள் இருந்தும் இதனையே சாட்டாகக் காட்டி தட்டிக்கழிக்கிறார்கள். இதுவும் வேலையில்லா வீதத்தை தூண்டுகிது எனலாம். உரியவர்கள் கவனமெடுத்தால் போதும். இனிவரும் காலங்களில் சாக்கடை அரசியலுக்கு மாணவர்களைப் பயன்படுத்தாதீர்கள்…//

    பட்டமளிப்பு பிந்துவதால் வேலை கிடைப்பது பிந்துவது என்பது பொய். பட்டம் கிடைக்கா விட்டாலும் அதற்குரிய அத்தாட்சி (statement ) போதும் இது ஒருவர் இறுதியாண்டை முடித்தவுடனேயே பெற்றுக் கொள்ளலாம்.

  1. http://shayan2614.blogspot.com/2010/04/blog-post_03.html

Post a Comment