twitter













கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி தலைநகரில் ஒரு வலைப்பதிவர் சிறு சந்திப்பு நிகழ்ந்ததை ‘அகசியம்’ மூலம் அறிந்தேன். பார்க்க ‘தலைநகரில் பதிவர்கள் சந்திப்பு – பகீர் ரிப்போர்ட்’

நேற்று முன்தினமும் (மார்ச் 21) மீண்டும் கொழும்பில் பதிவர்கள் எல்லோரும் கதைப்பதற்காக ஒன்று கூடியுள்ளார்கள் என்பதே அதே ‘அகசியம்’ இன் மூலம் அறிந்தேன். பார்க்க ‘ப்ளீஸ் என்னைக்கற்பழிச்சிடாதீங்க – காங்கோன் புலம்பல்’

மாதம் ஒரு முறை சந்திப்பீர்களா? இனி எப்போது? அடுத்த மாதம் 21ஆம் திகதியா? எங்கே? யார் தலைநகர் வருகின்றார்? யார் ஏற்பாடு செய்கிறார்கள்? தயவுசெய்து காற்றுவாக்கிலாவது தெரியப்படுத்தவும். இது பங்குபற்றுபவர்களுக்கு நல்லது என நினைக்கின்றேன்.

காரணம் உங்கள் மீது பழி வந்துவிடாமல் இருப்பதற்காகத் தான். சந்திப்பு பற்றியும், நோக்கம் பற்றியும் முழுமையாக கேட்டறிந்து கொண்டேன். இவ்வாறான சந்திப்புக்கள் ஆரோக்கியமானவை. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்ப்பதிவர்கள் தங்களிடையே நட்புறவை வளர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் ‘பதிவர்’ என்ற சொல்லினைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவேண்டும். அன்று ஹோல்பேஸில் சந்தித்தார்களே! அந்த நட்பு எதனால் உருவானது? யோசித்து பார்க்க வேண்டும். எனவே ‘பதிவர்கள் சந்திப்பு’ என்ற பெயரில் மீண்டும் மீண்டும் சந்திக்கும் போது அந்த மாவட்ட பதிவர்களுக்காவது குறைந்த பட்சம் தெரியப்படுத்துங்கள்.

ஏதோவொரு வகையில் எல்லாப்பதிவர்களும் ஒரு வலையமைப்பில் இருக்கிறார்கள். எனவே தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு கூறுவார்கள். அதற்கு ஏற்றவகையில் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்யுங்கள். தாய்க் குலங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். கூகிள் குழுமத்தினூடாக இனி அறியத்தருவதாக ஆலோசித்ததாகக் கேள்விப்பட்டேன்.

பதிவர் ஹிஷாம் குழுமத்தில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அதே போல் வரோவின் மூஞ்சிப்புத்தகத்தில் இன்னொருவர் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கும் கலந்து கொண்ட சிங்கங்கள் பதிலளியுங்கள்.






























(சாரி வரோ, உன் தலை பல இடத்தில உருளுதா? என்ன செய்ய.. தெரிந்தவர்களை மேற்கோள் காட்டினால் நான் தப்பித்துக்கொள்ளலாம்.)

பி.கு : இந்தப்பதிவை குற்றச்சாட்டாக யாரும் எடுக்க வேண்டாம், சிறிய ஆலோசனை மட்டுமே!


16 comments:

  1. என் தமிலிஷ் கடவுச்சொல் மறந்து விட்டதால். வரோ என்பதிவை அங்கு இணைப்பு கொடுத்துள்ளார்.

  1. //ஏதோவொரு வகையில் எல்லாப்பதிவர்களும் ஒரு வலையமைப்பில் இருக்கிறார்கள். எனவே தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு கூறுவார்கள். அதற்கு ஏற்றவகையில் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்யுங்கள். தாய்க் குலங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். கூகிள் குழுமத்தினூடாக இனி அறியத்தருவதாக ஆலோசித்ததாகக் கேள்விப்பட்டேன்//

    வழிமொழிகின்றேன்... கடந்த கால தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்...

  1. திடீரென் ஏற்பாடு செய்ததோ என்னவோ குறுகிய வட்டத்தில் முடிந்து விட்டது. உங்களை போல அன்று சந்தித்த எனக்குள்ளும் மனதில் அந்தக்கவலை உண்டு. காரணம் பதிவர்கள் என்று சந்திக்கும் போது நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தால் அதைவிட சந்தோசம் வேறு ஏது. இதை பற்றி அன்றே பேசிவிட்டோம். இனி வரும் காலம் இப்படி நடக்காது நிச்சயம் எல்லோருக்கும் இது பகிரப்படும் என நம்புகின்றோம்.

  1. உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்

    இப்படி மீண்டும் பரவலான அறிவிப்பு இல்லாமல் சந்திப்பு நடந்தால் நாங்கள் கூகுள் ஆண்டவரிடம் வழக்கு தாக்கல் செய்வோம்

  1. இது எப்ப நடந்தது கிப்பூ உங்களுக்கு முதலே தெரியுமா?

  1. தாய் குலத்துக்கு இனிமேல் அழைப்பு விடுவாங்கள் கேட்கவே சந்தோசமாக இருக்கு

  1. ///இந்தப்பதிவை குற்றச்சாட்டாக யாரும் எடுக்க வேண்டாம், சிறிய ஆலோசனை மட்டுமே!////

    யாரும் குற்றச்சாட்டாக எடுக்க மாட்டார்கள் என நினைக்கிறன்
    கிப்பூ கவலை வேண்டாம்

  1. SShathiesh said...
    திடீரென் ஏற்பாடு செய்ததோ என்னவோ குறுகிய வட்டத்தில் முடிந்து விட்டது. இனி வரும் காலம் இப்படி நடக்காது நிச்சயம் எல்லோருக்கும் இது பகிரப்படும் என நம்புகின்றோம்.//

    நிச்சயமாக..

    அடுத்து சதீஸ் இன் பார்ட்டி தான்... அவர் பக்காவா பிளான் பண்ணுவார்.

  1. roshaniee said...
    //ஏதோவொரு வகையில் எல்லாப்பதிவர்களும் ஒரு வலையமைப்பில் இருக்கிறார்கள். எனவே தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு கூறுவார்கள். அதற்கு ஏற்றவகையில் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்யுங்கள். தாய்க் குலங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். கூகிள் குழுமத்தினூடாக இனி அறியத்தருவதாக ஆலோசித்ததாகக் கேள்விப்பட்டேன்//

    வழிமொழிகின்றேன்... கடந்த கால தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்...

    ///திருந்தி விட்டார்களாம் ............///

  1. SShathiesh said...
    திடீரென் ஏற்பாடு செய்ததோ என்னவோ குறுகிய வட்டத்தில் முடிந்து விட்டது. உங்களை போல அன்று சந்தித்த எனக்குள்ளும் மனதில் அந்தக்கவலை உண்டு. காரணம் பதிவர்கள் என்று சந்திக்கும் போது நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தால் அதைவிட சந்தோசம் வேறு ஏது. இதை பற்றி அன்றே பேசிவிட்டோம். இனி வரும் காலம் இப்படி நடக்காது நிச்சயம் எல்லோருக்கும் இது பகிரப்படும் என நம்புகின்றோம்.

    //நன்றி சதீஸ் தம்பி.........
    உங்கட செலவு எனின் கண்ணை மூடி கொண்டு சாப்பிட வாறன்
    கவலை வேணாம் .......//

  1. A.சிவசங்கர் said...
    உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்

    இப்படி மீண்டும் பரவலான அறிவிப்பு இல்லாமல் சந்திப்பு நடந்தால் நாங்கள் கூகுள் ஆண்டவரிடம் வழக்கு தாக்கல் செய்வோம்

    ////கூகுள் ஆண்டவர் ஏத்து கொள்வாரா?/////

  1. lavanja said...
    இது எப்ப நடந்தது கிப்பூ உங்களுக்கு முதலே தெரியுமா?

    ////தெரிந்த மாதிரித்தான் ..............////

  1. colombo said...
    தாய் குலத்துக்கு இனிமேல் அழைப்பு விடுவாங்கள் கேட்கவே சந்தோசமாக இருக்கு

    //////////எனக்கும்தான் ...............//////////

  1. tharshi said...
    ///இந்தப்பதிவை குற்றச்சாட்டாக யாரும் எடுக்க வேண்டாம், சிறிய ஆலோசனை மட்டுமே!////

    யாரும் குற்றச்சாட்டாக எடுக்க மாட்டார்கள் என நினைக்கிறன்
    கிப்பூ கவலை வேண்டாம்

    ///////நான் கவலைப்பட இல்ல ..../////

  1. varothayan said...
    SShathiesh said...
    திடீரென் ஏற்பாடு செய்ததோ என்னவோ குறுகிய வட்டத்தில் முடிந்து விட்டது. இனி வரும் காலம் இப்படி நடக்காது நிச்சயம் எல்லோருக்கும் இது பகிரப்படும் என நம்புகின்றோம்.//

    நிச்சயமாக..
    அடுத்து சதீஸ் இன் பார்ட்டி தான்... அவர் பக்காவா பிளான் பண்ணுவார்.

    //அதற்கு அடுத்தது உங்கடதான் வரோ ............
    பாட்டி ..............ஓக்கேயா?///

  1. http://shayan2614.blogspot.com/2010/01/blog-post.html

Post a Comment