twitter












சில விடயங்களை தலைவிதி என்று தூக்கி ஓரமாகப் போட்டு விட்டுப்போகலாம். சில விடயங்கள் மனதை அரித்தெடுக்கும். இயற்கை சமனிலை என்பது இறைவனால் எப்படியாவது பேணப்பட்டுக் கொண்டு தான் இருக்கும். அமைதியாக இருக்கும் நாடுகள் (போர் அல்லாமல்) இயற்கையால் அழிவுறுவதும், அமைதியற்ற நாடுகள் போரால் அழிவுறுவதனையும் நாங்கள் கண்கூடாகப் பார்க்கின்றோம். 2002 ஆம் ஆண்டு சமாதானத்தால் கொஞ்சம் தலைநிமிர்ந்த போது கூட நாங்கள் சுனாமியால் சிதைக்கப்பட்டோம். இதெல்லாம் எமக்கு ஒன்றைப் புலப்படுத்துகின்றது. “நமக்கு மேல் ஒருவன் இருக்கின்றான். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்”.

இனக்கலவரம், மதக்கலவரம் என்பது மிக மோசமான ஒன்றாகும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இடையிடையே நடந்தாலும், இலங்கையில் 2 தடவை பாரிய இனக்கலவரங்களும், சில சிறிய மதக் கலவரங்களும் இடம்பெற்றன. இந்தியாவில் இடம்பெற்ற மும்பாய் மதக்கலவரத்தையும் மறக்க நாங்கள் முடியாது. கடந்த ஆண்டு சீனாவில் இடம் பெற்ற கலவரத்தில் கூட பலர் பலியாகினர். இந்த நிலையில் நைஜீரியாவில் புதிதாக ஒரு கலவரம் ஆரம்பமாகியுள்ளது.
















நைஜீரியாவில் நடந்த மோதலில் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு 500 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் ஜோஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப்பகுதி மலைப்பாங்கான பகுதி ஆகும். இதன் அருகில் உள்ள அதாவது நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் பெரும் பகை இருந்து வருகிறது, பல ஆண்டுகளாக இந்த பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜோஸ் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒரு வன்முறைக்கும்பல் கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டித்தள்ளியது. பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் இறந்தவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

இது குறித்து நைஜீரிய அதிபர் ஜேனாத்தான் கூறுகையில் இந்த சம்பவம் நடந்த பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் கடமையில் உள்ளனர். இறந்தவர்கள் முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை. 300க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என கூறினார். ஆனாலும் உலக அளவில் இன, கோஷ்டி மோதலில் 500 பேர் வரை இறந்திருப்பது உலக அளவில் இது பெரும் கவலை தரும் செய்தி ஆகும். ஏற்கனவே நைஜீரியாவில் பல மோதல்கள் நடந்துள்ளது. இது போன்ற கொடூர மோதல் நிகழ்ந்ததில்லை என அங்குள்ள உள்ளூர் வாசி தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகையில் இரவில் வந்த கும்பல் கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டனர். பின்னர் ஒவ்வொரு வீடாக நுழைந்து கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டினர். வீதிகளில் பிணங்களாக கிடக்கிறது இவ்வாறு கூறினார்.













இனம், மதங்களுக்கிடையே சச்சரவுகள், மோதல்கள் வருவது இயல்பு. ஆனால் பொறுப்பிலுள்ளவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து இச்சம்பவங்களை நிறுத்த வேண்டும்.

12 comments:

  1. என்னத்தை சொல்ல??/

  1. சொல்லுவதற்கு ஏதுமில்லைங்க.... மனதை வதைக்கிறது.

  1. sad to hear this news.

    My advise to the readers is do not go for job oppurtunities in african countries like Naigeria, Kango, Kenya.

  1. VARO said...
    என்னத்தை சொல்ல??/

    --எதையும் சொல்ல முடியாது ஏனெனின் நடைமுறை இதுதான் வரோ..........-

  1. சி. கருணாகரசு said...
    சொல்லுவதற்கு ஏதுமில்லைங்க.... மனதை வதைக்கிறது.

    இதுவே மனதை வதைக்கிறது எனின் இலங்கையில் கடைசி நேரம் போரில்
    நடந்ததை எழுதினால்.................
    வருகைக்கு நன்றி .

  1. Subankan said...
    :(((

    சுபாங்கன் இது எல்லாம் உங்களுக்கு புதிது இல்லை என்று நினைக்கிறேன் ................

    வருகைக்கு நன்றி

  1. இப்படி இன்னும் எத்தனை நாடுகளில் நடக்கப் போகின்றதோ தெரிய இல்ல ..................
    எல்லாத்துக்கும் மேலை ஒருவன் இருக்கான் .....................

  1. //சொல்லுவதற்கு ஏதுமில்லைங்க.... மனதை வதைக்கிறது.

    இதுவே மனதை வதைக்கிறது எனின் இலங்கையில் கடைசி நேரம் போரில்
    நடந்ததை எழுதினால்................. //சொல்லுங்க பார்ப்பம் ...........அதுக்கே பதில் இல்லை .இதில வேற..ஹி...........ஹி

  1. ராம்ஜி_யாஹூ said...
    sad to hear this news.

    My advise to the readers is do not go for job oppurtunities in african countries like Naigeria, Kango, Kenya.//

    என்ன செய்வது கஷ்டப்படும் இடத்துக்கு தானே எம்மவர்கள் வேலைக்கு செல்வார்கள் கனவுகளுடன்.

  1. colombo said...
    இப்படி இன்னும் எத்தனை நாடுகளில் நடக்கப் போகின்றதோ தெரிய இல்ல ..................
    எல்லாத்துக்கும் மேலை ஒருவன் இருக்கான் //

    அது எல்லா விடயத்திலும் உறுதி...

  1. aswamethan said...
    //சொல்லுவதற்கு ஏதுமில்லைங்க.... மனதை வதைக்கிறது.

    இதுவே மனதை வதைக்கிறது எனின் இலங்கையில் கடைசி நேரம் போரில்
    நடந்ததை எழுதினால்................. //சொல்லுங்க பார்ப்பம் ...........அதுக்கே பதில் இல்லை .இதில வேற..ஹி...........ஹி//

    எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு நீரே கதைப்பது ஏன் என புரியவில்லை. தேவையான பதில்ல்கள் அந்த இடத்தில் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் உள்ள கட்டுப்பாடுகள் நீங்கள் அறியாத்ததல்ல.. எல்லாவற்றுக்கும் ஓர் தணிக்கை உண்டு... அவற்றை மீறி நாங்கள் சாதனை செய்ய முயற்சிப்பது எதை உருவாக்கும் எண்டு தெரியும் தானே!

  1. உங்களை கிரிக்கட் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கின்றேன். வந்து ஆடவும்…

    கிரிக்கட் காய்ச்சல் - தொடர்பதிவு

    http://shayan2613.blogspot.com/2010/03/blog-post_2620.html

Post a Comment