twitterஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெற உள்ளது. மொத்தமாக உள்ள 196 ஆசனங்களுக்காக இம்முறை தேர்தலில் 7831 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இவர்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும், 298 சுயேச்சைக் குழுக்கள் சார்பிலும் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், இலங்கையின் தேர்தல் வரலாற்றில் அதிகளவு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக அமைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவே மாவட்டம் ஒன்றில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கிய தேர்தலாகும்.


தமிழர் தாயகப் பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் அதிகளவில் அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மொத்தம் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 அரசியல்கட்சிகள், 12 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒருகட்சியினதும், 3 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கபட்டுள்ளது.கண்காணிப்புக்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் போது உள்ளுர், வெளியூர் என பல கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இம்முறை அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடந்த போது அது சுமுகமாக நடைபெற்று முடிந்தது என பஃவ்ரல் உட்பட பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எல்லோரும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர். ஆனால் நடந்த விடயங்களின் உண்மைத்தன்மை எவ்வளவு தூரம் வெளிவந்தது??? அத்துமீறல்களும், வன்முறைகளும் இடம்பெற்றதை மறுக்க முடியாது. இதனையும் சில மீடியாக்கள் மறைமுகமாக வெளியிட்டன. இருந்தாலும் ஒரு விதத்தில் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.

இம்முறையும் தேர்தல் சுமுகமாக நடக்குமா என்பதில் சந்தேகம் தான். ஆனாலும் கடந்த முறை இரு வேட்பாளர்களுக்கு மட்டுமே போட்டி. அதுவும் பெரிய தலைகள் இம்முறை அப்படியில்லைத் தானே! மாவட்டந்தோறும் பல போட்டியாளர்கள். இதில் யார், யாருக்கு கள்ளஓட்டுப் போடுவது, யார் யாரை மிரட்டுவது.? எனவே எல்லாம் வேலை இல்லாத ஒன்று தான். திட்டமிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்து சின்னாபின்னமாக்க பெரும்பான்மை, அதைச்ச சார்ந்த சிறுபான்மை தயாராகும் வேளையில், உங்கள் உரிமைகளை சரியான விதத்தில் தெரிவு செய்வது உங்கள் கைகளிலேயே உள்ளது.

சிந்தித்து செயற்படுங்கள்.


தமிழ் திரை உலகம் சார்பில் பாசத்தலைவனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் அஜித்குமாரின் பேச்சு பலத்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. இவருடன் சேர்ந்து ஜக்குவார் தங்கத்தின் பெயரும் பரவலாக அடிபடுகின்றது. “விழாக்களுக்கு வரும்படி நடிகர்களை மிரட்டுகிறார்கள்” என்று அவர் பேசிய போது சுப்பர் ஸ்டார் எழுந்து கைதட்டியது மட்டுமல்லாது, அவரை நான் பாராட்டுகிறேன் என கூறியிருந்தார்.

இருவரது பேச்சுக்கும் சினிமா “ஸ்டண்ட் மாஸ்டர்” ஜாக்குவார் தங்கம் கண்டனம் தெரிவித்து சில கருத்துக்களை கூறினார். இவர் சிறந்த ஒரு சண்டைப்பயிற்சி இயக்குனராகவும், அவ்வப்போது படங்களில் தலைகாட்டும் நடிகராகவும் இருந்திருக்கின்றார். தனது மகனை வைத்து ஒரு படத்தைக் கூட இயக்கியிருக்கின்றார். ஆண்மைக்காலங்களில் படங்களில் பணியாற்றுவது குறைவு. இறுதியாக விஜய் படத்திற்கு பகவதியில் பணியாற்றியது ஞாபகம். ராமகிருஸ்ணா படத்தில் சண்டைப்பயிற்சியுடன் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். தமிழைத்தவிர்த்து மலையாலம், தெழுங்கு, ஹிந்தி வரை போயிருக்கின்றார்.

இவரது பேச்சால் ஆத்திரம் அடைந்த ரஜினி, அஜித் ரசிகர்கள் வீட்டை கல்வீசி தாக்கினர். இதில் ஜாக்குவார் தங்கத்தின் மனைவி காயம் அடைந்தார். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாக்குதல் சம்பவங்கள், கண்டன கூட்டங்கள் என தமிழ் திரை உலகம் கடந்த வாரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் சினிமா சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட சமரச பேச்சு வார்த்தைக்கு பின்னர் அமைதியான சூழல் நிலவியது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜாக்குவார் தங்கத்தின் வீட்டுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் ரசிகர் ஒருவர் மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜாக்குவார் தனது கவனத்துக்கு,

டேய், ஜாக்குவார் தங்கம், எங்க தலகிட்ட மோதினா, சென்னையில் நீ இருக்க முடியாது. எச்சரிக்கை. உனது மகனை கடத்தி.... கொலை செய்து விடுவோம். அடுத்து தல தாண்டா முதல் அமைச்சர். எங்கள் அல்டிமேட் ஸ்டாரிடம் நீ சரியாக மாட்டிக் கொண்டாய். இனி, நீயும், சரத்குமாரும் நெல்லைக்கு செல்ல வேண்டியதுதான். உன் கதை முடிந்தது என்று நினைத்துக் கொள். இனி உன் குடும்பம்?...

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாக்குவார் தங்கம் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். மிரட்டல் கடிதம் அனுப்பிய அஜீத் ரசிகரை பிடிக்க தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனராம்.

ஒரு சண்டைப்பயிற்சி மாஸ்டர் என்பதைத் தவிர இவரது பெயர் பெரிதாக அறியப்படவில்லை. ஆனாலும் இன்று ரஜினி, அஜித் இற்கு நிகராக இவரது பெயர் அடிபடுகின்றது. எவனும் வாய்திறக்காத நேரத்தில் இவரது துள்ளல் சந்தேகத்தை எழுப்புகின்றது. இதன் பின்னணியில் பெரும் தலைகள் உண்டு. (ஏன் பாசத்தலைவனின் வேலையாக கூட இருக்கலாம்.)

யுத்த காலத்திற்கு பிறகு யாழ்ப்பாணத்தில பொலிஸ் வேலை குடுக்க போறான்களாம். சந்தோஷம் தான். அதுக்கு ஆக்களையும் செலக்ற் பண்ணி விட்டார்களாம். இதோ வேலை குடுக்கிறம், வேலை குடுக்கிறம் என்று சொல்லி இன்னமும் வேலை குடுத்த பாடில்ல.

எலக்ஷனிற்கு முதல் வேலை குடுக்கிறம், என்று சொன்னார்கள் பின்னர் சொன்னார்கள் எலக்ஷன் முடியட்டும் அதற்கு பின் கொடுப்போம், என்றார்கள.; அதற்கு பிறகும் கொடுத்தபாடில்லை. இப்போது கூறுகின்றார்கள் பார்லிமென்ற் எலக்ஷன் முடியட்டும் அதன் பின்னர்தான் எல்லோருக்கும் வேலை குடுப்பம் என்கிறார்கள்.

ஏன் குடுக்கிறது என முடிவெடுத்தாகி விட்டாச்சு.. வேலையை குடுத்து முடிக்கிறது தானே? (அதற்காக இது என்ன அரிசி மாவோ உடனே தூக்கி கொடுக்கிற மாதிரி கொடுக்கிறதற்கு? என்று மட்டும் கேட்காதீர்கள்) பிறகு எதுக்கு எலக்ஷன் வருகிறது. அது முடியட்டும் என காத்து இருக்கிறார்கள்? ஜனாதிபதித் தேர்தலில் யாழ் வாக்குகள் குறைந்தளவிலேயே மஹிந்த அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கின்றது. இந்தநிலையில் எத்தனை தமிழ் மக்கள் ஆளும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கின்றனர் என்று பார்த்து விட்டுத்தான், தமிழ் மக்களிற்கு வேலை வழங்கப் போகின்றனரோ...?பொலீஸ் வேலை என்று என்னுடைய குழப்படிகார நண்பன் செப்ரம்பர் மாதம் முதலாவது இன்ரவியூவிற்கு போனவன்.. மூன்றோ, நாலு இன்ரவியூ அற்றன் பண்ணி இருப்பான் என்று நினைக்கிறன்… என்னை எல்லே செலக்ற் பண்ணியாச்சு என்று திடீரென வந்து சொன்னான். வேலை கிடைத்து விட்டது என்று. நல்ல வேலை என சந்தோஷப்பட்டுக் கொண்டேன். நாலு சனம் மதிக்கத்தக்க வேலை இனிமேல் குழப்படி இல்லாமல் பொறுப்பாக இருப்பான். இனிமேல் அவனுடைய தாய் இவனைப்பற்றி யோசிக்க மாட்டாள். இவனும் திருந்தி விடுவான் என நானும் நினைச்சன்.
ஆனால் அதற்கு இவ்வளவு காலம் எடுக்கும் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது. அவன் இதுவரைக்கும் எந்த வேலைக்கும் போனது இல்லை. இந்த போலிஸ் வேலையை நம்பி போகவும் ட்றைய் பண்ணினது இல்லை. வேறை எந்த வேலைக்கும் அப்ளை பண்ணமாட்டான். பொலிஸ் வேலை கிடைச்சிட்டுதானே அது வர்ற நேரம் வரட்டும் என்று இருக்கிறான.; இப்படி அரசாங்கத்தை நம்பி பொறுப்பில்லாத இளைஞர்களை எண்ணிப் பார்த்தால் வேதனைதான். முன்பு அரசாங்க வேலை எண்டா வடக்கில தெரியும் தானே! இப்ப இதுவும் அரசாங்க வேலை, அதுவும் பொலிஸ் வேலை எண்டும் போது இளைஞர்கள் பயங்கர முக்கியத்துவம் குடுக்கிறார்கள். இவர்களில் எத்தனைபேர் இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்த்தால் இணைவார்களோ தெரியாது.
வேலை கிடைச்சிடும் என்றொரு நம்பிக்கையை கொடுக்கிற மாதிரி கொடுத்து இளைஞர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றனர். இப்படியே பொலிஸ் வேலையில செலக்ற் பண்ணிய இளைஞர்களின் பொழுதுகள் கழிகிறது அநியாயம்தான்…

நண்பன் போலிஸ் வேலை கிடைத்து விடும் என்பதால் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் வீட்டிலேதான் இருக்கான். வீட்டில இவனை எல்லோரும் நக்கலடிப்பார்கள் பெரிய ஓ. எஸ் பி மாத்தையா இவர்தான் என்று…… இவனும் சொல்லுவான் ஒரு காலத்தில ஓ.எஸ்.பி யாய் வந்து நிற்கும்போது பாருங்கோ அப்போ ஒரு சல்யூட் அடிப்பீங்க அதுதான் ஒரு சல்யூட்…

அது மட்டும் அல்ல இவனுக்கு ஊரில இப்ப பெரிய மவுசு…… ஊரில பள்ளிக்கூடத்திற்கு போகாமல் நிக்கிற பிள்ளைகளை வெருட்டிறது. ஊரிற்கு புதுசா யாராவது வந்தால் அவையளை போட்டு வெருட்டுவதுமாக இருக்கிறான். ஏல்லாம் ஒரு பில்ட்அப் தான். உண்மையாகவே பொலிஸ் வேலை கிடைத்தால்……

இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் வேலை வழங்கிறோம் என கூறி விட்டு பொறுப்பற்ற தனமாக இருக்கும் அரசாங்கத்தை என்னவென்று கூறுவது? இவ்வாறான ஒரு வேலை மட்டும் அல்ல, எல்லா அhசாங்க வேலையும் இழுபறிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவர்களுடைய எதிர் காலத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
உங்களுக்கு ஒன்று தெரியுமோ? நான் ஒரு ஐஞ்சாறு வருசத்துக்கு முன் ஜேனலிசம் படிப்பம் என்று வெளிக்கிட்டேன். எங்கட ஊரில ஜேனலிசம் எனின் அவைக்கு என்ன என தெரியாது?. சும்மா எழுந்த பாட்டிற்கு கதைக்கிறது தான். அதுக்கை போகாதை… பயம்! என்பது தான் பொதுவான கருத்து.

ஏன் பேப்பர் றிப்போட்டர் வேலைக்கு போறாய்? றிப்போட்டர் என்றால் செருப்பு வேளைக்கு தேஞ்சு போகும். சைற்றில ஒரு பெரிய பறியை தூக்கி கொண்டு ஓடவேணும். உயிருக்கே ஆபத்து வரலாம். ஆமிக்காரர் சுட்டுப்போடுவினம் பிச்சக்கார சம்பளம்தான் கிடைக்கும்.

நீ வீட்டில ஒரே ஒரு பொடியன். தங்கச்சிமாரை கரையேத்த வேணும். நீ செத்து கித்து போனல் உன்ர குடும்பத்தை யார் பார்க்கிறது....?
ஏன் பிள்ளை இப்பவே காஞ்சு போய் இருக்கிறாய். ஜேனலிசம் படிக்க என்று வெளிக்கிட்டால் கருவாடு மாதிரி ஆகிப்போய் விடுவாய் பிறகு உனக்கு யாரு பொண்ணு தரப்போறாங்கள்? அட கிழவி, ஆணை கறுத்தாலும் ஆயிரம் பொன்.. இருந்து பாரனை கிழவி எனக்கு பின்னால எத்தனை பெட்டையள் க்யூவில நிக்கப் போறான்கள் என்று? சொன்ன மாதிரியே செய்து காட்டியும் போட்டேன். அது வேற கதை.

இப்படியே ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒவ்வொரு சொல்கேட்க வேண்டி இருந்தது… ஆனால் இப்போ … அந்த கிழவி சொன்ன மாதிரி எத்தனையோ ஊடகவியலாளர்கள் வீட்டில இழவு விழுந்திருக்கிறது. அது இலங்கையில மட்டும் அல்ல. உலக நாடுகளிலும்தான்…

இன்றைக்கு ஒரு பேப்பரில பார்த்தேனுங்க 2009 ஆம் ஆண்டில் உலகில் 70 ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்களாம் என பத்திரிகையாளரை பாதுகாக்கும் பேரவை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 150 ஊடகவியலாளர்கள் சிறையில் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் தற்போதய ஊடகங்களின் நிலை.


இது இலங்கைக்கும் விதி விலக்கு இல்லை. இலங்கையிலும் 29 ஊடகவியலாளரது உயிரை குடித்துள்ளது. இது உங்கள் எல்லோருக்ககும் தெரிந்த விடயம் தான். ஏற்கனவே ஊடகவியல் என்பது அஸ்த்தமனம் காண்டு கொண்டிருக்கிறது. அதுக்கு இப்படியும் நடந்தால் மீதிசொல்ல வேண்டியதில்லை.

சுடுறவனுக்கு எங்க தெரியப் போது அதன் அருமை. ஏவல் மாடு மாதிரி சொல்வதைச் செய்வான். அவ்வளவு தான். இதன் இழப்பு யாருக்குத்தான் தெரியப்போது… இப்ப தெரியாது எதிர் காலம் ஒன்று இருப்பதை மறந்து விட்டனர் எல்லோரும்.
இதன் தார்ப்பரியம் காலம் போகத்தான் விளங்கும். அப்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான்.
எங்கட பிள்ளையள் வாசிக்கிறதுக்கு பேப்பர் இருக்காது போல கிடக்கு போற போக்கைப்பார்த்தால்……
என்ன செய்யிறது காலம் செய்த கோலம் எண்டு தான் சொல்ல வேணும்.

பி.கு : ஊடகத்துறையை வளர்ப்பதற்காக சில நிறுவனங்கள் தோற்றம் பெறுவது வரவேற்புக்குரியது. றோடியோவில ஐஞ்சு பாட்டு போட்டுட்டு ரி.வி ல நுனி நாக்கில இங்கிலீஸ் கதைச்சா அவரையெல்லாம் ஜேனலிஸ்ட் எண்டு சொல்லுவினம் எண்டு சிலரின் எண்ணம்.


போக்கிரி படத்தில நெப்போலியன் கமிசனரா பொறுப்பேற்றதும் என்கௌன்டரில ரௌடிகளை போட்டு தள்ளுவர். இதே போல ஒரு விஷால் படமும் ஸ்டார்ட் பண்ணும். இந்த என்கௌன்டர் மாட்டரை நாங்க சினிமாவில தான் பார்த்திருக்கம், தமிழ் நாட்டில நேற்று முன்தினம் ஒரு ஸ்பெஷல் என்கௌன்டர் நடந்திருக்கு, படத்தில ஹீரோ செய்யுற வேலையை உண்மையா ஒரு போலீஸ் அதிகாரி செய்திருக்கிறார். இந்த இடத்தில் சில வாரங்களுக்கு முன் ரௌடிகளால் வெட்டி கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரையும் மறக்கேலாது, எதனையும் செய்ய துணிவு வேணும், படத்தில் விஜயகாந்த் , அர்ஜுன் மாதிரி சும்மா போட்டு தல்லேலாது.
குற்றவாளிகளான கவியரசு, முருகன் ஆகியோரை, உதவி போலீஸ் அத்தியட்சகர் வெள்ளைதுரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளின் அதிரடியால், ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நேற்றைய இந்திய ஊடகங்களின் முக்கிய செய்தி, மதுரை நோக்கி பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவரை, போலிஸார்கலான தென்னரசு, கணேசன் மறித்தனர். அவர்கள் பைக்கை நிறுத்துவது போல் போக்குக்காட்டி, அவர்களை கத்தியால் குத்தி விட்டு, தப்ப முயன்றனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, வெள்ளைதுரை கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடிவந்தார். பைக்கில் தப்ப முயன்ற இருவரையும் அவர் , துப்பாக்கியால் சுட்டார். படுகாயமடைந்த இருவரையும், ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் இருவரும் இறந்தனர். காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி "செஞ்சுரி' போட்ட கவியரசுவும், முருகனும் தற்போது மதுரையில் உதவி கமிஷனராக உள்ள வெள்ளைதுரையின் தோட்டாக்களுக்கு இரையாகியுள்ளனர்.

இதேவேளை மணல் திருட்டை தடுக்கச் சென்றபோலீசாரை, மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதப்படை போலீசார் நான்குபேர் மணல் திருட்டு வண்டிகளை கண்காணிக்க சென்றனர். இவர்கள் சாதாரண உடையில் இரண்டு மோட்டார் சைக்கிள் களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த வழியே மணல் கடத்திச்சென்ற டிராக்டரை மடக்கினர். டிராக்டரில் இருந்த மூன்றுபேர் இறங்கி ஓடினர். டிராக்டரை போலீசார் பிடித்தது குறித்து, அவர்கள் அக்கிராமத்தில் தகவல் கூறினர். சுமார் 50 பேர் அரிவாள், ஆயுதங்களுடன் வந்தனர். ஆயுதங்களுடன் வந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், நான்கு போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. கும்பலாக வந்தவர்கள் நான்குபோலீசாரையும் சரமாரியாக தாக்கி, தரையில் உட்கார வைத்தனர். பின், அங்கிருந்த மின்கம்பங்களில் நால்வரையும் கயிற்றால் கட்டி வைத்து,அடித்து உதைத்தனர்.

இப்ப விளங்குதா.. சினிமா வேறு! வாழ்க்கை வேறு!"நான் ரேஸுக்கு போன மாதிரி எஸ் ஜே சூர்யா நடிக்க போட்டார்" என நக்கலாக அஜித் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். காரணம் இருவரும் தங்கள் பாதையை மாற்றியதால் இழப்புக்கள் தான் அதிகம், வெற்றி இயக்குனராக வலம் வந்த சூரியா தோல்வி பட நடிகரானார். அஜித்துக்கு ஜனா, ஆஞ்சநேயா என வரிசையாக தோல்விப்படங்கள். 'ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது' எண்டுவினம்.

சென்னையில் நடந்த கார் ரேஸ் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் தோல்வியை தழுவினார். எம்.ஆர்.எப். ரேஸிங் சேலஞ்ச் 2010 போட்டியின் 3வது மற்றும் கடைசி சுற்று பந்தயம் சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் நடந்தது. இதன் எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் உள்பட 10 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கடைசி 2 கட்ட பந்தயங்கள் நேற்று நடந்தது. தலா 15 சுற்று கொண்ட இந்த பந்தயத்தில் காலையில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித் குமார், கடைசி நிமிடத்தில் காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பந்தயத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏமாற்றத்துடன் நடிகர் அஜித் குமார் ஷெட்டுக்கு திரும்பினார். இருப்பினும் பின்னர் அவர் போட்டிக்கு மத்தியில் சில ரவுண்டுகள் வலம் வந்தார்.
முன்னதாக அஜித் கார் ரேஸில் பங்கேற்கும் ‌தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் இருங்காட்டுகோட்டையில் திரண்டிருந்தனர். அஜித் ஓட்டிய கார் பழுதானதால் அவர் பந்தயத்தில் இருந்து விலக நேரிட்டதை பார்த்த ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். "தல தோற்க மாட்டார். அவர் எப்பவும் ஜெயிக்கக் கூடியவர்" என்று ரசிகர்கள் கூச்சலிட்டனர். சில ரசிகர்கள் அங்கு கட்டப்பட்டிருந்த விளம்பர பேனர்களை கிழித்து எரிந்து ரகளையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை சமாளிக்க முடியாமல் போட்டி அமைப்பாளர்கள் திணறினார்கள். இதை தொடர்ந்து நடிகர் அஜித் குமார், போட்டி சுமூகமாக நடைபெற ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மைக் மூலம் வேண்டுகோள் விடுத்தார். அஜித்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் இயல்பு நிலை திரும்பியது.
கல்கத்தாவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் சேவாக், சச்சின் சதமடித்து தூள் கிளப்பினார்கள் .
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த சேவக், சச்சின் ஜோடி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. பொறுப்புடன் ஆடிய சேவாக் , டெஸ்ட் அரங்கில் தனது 19வது சதமடித்தார். மறுமுனையில் அசத்திய நச்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின், 47வது சதம் கடந்தார். இந்திய அணி தற்போது 5 விக்கட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களை பெற்றுள்ளது.
எங்கும் ஒழிக்கப்பட வேண்டியது தீவிரவாதமே! அருமையான மணல் சிற்பம்
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலிக்காமல் இருப்பவர்களை கண்டறிவது கடினம். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு தருணத்தில் காதல் வந்து, சென்றிருக்கும். ஜாதி, மதம், மொழியை கடந்து இரண்டு இதயங்கள் இணைவது தான் காதல். இத் தினத்தில் காதலர்கள் மட்டுமின்றி, திருமணம் செய்த தம்பதியர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து, தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.காதலர் தினம் என்ற பெயரில் கலாசாரம் மீறப்படுவதைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில், நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று நடந்தது. திருப்பூர் பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன் நடந்த, "நாய் திருமண' நிகழ்ச்சிக்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து நாய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. பல்வேறு இன நாய் ஜோடிகளுக்கு, புரோகிதரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. கூடியிருந்த தொண்டர்கள், திருமண ஜோடிகளுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர். இதுகுறித்து இந்து முன்னணி கோட்ட ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார் கூறியதாவது: காதல் என்பது மிகவும் புனிதமானது. வள்ளுவரும், வாசுகியும் வாழ்ந்த புண்ணிய பூமியில், காதலர் தினம் என்ற பெயரில், ஆண்டுதோறும் ஒவ்வொரு நபர்களுடன் அட்டூழியம் நடக்கிறது. உண்மையான காதலர்கள் இவ்வாறு கொட்டம் அடிப்பதில்லை. சமுதாயத்தில் கலாசாரம் மற்றும் பண்பாட்டை பாழ்படுத்தி வரும் இத்தகைய காதலர் தின கொண்டாட்டம் தேவையில்லாதது. இத்தகைய கலாசார சீர்கேடுகளை களைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்து முன்னணி, நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கிறது. காதலர் என்ற பெயரில் பல நாய்கள் செய்யும் வேலையைத் தான், இளைய சமுதாயத்தில் சிலர் செய்து வருகின்றனர். இன்று நாய்களுக்கு திருமணம் செய்வது போலவே, நாளை (இன்று) தாறுமாறாக சுற்றித் திரியும் காதல் ஜோடிகளுக்கு, அதே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படும். அதற்காக, பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கிஷோர்குமார் கூறினார்.இந்திய பாலியல் சங்கம், இந்திய பாலியல் மருத்துவ மையம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக உளவியல் துறை, மானுடவியல் துறை இணைந்து நடத்தும் ஐந்தாவது சர்வதேச பாலியல் மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது. சர்வதேச பாலியல் சங்க முன்னாள் தலைவர் அடைக்கண் கணேசன் மாநாட்டை தொடக்கி வைத்தார்.
மாநாட்டில் இந்திய பாலியல் மருத்துவ மைய இயக்குனர் காமராஜ் உரையாட்டுகையில் நாட்டில் சாமியார்கள் பெண்களிடம் பாலியல் தொல்லை செய்வது, பெரியவர்கள், குழந்தையிடம் சில்மிஷம் செய்வது, எய்ட்ஸ் நோயின் தாக்கம், ஆண்மைக்குறைவு போன்றவை அதிகரித்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் செக்ஸ் குறித்த சரியான புரிதல் வேண்டும். தற்போது கள்ளக்காதல், விவாகரத்து போன்றவை அதிகரித்து வருகிறது. இவை தவிர்க்கப்பட, மூளையின் செயல்பாடுகளின் போது அன்பு, காதல் மற்றும் வெறுப்பு ஆகிய செய்கைகளின் போது என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தனர். கணவன் - மனைவி இருவரும் தங்களுக்குள்ளே பரஸ்பரம் காதலை தூண்டி வாழ்ந்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. இந்த கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது தான் காதல் வங்கி. மேலும் செக்ஸ் கல்வி கொண்டு வருவதன் அவசியம் குறித்தும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், பாலியல் செயல்பாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுத்துவதும் குறித்தும் இம்மாநாட்டில் அலசப்படும். இவ்வாறு காமராஜ் பேசினார்.

‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’. ‘வாழ்கை என்பது ஒரு வட்டம், இங்க ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்கிறவன் ஜெயிப்பான்’ இதுகள் தான் இப்ப இலங்கையில நடந்திட்டு வருது. “24 மணத்தியாலங்கள் தேவையான மருந்து இல்லாமல் இருந்தார் பொன்சேகா”. அனோமாவுடன் பார்வையிடச் சென்ற வழக்கறிஞர் கூறுகிறார். என இன்றைய ஊடகங்களில் செய்தி வெளியாகியிருப்பதனைக் கண்டேன். இதற்கு முன்னர் தனது கணவனை பார்வையிட அனுமதிக்குமாறு எல்லோரிடமுடம் கோரி இருந்தார் அனோமா. ஐயகோ…! இது என்ன கொடுமை.

வன்னியில் எத்தனை பேர் தமது தந்தையை, தாயை, அண்ணாவை, தம்பியை, அக்காவை, தங்கையை, கணவனை, மனைவியை பார்வையிட அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மட்டுமன்றி எத்தனையோ அமைப்புக்களிடம் கோரியிருந்தும் பயனளிக்காமல் இருந்தது.

புலிகளை அழித்து ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றோம் என்று கூறிக் கொண்டு தமிழ் இனத்தையே கொன்று குவித்து நாசமாக்கினர். எத்தனையோ தமிழ் மக்களின் அவலக் குரல்கள் அப்போது யாருடைய காதிலும் ஒலிக்கவில்லை. இப்போது சரத்பொன்சேகாவின் மனைவி கண்ணீரும் கம்பலையுமாக ஊடகங்கள் முன் தோன்றியவுடன் அனைவரது பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது.
போர் கால பகுதியில் மீட்கப்பட்ட மக்களை நலன்புரி முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர். அந்த மக்களிற்கு ஒரு போத்தல் தண்ணீர்கூட வழங்குவதற்கு அனுமதிக்கவில்லை. எத்தனையோ மாதங்கள் சென்றும் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று இவருக்காக எத்தனையோ பேர் முன் வருகின்றார்கள். இன்று நிகழ்ந்தது சதி இல்லை, நேற்று நடந்த பழி பாவங்கள் தான்.

இவருக்கு மட்டும்தான் என்று நினைக்காதீங்க… அண்ணன் இன்று உள்ளுக்கு என்றால் தம்பிமார் நாளைக்கு லைன் கட்டி உள்ளுக்கு வரத்தானே வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம். அண்ணன் உண்மையைக் கக்க லைனில வரப்போகும் தம்பிமாரை பொறுத்து இருந்து பாருங்களேன்.

சரத்பொன்சேகாவின் உயிர் என்பது பெரிசு, தமிழ் மக்களின் ஒவ்வொரு உயிரும் தூசா? ஒவ்வொரு மனிஷருக்கு ஆளுக்கு ஒரு நீதிதானே வழங்கப்படுகிறது. இது எல்லாம் சகஜம் தானே.


பொன்சேகராவை ஏன் கைது செய்தனர்?
 • ஊழலை வெளிப்படுத்திடுவேன் என்று கூறியதாலா?
 • இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாலா?
 • ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இட்டதாலா?
 • நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்ற பயமா?
 • இவற்றின்; கூட்டு உள், உறக்கங்கள் வெளிவந்து விடுமோ என்ற பயத்தினாலா?

அரசாங்கம் தெரியாத்தனமா பொன்சேகராவை தூக்கி உள்ளுக்கிள்ள போட்டிட்டினம். அரசாங்கம் எப்படியும் பொன்சேகாவை தமக்கு சாதமாக்கி அதாவது தம்முடனே அவரை வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவார்கள். ஏனெனின் தம்முடைய உள் பூசல்கள் அனைத்தையும் வெளிவிடாமல் பேணிக் கொள்வதற்காக. ஆனால் இது எந்தளவில் சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்றே கொள்ளும் என்பதற்கு காலம் படிப்பித்த நல்ல உதாரணம். கூட்டுகள் பிரிவதுதான் நல்லது. ஏனெனின் பாம்பின் கால் பாம்பு அறியும். ஆட்டுபவரும் நாளை ஆட்டங்காணலாம்.


எம்பெஸ்ஸியிற்கு கடிதம் கொடுத்து ஒரு வருடம் ஆகி விட்டது. “நாளைக்கு ஒருக்கால் எம்பெஸ்ஸி பக்கம் போயிற்று வந்து விடு” என எனக்கு அம்மா நச்சரித்து கொண்டு இருந்தா.. ஒன்றும் செய்ய முடியாத நிலை. ஏனெனில் நான் கொழும்பில இருக்கிறேன். அதை விட மூத்த பிள்ளையும் நானே. பொறுப்பு எல்லாம் என் தலையில் தான்.
எம்பெஸ்ஸியிற்கு போவோம் என முடிவு எடுத்தேன். 10.30 ற்கே புறப்பட்டு விட்டேன். அங்கு போன பின்புதான் விஷயமே தெரிந்தது. நான் இலங்கையில எங்க இருந்தாலும் பறவாயில்லை வெளிநாடு என்ற ஒன்றுக்கே போகப்படாது என்று.

ஏனென்று நீங்க கேட்பது புரியுது. 10.30 ற்கு போனேன் என்று சொன்னேன் தானே வீட்டிற்கு வந்தது 02 மணிக்குதான். அவ்வளவு நேரமும் நேரத்தையும் வீணாக்கியது தான் மிச்சம். பொறுமையை கடைபிடித்து கொண்டு நின்றேன் கடைசியல ஒரு நிமிடம் கூட கதைக்கவில்லை. எப்படி இருக்கும்..?

கனடா எம்பெஸ்ஸி என்றால் வந்திருப்போரை வரவேற்று பெரிய குஷன் சீற் எல்லாம் தருவார்கள் அங்கே களைப்பாறலாம் என்று மட்டும் நினைத்திடாதீங்க. அங்கு சென்ற நேரத்தில் இருந்து வெளியே வருமட்டும் ஒரு நிமிடம் கூட உட்காரவில்லை. இடமே இல்லைங்க பிறகு எங்கே இருப்பது...? கால் எப்படி கடு கடுத்திருக்கும்? அப்படி கால் கடுக்க நின்றால்தானாம் கனடா போகலாமாம். இப்படி எல்லாம் கனடா போக வேண்டுமோ?

நாலைஞ்சு இங்கிலிசு வார்த்தையை பயன்படுத்தி அவரிடம் போய் கதைப்பம் என்றால் தமிழிலையே கதைத்தார்கள். பறவாயில்லை என்ர இங்கிலிஸை கேட்க அவை குடுத்து வைக்கலை. ஒற்றை வரியிலே என்ன பிரச்சனை என்றார்கள். அப்ளை பண்ணி ஒரு வருடம் ஆகி விட்டது அதுதான்… பிரச்சனை இல்லை வீட்டிற்கு போங்க கடிதம் அனுப்பி வைக்கிறோம். என்றார்கள்.

அவ்வளவு தான் வேறை கதை கதைக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எழும்பி வந்ததுதான் மிச்சம். இப்படித்தான் கஸ்ரப்பட்டு… எல்லோரும் வெளிநாடு போயிருப்பினமோ…?

இப்படி எல்லாம் வெளிநாடு போக வேண்டுமோ…?

நல்லாட்சியையும், ஊழல் கட்டுப்பாட்டையும் மேம்படுத்துதல் என்பதில் ஊடகங்களின் நடிபங்கு மிக முக்கியமானதாகும்.

இது தனியே ஊழல் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும், அவற்றின் விளைவுகள் அவற்றுக்கான தீர்வுகள் என்பவை பற்றிமட்டும் அறிவூட்டுவது அல்லது, அத்துடன் ஊழல் சம்பவங்கள் பற்றி அறிக்கைப்படுத்துவதுமாகும்.

தகவல்களின் கிடைப்பனவு வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றோடு புலனாய்வுப் பத்திரிக்கையாளனின் தொழில்வாண்மையான துறை மற்றும் ஒழுக்கவியல் செயல்நிலைப் பிரிவு என்பவற்றிலேயே ஊடகங்களின் பயனுறுதிவாய்ந்த தன்மை தங்கியுள்ளது.

ஊழல் என்றால் என்ன?

நேர்மை நாணயம் என்பவற்றோடு நடக்க வேண்டிய ஒரு நபர் எங்கே நேர்மையீனத்துடன் குற்றமென்று தெரிந்தும் இலஞ்சம் பெற்றுக் கொள்கிறாரோ (ஏற்றுக்கொள்கிறாரோ) அது ஊழலாகும்.

ஏதேனும் பொது (அரச) அல்லது தனியார் அல்லது கடமை தொடர்பாக பொறுப்பளிக்கப்பட்டவர்கள் அவர்களின் கடமையையாற்றுவதற்கு அவர்களிற்கு சட்டபூர்வமாக உரித்தாகவுள்ள கொடுப்பனவுகளுக்குப் புறம்பாக வேறு ஏதாவது வகையில் அவனோ/அவளோ ஏதும் கொடுப்பனவுகளுக்கு வற்புறுத்துவது ஊழல் ஆகும்.

எங்கே தமக்கு விதிக்கப்பட்ட ஒழுங்குகளின் அடிப்படையில் கடமைகளிற்குப் புறம்பாக தமது சொந்த இலாபங்களிற்கு தமது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்கிறார்களோ அங்கே ஊழல் இடம் பெறுகிறது.


பொதுச் செயற்பாடுகள் (அரச) மூலம் தனிப்பட்டவர்கள் நன்மை பெற்று அது அரசாங்கத்திற்கும் பொதுமக்களிற்கும் நட்டத்தை விளைவிக்க காரணமாக அமையுமெனில் அது ஊழலாகும்.

அதிகாரத்தை கொண்டுள்ளவர்கள் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல்.

சொந்த நலன்களிற்காக (இலாபங்களிற்காக) சட்டபூர்வமற்ற செயற்பாடுகளை செய்ய விரும்புதல்.

தவறான செயல்களைச் செய்யுமாறு தூண்டுதல்.

தனது கடமையைச் செய்வதற்கு ஒருவர் ஏதாவது வெகுமதிகளை எதிர்பார்த்தல்.


ஊழலின் வடிவங்கள்

 • பெரிய மற்றும் சிறிய ஊழல்கள்
 • வெளித்தெரிகின்ற வகையில் பிறரால் தூண்டப்பட்டிருந்த ஊழல்(Active)
 • வெளத்தெரியாத தன்முனைப்பல்லாத ஊழல் (Passive)
 • இலஞ்சம்
 • தன் பொறுப்பிலுள்ள பொருளை /பணத்தைக் கையாடுதல்
 • திருட்டு மற்றும் ஏமாற்று மோசடி
 • அச்சுறுத்திப் பணம் பறித்தல்
 • நம்பிக்கை மோசடி (நம்பிக்கை துஷ்பிரயோகம்)
 • சலுகையளித்தல், உறவினருக்கு ஆதரவளித்தல், தன் சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு சலுகையளித்தல்
 • நடத்தையை உருவாக்குதல், அல்லது முரண்படும் ஆர்வங்களிலிருந்து சுரண்டுதல்,
 • முறையற்ற அரசியல் பங்களிப்புக்கள்.
என்ர பிரண்ட் வேலைக்கு போறாள் இதை பெருமையாக கூறப்போகிறேன் என நினைக்காதீர்கள். அவள் வேலைக்கு போய் சம்பாதிக்கிறாளோ இல்லையோ ஆனால் நிறைய முரண்பாடுகளையும் எதிர்கணிய கருத்துக்களையும்தான் சம்பாதிக்கிறாள்.காலையில எழும்பி பஸ்சுக்கு வெளிக்கிடுறதில இருந்து வீட்டுக்கு வந்து சேருமட்டும் இவள் மற்றவைக்கு பேசிக்கொண்டு இருப்பாள். தனக்கு தானே பேசினால் பறவாயில்லை போனை எடுத்து என்னிடம் வாசிக்க தொடங்குவாள் ஒரு அளவு கணக்கு இல்லை.என்ன செய்வது நண்பியாக போய் விட்டாள். தன்னுடைய மற்ற நண்பியை வெளிக்கிட்டு பஸ்சுக்கு வரச் சொல்லி விட்டு…… பிறகு அதை தனியா சொல்றன்… என்ன அவளைப்பற்றி தான் வேற என்ன சொல்ல போறன்…….நபர் தமிழன்தான் அவருடன் தமிழ் கதைப்பது என்பது கல்லில் நார் உரிப்பது மாதிரித்தானாம். இன்னொரு பிரச்சினை அவளுக்கு சிங்களம் தெரியாது. ஆனால் அங்கே ஒப்பீஸில் கூட்டம் நடைபெறும் அங்கு என்ன நடைபெறுகிறது என தமிழில் கூறுங்கள் எனின் வாயே திறக்க மாட்டாராம். இப்படியும் ஒரு பிறப்பு இருக்குது என கண்டபடி பேசுவாள். என்ன ஒரு கொடுமை எனின் அவள் இனி அவருடன்தான் வேலை செய்ய வேண்டுமாம்.


அது மட்டும் அல்ல ஏதாவது விசேஷம் எனின் சிற்றுண்டி வழங்குவதிலும் அதே நிலைதான். ஒரு நாள் யாற்றையோ கலியான வீடாம் என்று கேக் கொண்டு வந்து தந்தவையாம். அப்ப கேக் குடுத்துக் கொண்டு வரேக்க பிரண்ட் தான் முதல் வரிசையில் இருந்தவளாம். கேக் குடுத்துக் கொண்டு வந்தவ தமிழ் தான். இருந்தாலும் அவளுக்கு கேக் குடுத்தது கடைசியாத்தான்.
பாருங்கோவன் இதிலையும் பெரும்பான்மையா?
ஒபீஸ்ல எல்லோருக்கும் தனிதனி போன் குடுத்தவையாம்…….
ஆனால் இவளுக்கு ஒரு போன் கூட குடுக்கல்லயாம். பிறகு வேலையை ஒழுங்கா செய்யல்ல எண்டு பேச்சாம்… ஓழுங்கா குடுத்திருந்தா அவள் வேலை செய்திருப்பாள் தானே…..
அவயள் தட்டிக் கழித்தால் நாங்களும் விட்டுடுவமா???தலைவர் சொல்லியிருக்கிறார் நாட்டில பெரும்பான்மை இல்லை என்று ஆனால் நடப்பது வேறு தானே …என்னத்ததான் கதைத்துப் பேசினாலும் அவன் அவன் தன்ர வேலையைத் தான் செய்வாங்கள்…சும்மா போங்கோ...
கேக் குடுக்கிறதிலயே இப்பிடி எண்டா……. உரிமை குடுக்கிறது எண்டால் எப்பிடி??? ஐயோ நினைகவே தேவையில்ல.
நாங்கள் சாகும் வரை கத்த வேணும் அவங்கள் கேட்டுக் கேட்டே சகாகட்டும். இழவு விழுந்தவை….
“இலங்கையில எத்தனை புத்தகத்தை வாசித்தாலும் இந்திய புத்தகம் வாசிக்கிற மாதிரி ஒரு திருப்தி எனக்கு இல்லை” என்கிறார் கல்லூரி மாணவி மஞ்சுளா. இவருடைய கருத்தோடு ஒத்ததாகவே இலங்கை வாசகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்;றனர். கடந்த வருடம் BMICH ல் நடை பெற்ற புத்தக கண்காட்சியில் சந்தித்த வாசகர்களும்; இக்கருத்தையே முன் வைத்தார்கள். இலங்கையில் அற்புதமான இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் எழுத்தாளர்கள் பலர் இருந்தும் அவர்களை அறியாதோர் பலர் இருக்கின்றனர். ஆனாலும் சாதாரண வாசகர்கள் பெருமளவில் இலங்கை புத்தகங்ககளை நாடுவதே இல்லை. என்ன காரணம்? இதற்கான பதிலை கண்டறிய முற்பட்டோம்.

புத்தக கண்காட்சியிலே இந்தியப் புத்தகங்களை வருவோர் போவோரெல்லாம் வாங்கும் போது இலங்கைப்புத்தகங்களை ஒரு சிலர் தான் வாங்கிச் செல்கின்றனர். அவர்களும் தங்கள் படிப்புக்கோ அல்லது சொந்த தேவைக்காகவோ தான். இந்திய புத்தகம் அதிகளவாகவே விற்பனையானதற்கு வாசகர்கள் பல்வேறு கருத்தினை முன் வைத்தார்கள். “இந்திய புத்தகங்களின் மொழிநடை வாசிக்கிறதிற்கு லேசாக இருக்குது. நடைமுறையுடன் சேர்ந்த மாதிரியே இருக்குது. புத்தகத்தை எடுத்து வாசிச்;சம் என்றால் தொடர்ந்து வாசித்து கொண்டு போறம் விளங்கேலை என்று திருப்பி வாசிக்க வேண்;டிய தேவை இல்லை”. என்கிறார் குடும்பப் பெண் ஒருவர்.

“இந்தியப் புத்தக கதையமைப்பு ஒரு படத்தை பார்ப்பது போல இருக்குது வாசிக்கும்போது ஆர்வத்தை தூண்டுகிறது. நாங்கள் அந்த உணர்விற்குள் நிற்கிற மாதிரியே இருக்கிறது. பக்கத்தில் நிண்டு யார் கூப்பிட்டாலும் காதில விளாது. அப்;படியே கதைக்குள்ள போய் விடுவேன்”. என்கிறார் வெளிநாடு செல்ல இருக்கும் சாவித்ரி. “இந்திய புத்தகங்களின் அட்டை படத்தை பார்த்தாலே புத்தகத்திற்கு பக்கத்துல போய் நிண்டு ஒரு முறை தடவிப்பார்க்க வேண்டும் போல் இருக்கும். அப்படி ஒரு அழகு இருக்குதே அதிலே ஒரு ரசனையை தூண்டுகிறது அதன் பின் புத்தகத்தை சொந்தமாக வேண்ட வேண்டும் போல இருக்கும்” என்கிறார் பாடசாலை ஆசிரியரான பாலேஸ்வரன்.

“இந்திய எழுத்தாளர்களது படைப்புக்கள் நமக்கு பழக்கப்பட்டு விட்டது. இவர்களது படைப்புக்கள் இன்னமும் பழக்கப்பட இல்லை. இலங்கை புத்தகத்தை நாம் மாற்றி வாசிப்பதற்கு எங்களது ரசனையை இன்னமும் எழுத்தாளர்கள் கண்டு பிடிக்கவில்லை. எமக்கு ஏற்ற வகையில் அவர்களால் எழுத்து மூலம் எழுதி விளங்கப்படுத்த முடியவில்லை இந்தியர்களது எழுத்துப் பாணிக்கு அடிமைப்பட்டு விட்டோம். அதில் இருந்து இன்னமும் மீளமுடியாது உள்ளோம்” என்கிறார் கொழும்பு பல்கலைகழக மாணவன் டேவிட்.

இலங்கை எழுத்தாளர்களை பிரபல்யமாக தெரிவது இல்லை. இந்திய எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை எழுத்தாளர்கள் தங்களை பிரபல்யப்படுத்தும் வகையிலும் சீரியசாக எழுதுவது இல்லை. தொடர்ச்சியான எழுத்து பாணியில் தொடர்ந்து எழுதுவது இல்லை. எழுத்தாளர்கள் இந்தியாவில கூட்டாக கலந்துரையாடி செயற்படும் பழக்கம் உண்டு. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. அதிகளவாக எல்லோரிடமும் இங்கே போட்டியும் பொறாமையுமாகத்தான் காணப்படுகிறது.


1960 காலப்பகுதிகளில் இலங்கையில் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக போராடியது அந்தக் காலப்பகுதிகளில் சஞ்சிகைகள் வெளிவந்தன. அந்த போராட்டத்தின் விளைவாக ஓரளவுக்கேனும் இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்களிற்கு வளர்ச்சியை காட்டியது. இது தொடர்ந்திருந்;தால் வளர்ச்சி நிலையை எட்டிஇருக்கும்.

“இலங்கை எழுத்தாளர்கள் காட்சிப்படுத்தல் ஊடக எழுதாதற்கு காரணம் வாசகர்களை பல்வேறு விதமாக யோசிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்;. அவர்களை ஒற்றை வழியாக யோசிக்க வைக்க விடக்கூடாது. அவ்வாறு அவர்களை யோசிக்க வைத்தால் சிந்திக்கிற ஆற்றல் தடைப்பட்டு விடும் ஆதலால்தான் அவர்கள் காட்சி படுத்தல் ஊடாக எழுதுவது இல்லை. அதுமட்டும் அல்ல அவர்களுடைய சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. அது மட்டும் அல்ல எல்லோருக்கும் விளங்க கூடிய வகையில் இந்தியத் தமிழ் உள்ளது” என பேராசிரியர் சிவத்தம்பி கூறுகிறார்.இந்தியத்தமிழ் எல்லோருக்கும் விளங்க கூடியதாக உள்ளது ஏனெனின் சிறு வயதில் இருந்தே சினிமா பார்த்து பார்த்து இந்தியாவில் பேசும் தமிழ் மொழிக்கு பழக்கப்பட்டு விட்டார்கள்;. ஆகவே அவர்களிற்கு கடினமான விதத்தில் இந்திய மொழியில் கூறினாலும் உடனே புரிந்து கொள்வார்கள்;. இலங்கை மொழியில் நல்ல விடயங்களை சுலபமாக எழுதினால் கூட கடினமான நடையாகத்தான் இருக்கின்றது. இதற்கு ஊடகங்கள்தான் காரணம் என்கிறார் ஊடகவியளார், விரிவுரையாளர் தேவகௌரி.
“இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது இல்லை எழுத்தாளர்களிற்கு தேவையான நிதிகள் வழங்கப்படுவது இல்லை. விடய ரீதியான படைப்புகளிற்கு அரசினால் நிதியீட்டம் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த வருடம் தமிழ் மொழியிற்கு எந்தவிதமான நிதியீட்டமும் பாடசாலைகள் உட்பட வழங்கப்படவில்லை. இதனால் புத்தகசாலைகளில் இலங்கை எழுத்தாளர்களின் புத்தகம் பெரிதாக விற்பனை ஆகவில்லை என்கிறார். ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லை எழுத்தாளர்களிற்கு தேவையான நிதி வழங் கப்படுகிறது” என்கிறார் நூல் விமர்சகரான மதுசூதனன்.

சாதாரண மக்கள்தான்; வாசகர்களாக உள்ளார்கள். ஆகவே அவர்களிற்குதான் எழுத்தாளர்கள் எழுதும் எழுத்தைப்பற்றி தெரிந்து இருக்கின்றது ஆகவே அவர்களுடைய கருத்தை மறுதலிக்க முடியாது.