Posted in
Labels:
அனோமா,
இலங்கை,
பொன்சேகா
undefined
undefined

‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’. ‘வாழ்கை என்பது ஒரு வட்டம், இங்க ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்கிறவன் ஜெயிப்பான்’ இதுகள் தான் இப்ப இலங்கையில நடந்திட்டு வருது. “24 மணத்தியாலங்கள் தேவையான மருந்து இல்லாமல் இருந்தார் பொன்சேகா”. அனோமாவுடன் பார்வையிடச் சென்ற வழக்கறிஞர் கூறுகிறார். என இன்றைய ஊடகங்களில் செய்தி வெளியாகியிருப்பதனைக் கண்டேன். இதற்கு முன்னர் தனது கணவனை பார்வையிட அனுமதிக்குமாறு எல்லோரிடமுடம் கோரி இருந்தார் அனோமா. ஐயகோ…! இது என்ன கொடுமை.
வன்னியில் எத்தனை பேர் தமது தந்தையை, தாயை, அண்ணாவை, தம்பியை, அக்காவை, தங்கையை, கணவனை, மனைவியை பார்வையிட அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மட்டுமன்றி எத்தனையோ அமைப்புக்களிடம் கோரியிருந்தும் பயனளிக்காமல் இருந்தது.
புலிகளை அழித்து ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றோம் என்று கூறிக் கொண்டு தமிழ் இனத்தையே கொன்று குவித்து நாசமாக்கினர். எத்தனையோ தமிழ் மக்களின் அவலக் குரல்கள் அப்போது யாருடைய காதிலும் ஒலிக்கவில்லை. இப்போது சரத்பொன்சேகாவின் மனைவி கண்ணீரும் கம்பலையுமாக ஊடகங்கள் முன் தோன்றியவுடன் அனைவரது பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

போர் கால பகுதியில் மீட்கப்பட்ட மக்களை நலன்புரி முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர். அந்த மக்களிற்கு ஒரு போத்தல் தண்ணீர்கூட வழங்குவதற்கு அனுமதிக்கவில்லை. எத்தனையோ மாதங்கள் சென்றும் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று இவருக்காக எத்தனையோ பேர் முன் வருகின்றார்கள். இன்று நிகழ்ந்தது சதி இல்லை, நேற்று நடந்த பழி பாவங்கள் தான்.
இவருக்கு மட்டும்தான் என்று நினைக்காதீங்க… அண்ணன் இன்று உள்ளுக்கு என்றால் தம்பிமார் நாளைக்கு லைன் கட்டி உள்ளுக்கு வரத்தானே வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம். அண்ணன் உண்மையைக் கக்க லைனில வரப்போகும் தம்பிமாரை பொறுத்து இருந்து பாருங்களேன்.
சரத்பொன்சேகாவின் உயிர் என்பது பெரிசு, தமிழ் மக்களின் ஒவ்வொரு உயிரும் தூசா? ஒவ்வொரு மனிஷருக்கு ஆளுக்கு ஒரு நீதிதானே வழங்கப்படுகிறது. இது எல்லாம் சகஜம் தானே.

பொன்சேகராவை ஏன் கைது செய்தனர்?
- ஊழலை வெளிப்படுத்திடுவேன் என்று கூறியதாலா?
- இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாலா?
- ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இட்டதாலா?
- நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்ற பயமா?
- இவற்றின்; கூட்டு உள், உறக்கங்கள் வெளிவந்து விடுமோ என்ற பயத்தினாலா?
அரசாங்கம் தெரியாத்தனமா பொன்சேகராவை தூக்கி உள்ளுக்கிள்ள போட்டிட்டினம். அரசாங்கம் எப்படியும் பொன்சேகாவை தமக்கு சாதமாக்கி அதாவது தம்முடனே அவரை வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவார்கள். ஏனெனின் தம்முடைய உள் பூசல்கள் அனைத்தையும் வெளிவிடாமல் பேணிக் கொள்வதற்காக. ஆனால் இது எந்தளவில் சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்றே கொள்ளும் என்பதற்கு காலம் படிப்பித்த நல்ல உதாரணம். கூட்டுகள் பிரிவதுதான் நல்லது. ஏனெனின் பாம்பின் கால் பாம்பு அறியும். ஆட்டுபவரும் நாளை ஆட்டங்காணலாம்.
February 11, 2010 at 4:19 AM
நடக்கட்டும் நடக்கட்டும்