undefined
undefined
undefined
உங்களுக்கு ஒன்று தெரியுமோ? நான் ஒரு ஐஞ்சாறு வருசத்துக்கு முன் ஜேனலிசம் படிப்பம் என்று வெளிக்கிட்டேன். எங்கட ஊரில ஜேனலிசம் எனின் அவைக்கு என்ன என தெரியாது?. சும்மா எழுந்த பாட்டிற்கு கதைக்கிறது தான். அதுக்கை போகாதை… பயம்! என்பது தான் பொதுவான கருத்து.
ஏன் பேப்பர் றிப்போட்டர் வேலைக்கு போறாய்? றிப்போட்டர் என்றால் செருப்பு வேளைக்கு தேஞ்சு போகும். சைற்றில ஒரு பெரிய பறியை தூக்கி கொண்டு ஓடவேணும். உயிருக்கே ஆபத்து வரலாம். ஆமிக்காரர் சுட்டுப்போடுவினம் பிச்சக்கார சம்பளம்தான் கிடைக்கும்.
நீ வீட்டில ஒரே ஒரு பொடியன். தங்கச்சிமாரை கரையேத்த வேணும். நீ செத்து கித்து போனல் உன்ர குடும்பத்தை யார் பார்க்கிறது....?

ஏன் பிள்ளை இப்பவே காஞ்சு போய் இருக்கிறாய். ஜேனலிசம் படிக்க என்று வெளிக்கிட்டால் கருவாடு மாதிரி ஆகிப்போய் விடுவாய் பிறகு உனக்கு யாரு பொண்ணு தரப்போறாங்கள்? அட கிழவி, ஆணை கறுத்தாலும் ஆயிரம் பொன்.. இருந்து பாரனை கிழவி எனக்கு பின்னால எத்தனை பெட்டையள் க்யூவில நிக்கப் போறான்கள் என்று? சொன்ன மாதிரியே செய்து காட்டியும் போட்டேன். அது வேற கதை.
இப்படியே ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒவ்வொரு சொல்கேட்க வேண்டி இருந்தது… ஆனால் இப்போ … அந்த கிழவி சொன்ன மாதிரி எத்தனையோ ஊடகவியலாளர்கள் வீட்டில இழவு விழுந்திருக்கிறது. அது இலங்கையில மட்டும் அல்ல. உலக நாடுகளிலும்தான்…
இன்றைக்கு ஒரு பேப்பரில பார்த்தேனுங்க 2009 ஆம் ஆண்டில் உலகில் 70 ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்களாம் என பத்திரிகையாளரை பாதுகாக்கும் பேரவை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 150 ஊடகவியலாளர்கள் சிறையில் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் தற்போதய ஊடகங்களின் நிலை.

இது இலங்கைக்கும் விதி விலக்கு இல்லை. இலங்கையிலும் 29 ஊடகவியலாளரது உயிரை குடித்துள்ளது. இது உங்கள் எல்லோருக்ககும் தெரிந்த விடயம் தான். ஏற்கனவே ஊடகவியல் என்பது அஸ்த்தமனம் காண்டு கொண்டிருக்கிறது. அதுக்கு இப்படியும் நடந்தால் மீதிசொல்ல வேண்டியதில்லை.
சுடுறவனுக்கு எங்க தெரியப் போது அதன் அருமை. ஏவல் மாடு மாதிரி சொல்வதைச் செய்வான். அவ்வளவு தான். இதன் இழப்பு யாருக்குத்தான் தெரியப்போது… இப்ப தெரியாது எதிர் காலம் ஒன்று இருப்பதை மறந்து விட்டனர் எல்லோரும்.
இதன் தார்ப்பரியம் காலம் போகத்தான் விளங்கும். அப்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான்.
எங்கட பிள்ளையள் வாசிக்கிறதுக்கு பேப்பர் இருக்காது போல கிடக்கு போற போக்கைப்பார்த்தால்……
என்ன செய்யிறது காலம் செய்த கோலம் எண்டு தான் சொல்ல வேணும்.
பி.கு : ஊடகத்துறையை வளர்ப்பதற்காக சில நிறுவனங்கள் தோற்றம் பெறுவது வரவேற்புக்குரியது. றோடியோவில ஐஞ்சு பாட்டு போட்டுட்டு ரி.வி ல நுனி நாக்கில இங்கிலீஸ் கதைச்சா அவரையெல்லாம் ஜேனலிஸ்ட் எண்டு சொல்லுவினம் எண்டு சிலரின் எண்ணம்.
February 22, 2010 at 11:11 PM
நீங்கள் ஊடகத்துறையில் பால்குடிபோல