twitter





















யுத்த காலத்திற்கு பிறகு யாழ்ப்பாணத்தில பொலிஸ் வேலை குடுக்க போறான்களாம். சந்தோஷம் தான். அதுக்கு ஆக்களையும் செலக்ற் பண்ணி விட்டார்களாம். இதோ வேலை குடுக்கிறம், வேலை குடுக்கிறம் என்று சொல்லி இன்னமும் வேலை குடுத்த பாடில்ல.

எலக்ஷனிற்கு முதல் வேலை குடுக்கிறம், என்று சொன்னார்கள் பின்னர் சொன்னார்கள் எலக்ஷன் முடியட்டும் அதற்கு பின் கொடுப்போம், என்றார்கள.; அதற்கு பிறகும் கொடுத்தபாடில்லை. இப்போது கூறுகின்றார்கள் பார்லிமென்ற் எலக்ஷன் முடியட்டும் அதன் பின்னர்தான் எல்லோருக்கும் வேலை குடுப்பம் என்கிறார்கள்.

ஏன் குடுக்கிறது என முடிவெடுத்தாகி விட்டாச்சு.. வேலையை குடுத்து முடிக்கிறது தானே? (அதற்காக இது என்ன அரிசி மாவோ உடனே தூக்கி கொடுக்கிற மாதிரி கொடுக்கிறதற்கு? என்று மட்டும் கேட்காதீர்கள்) பிறகு எதுக்கு எலக்ஷன் வருகிறது. அது முடியட்டும் என காத்து இருக்கிறார்கள்? ஜனாதிபதித் தேர்தலில் யாழ் வாக்குகள் குறைந்தளவிலேயே மஹிந்த அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கின்றது. இந்தநிலையில் எத்தனை தமிழ் மக்கள் ஆளும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கின்றனர் என்று பார்த்து விட்டுத்தான், தமிழ் மக்களிற்கு வேலை வழங்கப் போகின்றனரோ...?















பொலீஸ் வேலை என்று என்னுடைய குழப்படிகார நண்பன் செப்ரம்பர் மாதம் முதலாவது இன்ரவியூவிற்கு போனவன்.. மூன்றோ, நாலு இன்ரவியூ அற்றன் பண்ணி இருப்பான் என்று நினைக்கிறன்… என்னை எல்லே செலக்ற் பண்ணியாச்சு என்று திடீரென வந்து சொன்னான். வேலை கிடைத்து விட்டது என்று. நல்ல வேலை என சந்தோஷப்பட்டுக் கொண்டேன். நாலு சனம் மதிக்கத்தக்க வேலை இனிமேல் குழப்படி இல்லாமல் பொறுப்பாக இருப்பான். இனிமேல் அவனுடைய தாய் இவனைப்பற்றி யோசிக்க மாட்டாள். இவனும் திருந்தி விடுவான் என நானும் நினைச்சன்.
ஆனால் அதற்கு இவ்வளவு காலம் எடுக்கும் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது. அவன் இதுவரைக்கும் எந்த வேலைக்கும் போனது இல்லை. இந்த போலிஸ் வேலையை நம்பி போகவும் ட்றைய் பண்ணினது இல்லை. வேறை எந்த வேலைக்கும் அப்ளை பண்ணமாட்டான். பொலிஸ் வேலை கிடைச்சிட்டுதானே அது வர்ற நேரம் வரட்டும் என்று இருக்கிறான.; இப்படி அரசாங்கத்தை நம்பி பொறுப்பில்லாத இளைஞர்களை எண்ணிப் பார்த்தால் வேதனைதான். முன்பு அரசாங்க வேலை எண்டா வடக்கில தெரியும் தானே! இப்ப இதுவும் அரசாங்க வேலை, அதுவும் பொலிஸ் வேலை எண்டும் போது இளைஞர்கள் பயங்கர முக்கியத்துவம் குடுக்கிறார்கள். இவர்களில் எத்தனைபேர் இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்த்தால் இணைவார்களோ தெரியாது.




















வேலை கிடைச்சிடும் என்றொரு நம்பிக்கையை கொடுக்கிற மாதிரி கொடுத்து இளைஞர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றனர். இப்படியே பொலிஸ் வேலையில செலக்ற் பண்ணிய இளைஞர்களின் பொழுதுகள் கழிகிறது அநியாயம்தான்…

நண்பன் போலிஸ் வேலை கிடைத்து விடும் என்பதால் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் வீட்டிலேதான் இருக்கான். வீட்டில இவனை எல்லோரும் நக்கலடிப்பார்கள் பெரிய ஓ. எஸ் பி மாத்தையா இவர்தான் என்று…… இவனும் சொல்லுவான் ஒரு காலத்தில ஓ.எஸ்.பி யாய் வந்து நிற்கும்போது பாருங்கோ அப்போ ஒரு சல்யூட் அடிப்பீங்க அதுதான் ஒரு சல்யூட்…

அது மட்டும் அல்ல இவனுக்கு ஊரில இப்ப பெரிய மவுசு…… ஊரில பள்ளிக்கூடத்திற்கு போகாமல் நிக்கிற பிள்ளைகளை வெருட்டிறது. ஊரிற்கு புதுசா யாராவது வந்தால் அவையளை போட்டு வெருட்டுவதுமாக இருக்கிறான். ஏல்லாம் ஒரு பில்ட்அப் தான். உண்மையாகவே பொலிஸ் வேலை கிடைத்தால்……

இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் வேலை வழங்கிறோம் என கூறி விட்டு பொறுப்பற்ற தனமாக இருக்கும் அரசாங்கத்தை என்னவென்று கூறுவது? இவ்வாறான ஒரு வேலை மட்டும் அல்ல, எல்லா அhசாங்க வேலையும் இழுபறிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவர்களுடைய எதிர் காலத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

8 comments:

  1. காத்துவாக்கில ஒரு கதை கேள்விப்பட்டன், யாழ்ப்பாணத்தில அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்கள் தான் அதிகமாக பொலிஸ் நேர்முகப்பரீட்சைக்கு சென்றதாக. வளமான எதிர்காலம் ஏற்படுமா?

    //இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் வேலை வழங்கிறோம் என கூறி விட்டு பொறுப்பற்ற தனமாக இருக்கும் அரசாங்கத்தை என்னவென்று கூறுவது? இவ்வாறான ஒரு வேலை மட்டும் அல்ல, எல்லா அhசாங்க வேலையும் இழுபறிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. //

    உண்மை தான்…

  1. VARO said...
    காத்துவாக்கில ஒரு கதை கேள்விப்பட்டன், யாழ்ப்பாணத்தில அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்கள் தான் அதிகமாக பொலிஸ் நேர்முகப்பரீட்சைக்கு சென்றதாக. வளமான எதிர்காலம் ஏற்படுமா?//

    யாரைச் சொல்லுறாய்..? நீ இன்டவியூக்கு போனியா?

  1. நான் தலைப்பை பார்த்துவிட்டு சந்தோசப்பட்டேன் .பிறகு உள்ள வாசிச்சபோது தான் உள்ள சூதாட்டம் விளங்கியது .இப்படியே தேர்தலை சாட்டி காலத்தை ஓட்டிடுவான்கள் .எங்கட வாயில மண் தான் .இதுதான் காலாகாலமாக நடக்குது .உங்கட பிரண்ட வேற வேலை தேட சொல்லுங்கோ .வாழ்க்கை இதைப்பர்த்தே களிஞ்சிடும் .தமிழரின் தலைவிதி இதுதான் .நீங்கள் அதை விளக்கமாக எழுதிருக்கிங்க .தொடரட்டும் .நல்லது .......

  1. aswamethan said...
    நான் தலைப்பை பார்த்துவிட்டு சந்தோசப்பட்டேன் .பிறகு உள்ள வாசிச்சபோது தான் உள்ள சூதாட்டம் விளங்கியது .இப்படியே தேர்தலை சாட்டி காலத்தை ஓட்டிடுவான்கள் .எங்கட வாயில மண் தான் .இதுதான் காலாகாலமாக நடக்குது .உங்கட பிரண்ட வேற வேலை தேட சொல்லுங்கோ .வாழ்க்கை இதைப்பர்த்தே களிஞ்சிடும் .தமிழரின் தலைவிதி இதுதான் .நீங்கள் அதை விளக்கமாக எழுதிருக்கிங்க .தொடரட்டும் .நல்லது ....///

    வருகைக்கு நன்றி, நிறைய விசயமும் சொல்லியிருக்கிரியல்... நண்பன் பெத்தவங்க சொல்லையே கேக்கிறான் இல்லை. என் சொல்லை எங்க கேக்க போறான்.

  1. பாலுக்கு காவலிருக்க பூனைக்கு யூனிபோம் தைக்கிறாங்களா? உப்பிடியான ஆக்களுக்கு பொலீஸ் வெலை குடுக்கிறதிலும் பாக்க சும்மா இரக்கிறது மேல்.. :P

    அந்த ஒரு கருத்தை தவிர வேறு எல்லா இட மும் ஒத்போகிுறேன்.. கலக்குங்க.. :)

  1. (சும்மா தான் ரகசியமா இங்கினைக்க வைச்சு கேக்கிறன் ....)
    நீங்க இந்த வேலைக்கு அப்பிளை பண்ணலையா?
    கோவியதங்கோ........

  1. புல்லட் said...
    பாலுக்கு காவலிருக்க பூனைக்கு யூனிபோம் தைக்கிறாங்களா? உப்பிடியான ஆக்களுக்கு பொலீஸ் வெலை குடுக்கிறதிலும் பாக்க சும்மா இரக்கிறது மேல்.. :P

    அந்த ஒரு கருத்தை தவிர வேறு எல்லா இட மும் ஒத்போகிுறேன்.. கலக்குங்க.. :)///

    வருகைக்கு நன்றி.
    ஆக்கள் சேர்க்கும் போது படுத்தின பாடு தெரியும் தானே!

  1. aswamethan said...
    (சும்மா தான் ரகசியமா இங்கினைக்க வைச்சு கேக்கிறன் ....)
    நீங்க இந்த வேலைக்கு அப்பிளை பண்ணலையா?
    கோவியதங்கோ...//

    அட கடவுளே! யோசிச்சனான் தான் பிறகு விட்டுட்டன். லஞ்சம் வாங்கலாம் எல்லோ!

Post a Comment