twitter




















உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலிக்காமல் இருப்பவர்களை கண்டறிவது கடினம். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு தருணத்தில் காதல் வந்து, சென்றிருக்கும். ஜாதி, மதம், மொழியை கடந்து இரண்டு இதயங்கள் இணைவது தான் காதல். இத் தினத்தில் காதலர்கள் மட்டுமின்றி, திருமணம் செய்த தம்பதியர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து, தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.















காதலர் தினம் என்ற பெயரில் கலாசாரம் மீறப்படுவதைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில், நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று நடந்தது. திருப்பூர் பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன் நடந்த, "நாய் திருமண' நிகழ்ச்சிக்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து நாய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. பல்வேறு இன நாய் ஜோடிகளுக்கு, புரோகிதரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. கூடியிருந்த தொண்டர்கள், திருமண ஜோடிகளுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர். இதுகுறித்து இந்து முன்னணி கோட்ட ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார் கூறியதாவது: காதல் என்பது மிகவும் புனிதமானது. வள்ளுவரும், வாசுகியும் வாழ்ந்த புண்ணிய பூமியில், காதலர் தினம் என்ற பெயரில், ஆண்டுதோறும் ஒவ்வொரு நபர்களுடன் அட்டூழியம் நடக்கிறது. உண்மையான காதலர்கள் இவ்வாறு கொட்டம் அடிப்பதில்லை. சமுதாயத்தில் கலாசாரம் மற்றும் பண்பாட்டை பாழ்படுத்தி வரும் இத்தகைய காதலர் தின கொண்டாட்டம் தேவையில்லாதது. இத்தகைய கலாசார சீர்கேடுகளை களைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்து முன்னணி, நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கிறது. காதலர் என்ற பெயரில் பல நாய்கள் செய்யும் வேலையைத் தான், இளைய சமுதாயத்தில் சிலர் செய்து வருகின்றனர். இன்று நாய்களுக்கு திருமணம் செய்வது போலவே, நாளை (இன்று) தாறுமாறாக சுற்றித் திரியும் காதல் ஜோடிகளுக்கு, அதே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படும். அதற்காக, பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கிஷோர்குமார் கூறினார்.











இந்திய பாலியல் சங்கம், இந்திய பாலியல் மருத்துவ மையம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக உளவியல் துறை, மானுடவியல் துறை இணைந்து நடத்தும் ஐந்தாவது சர்வதேச பாலியல் மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது. சர்வதேச பாலியல் சங்க முன்னாள் தலைவர் அடைக்கண் கணேசன் மாநாட்டை தொடக்கி வைத்தார்.
மாநாட்டில் இந்திய பாலியல் மருத்துவ மைய இயக்குனர் காமராஜ் உரையாட்டுகையில் நாட்டில் சாமியார்கள் பெண்களிடம் பாலியல் தொல்லை செய்வது, பெரியவர்கள், குழந்தையிடம் சில்மிஷம் செய்வது, எய்ட்ஸ் நோயின் தாக்கம், ஆண்மைக்குறைவு போன்றவை அதிகரித்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் செக்ஸ் குறித்த சரியான புரிதல் வேண்டும். தற்போது கள்ளக்காதல், விவாகரத்து போன்றவை அதிகரித்து வருகிறது. இவை தவிர்க்கப்பட, மூளையின் செயல்பாடுகளின் போது அன்பு, காதல் மற்றும் வெறுப்பு ஆகிய செய்கைகளின் போது என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தனர். கணவன் - மனைவி இருவரும் தங்களுக்குள்ளே பரஸ்பரம் காதலை தூண்டி வாழ்ந்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. இந்த கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது தான் காதல் வங்கி. மேலும் செக்ஸ் கல்வி கொண்டு வருவதன் அவசியம் குறித்தும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், பாலியல் செயல்பாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுத்துவதும் குறித்தும் இம்மாநாட்டில் அலசப்படும். இவ்வாறு காமராஜ் பேசினார்.


2 comments:

  1. உங்களுடைய காதலர் தினமும் இப்படியா போனது ?
    இந்த தினத்தில இப்படி யோசித்து இருக்கீங்க

  1. suwashthika said...
    உங்களுடைய காதலர் தினமும் இப்படியா போனது ?
    இந்த தினத்தில இப்படி யோசித்து இருக்கீங்க//

    no no..

    வருகைக்கு நன்றி

Post a Comment