twitter


அகில இந்திய திரைப்பட விழாவை கொழும்பில் நடத்தினால் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் நட்சத்திரங்கள் வருவார்கள். உலக அளவில் கலா ரசிகர்களின் பார்வை இலங்கை மேல் விழும் என்பது அவரது எண்ணம். தானே நேரடியாக முக்கிய நட்சத்திரங்களிடம் பேசி வருகிறார். அப்படிதான் ரஜினியிடம் பேச முயல, அவர் முதலிலேயே இந்த முயற்சியை முறியடித்ததாக தகவல்! முதலில் இதில் கலந்து கொள்வதாக இருந்த அமிதாப்பச்சன் கூட இந்த அமைப்பின் கௌரவ தூதர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். (நன்றி-அமிதாப் வீட்டின் முன் கூடி அவருக்கு நெருக்கடி கொடுத்த நாம் தமிழர் இயக்கத்திற்கு) தற்போது இந்த விழாவின் தூதர் சல்மான்கான்!




இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு இந்த கொழும்பு விழாவை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது. அப்படியிருந்தும் ஜுன் 3,4,5, தேதிகளில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள கொழும்பு கிளம்ப முடிவெடுத்திருக்கிறார்களாம் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், கத்ரீனா கைப், மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்கு கோரிக்கை அனுப்பிய இந்த அமைப்பு, அப்படி மீறி அவர்கள் செல்வார்களேயானால் தென்னிந்தியாவில் எங்கும் இவர்கள் நடித்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.
சமூக பிரக்ஞையே இல்லாத இந்த ரத்த காட்டேரிகளுக்கு இந்த கூக்குரல் காதில் விழுமா என்பதுதான் இன்னும் புரியாத புதிராக இருக்கிறது!


2 comments:

  1. இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள கொழும்பு கிளம்ப முடிவெடுத்திருக்கிறார்களாம் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், கத்ரீனா கைப், மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள்.

    வருவார்கள் என்றா எண்ணுகிறீர்கள் ?

  1. சமூக பிரக்ஞையே இல்லாத இந்த ரத்த காட்டேரிகளுக்கு இந்த கூக்குரல் காதில் விழுமா என்பதுதான் இன்னும் புரியாத புதிராக இருக்கிறது!//

    எனக்கும் இது தான் புதிராக உள்ளது... திரட்டிகளில் தாங்கள் இணைக்கலாமே?

Post a Comment