twitter

















“உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?” என யாரிடமாவது கேட்டால் உடனே கூறுவார்கள்… பத்திரிகை வாசித்தல், வானொலி கேட்டல், தொலைக்காட்சி பார்த்தல் என. நாங்கள் பொழுதுபோக்காக கருதும் இந்த ஊடகங்கள் உண்மையாகவே பொழுதுபோக்கான விடயங்கள் அல்ல. உலகத்தில் நடைபெறுகின்ற அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் தருவதுடன், அறிவ+ட்டல் சிந்தனையை தூண்டல், மகிழ்வ+ட்டல் போன்றவற்றை சேர்த்து கனத்துடன் தருவது தான் ஊடகங்கள்.

“என்ர பிள்ளை சாப்பிடும் போதும் சரி, நித்திரை கொள்ளும் போதும் சரி, என்னிடம் கதை சொல்லும் போதும் சரி, காதில் ஒரு செவிட்டு மிசினை கொழுவினபடியே இருப்பாள். அதை கழட்டி விட்டு சிறிது நேரம் இரு என்றால் இருக்க மாட்டாள். என்ன என்று கேட்டால் றேடியோ கேட்கின்றன் என்று சொல்லுவாள். தற்பொழுது கையடக்க தொலைபேசியிலேயே ஊடகங்கள் உலா வருகின்றன. அதிகளவான தொலைபேசியில் எஸ்.எம்.எஸ் செய்தி, தொலைகாட்சி, வானொலி என்பவற்றை நாம் பார்க்கவும் கேட்கவும் கூடியதாகவும் உள்ளது.

“ஊடகங்களை மக்கள் உற்று நோக்கும் போது ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் ஊடகங்களின் செயற்பாடுகள் மாறித்தான் இடம்பெறுகின்றன. தற்போது எல்லாமே பொழுது போக்காகத்தான் உள்ளது அறிவு சார்பான விடயங்களோ அல்லது சிந்தனையை தூண்டுவனவாகவோ நல்ல விடயங்களை கற்றுக் கொடுப்பதாகவோ இல்லை. ஒரே அரட்டையும், சிரிப்பும், ஆடைக்குறைப்புமாகத் தான் இருக்கிறது அதைவிட தேவை இல்லாத சொற் பிரயோகங்களும்தான் காணப்படுகிறது” என்பது பலரது கருத்து.

“அன்றைய காலங்களில் எமது ஒலிபரப்பினை கேட்டுத்தான் தமிழ் மொழியை கற்றனர் மக்கள். அன்று ஒலிபரப்பாளர்கள் தெளிவாக தமிழில் ஒலிபரப்பு செய்தார்கள். ஆனால் இன்று அவ்வாறு இல்லை” என்கிறார் ரர்ஐஸ்வரி சண்முகம். கடினப்பட்டு இந்திய பானியை உச்சரிக்கினறனர.; ஏன் அப்படி இந்திய உச்சரிப்பை இங்கு கொண்டுவர வேண்டும்? ஆங்கிலம் கலந்து பேசுவது ஒரு நாகரீகம் என எண்ணுகின்றனர.; ஆனால் தமிழ் மொழியை மட்டும் பேசப்படுவது வரவேற்கத்தக்கது














அச்சு ஊடகங்களும் தவறுகள் விடுகின்றன. தேவையில்லாத சொற்களைச் சேர்த்தல்,
எழுத்துப் பிழைகள் விடுதல், கருத்து பிழைகள் விடுதல், பெயர்களை மாற்றுதல் போன்ற தவறுகள் விடப்படுகின்றன. இலத்திரனியல் ஊடகங்களினை மக்கள் உறுறுநோக்கி கொண்டே இருக்கின்ற அதேவேளை அவர்கள் கூட இதேமாதிரியான தவறுகளை விடுகின்றனர். நாட்டில் நடைபெறுகின்ற விடயங்களை துல்லியமாக அறிந்த கொள்ள முடியாமல் உள்ளது. ஊடகங்களை நம்பி அவர்கள் தரும் தகவல்களை சரியானவை என நம்பி நடைமுறை விடயங்களை அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது

ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க முடியாததற்கு இன்னுமொரு சக்தி ஊடகங்களுடன்
ஒன்றிப்போய் உள்ளது. அதுதான் அரசாங்கத்திடமிருந்து விதிக்கப்படும சில கட்டுப்பாடுகள் ஆகும். அரசாங்கம் சில விடயங்களிற்கு தணிக்கை செய்கிறது. ஊடகங்களினால் சொல்லப்படும் விடயங்கள் மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளை தோற்று விக்ககூடியது என்பதால் அதனை சுயமாக இயங்க விடாது தடை செய்கிறது. இதனூடாக விளங்குவது ஊடகங்களின் வலிமையற்ற போக்கு.

ஊடகங்கள் நடைமுறையில் பொறுப்பற்றதாகவே நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மக்களின் விருப்பு வெறுப்புக்களை தெரிந்து கொள்ளாது தமக்கேற்ற வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். இது தொகுப்பாளர்களிற்கும் நேயர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிககின்றது. மறுபுறம் அத்தோடு ஒன்றிப்போக வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதனால் மக்கள் தங்கள் இரசனையை மாற்றிக் கொள்கிறார்கள்.













யுத்தகாலத்தில அனைத்து செய்திகளையும் நான் முந்தி நீ முந்தி என ஊடகங்கள் முந்தி அடித்து தந்தன. அந்நேரம் பொறுப்புடனும் துரிதமாகவும இயங்கியது. அதுமட்டும் அல்லாது யுத்த களத்தில் நடைபெறுகின்ற விடயங்களை கூட சில ஊடகங்கள் ஒலிபரப்பி கொண்டு இருந்தது. இவ்வாறு காணப்பட்ட ஊடகங்கள் இன்று சில விட
யங்ளை மட்டும்தான் மக்களிற்கு பிரயோசனமாக வழங்குகின்றன. ஏனையவை ஏனோதானே என அரட்டையான நிகழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆரம்ப காலங்களில் கூறுவதுபோல அது ஒரு பொழுது போக்காகத்தான் அமைந்து காணப்படுகிறது.

தற்பொழுது ஊடகங்களின் நிகழ்ச்சிகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து நிதானமாக யோசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வாறு இல்லையெனில் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் சலிப்பானதாக காணப்படுகிறது. இவை அனைத்தையும் தாண்டி எளிமையாக மக்களுக்கு புரியக்கூடியதாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கல் வரவேற்கத்தக்கது.

அனைவரதும் ஒட்டு மொத்தப் பார்வையும் ஊடகங்கள் மீது குவிந்துள்ளமையால் ஊடகங்கள் தமக்குரிய பொறுப்புக்களை இனம் கண்டு அனைத்து விடயங்களையும் சரிவரச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். காரணம் அவர்களை நம்பியே சமுகம் உள்ளது.


பி.கு : இலங்கை ஊடகங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. பத்திரிகைகள் - ஓ.கே, வானொலிகள் - பரவாயில்லை, தொலைக்காட்சிகள் - சுத்தம்…!

7 comments:

  1. இன்றைய இலங்கை ஊடகங்களின் போக்கு என்ன? குறிப்பாக தொலைக்காட்சி பெருகி வருகின்றதே தவிர அதன் மூலம் மக்களுக்கு என்ன செய்கிறார்கள். வானொலிகள் இலங்கைப் படைப்பாளிகளை எவ்வளவு தூரத்திற்கு முன்கொண்டு வருகின்றார்கள். இந்தியா இல்லாட்டி இவங்க நடையக்கட்ட வேண்டியது தான். சொந்தமா என்ன சரக்கு இருக்கு?

  1. //பி.கு : இலங்கை ஊடகங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. பத்திரிகைகள் - ஓ.கே, வானொலிகள் - பரவாயில்லை, தொலைக்காட்சிகள் - சுத்தம்…! //

    எழுதியிருக்கலாமே! எழுதினால் மட்டும் இவங்க என்ன திருந்திடவா போறாங்க?

  1. நேத்ரா ரி.வி, சக்தி ரி.வி இரண்டையும் பத்திரிகையில் போட்டு வார்ந்த பிறகும் திருந்துவதாக இல்லை. போதாததற்கு வெற்றி ரி.வி, வசந்தம் ரி.வி, டான் ரி.வி என்னத்தை செய்யுறாங்க?

  1. colombo said...
    இன்றைய இலங்கை ஊடகங்களின் போக்கு என்ன? குறிப்பாக தொலைக்காட்சி பெருகி வருகின்றதே தவிர அதன் மூலம் மக்களுக்கு என்ன செய்கிறார்கள். வானொலிகள் இலங்கைப் படைப்பாளிகளை எவ்வளவு தூரத்திற்கு முன்கொண்டு வருகின்றார்கள். இந்தியா இல்லாட்டி இவங்க நடையக்கட்ட வேண்டியது தான். சொந்தமா என்ன சரக்கு இருக்கு?//

    ஏமாறுபவன் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்.

  1. NIRU said...
    //பி.கு : இலங்கை ஊடகங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. பத்திரிகைகள் - ஓ.கே, வானொலிகள் - பரவாயில்லை, தொலைக்காட்சிகள் - சுத்தம்…! //

    எழுதியிருக்கலாமே! எழுதினால் மட்டும் இவங்க என்ன திருந்திடவா போறாங்க?//

    இன்று போட்டித் தன்மை குறைந்து விட்டது. இதனால் எல்லோரும் சோம்பேறிகள் ஆகிவிட்டார்கள். சில வருடங்களுக்கு முன் போட்டி போட்டு இசைநிகழ்ச்சிகள், வீதியுலாக்கள், நம்மவர்களை அறிமுகப்படுத்தல், நாடகங்கள் என தொடர்ந்தன. இன்று?????

  1. nikar said...
    நேத்ரா ரி.வி, சக்தி ரி.வி இரண்டையும் பத்திரிகையில் போட்டு வார்ந்த பிறகும் திருந்துவதாக இல்லை. போதாததற்கு வெற்றி ரி.வி, வசந்தம் ரி.வி, டான் ரி.வி என்னத்தை செய்யுறாங்க?//

    ஒருவேளை எல்லாம் அ.தி.மு.க வோ?

  1. பொருத்தமான பதிவு தான். காத்திரமான பதிவுகளைத் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஆனாலும் ஊடகத்தில் இருப்பவர்கள் இதனையெல்லாம் ஏற்றுக் கொள்ளவா போகிறார்கள்.?

Post a Comment