twitter





















போதைபொருள் பாவனை, கடத்தல், விற்பனை செய்தல் போன்ற போதைபொருள் பாவனையாளர்களால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினை என்பன இன்று நாட்டில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைபொருளை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைபொருள் கடத்தலுக்காக சில நாடுகள் மரதண்டனையை கூட சட்டமாக பிரயோகித்து வருகின்றன. இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ள போதும் போதைப்பொருள் பாவனையானது சமூகத்தின் மத்தியில் குறைந்து விடவில்லை. போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இலங்கையை பொறுத்த வரையில் குறைவாகவே காணப்படுகின்றது. போதை பொருளை பாவிப்பதனால் பாவிப்பவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு உள்ளாவதோடு பிறருக்கும் தீங்கு விளைவிப்பவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.















நான் இங்கு போதைப்பொருள் பாவனை என்று கூற வந்தது குடிப்பழக்கத்தை அல்ல. குடு, கஞ்சா, அபின் போன்ற எம் செயற்பாடுகள் அனைத்தையும் கட்டிப்போடும் கொடிய போதைப்பொருட்களைத் தான். கொழும்பில் இதற்கென்று சில ஏரியாக்களும் சில இரகசிய முகவர்களும் இருக்கின்றார்கள். அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களே அவர்களை இனம் காணமுடியும். தங்களுக்குள் இரகசியக் குறியீடுகள் வைத்திருக்கின்றார்கள். பாடசாலை மாணவர்கள் தலைநகரில் போதைப்பொருட்கள் பாவிப்பது இன்று வேகமாகப் பரவிவருகின்றது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பற்றி உரிய கவனம் எடுக்காதபட்சத்தில் இனிவருங்காலம் அதாள பாதாளத்திற்குள் சென்றுவிடும். போதைப்பொருள் பாவனையாளர்களின் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட சிலரிடம் கருத்துக்கேட்ட போது “போதை பொருளை பாவிப்பவர்களினால் எங்களுடைய பிள்ளைகளும் இந்த பழக்கத்திற்கு உள்ளாகுபவர்களாக மாற வாய்ப்பு இருக்கின்றது. இவர்கள் போதைக்காக பயன்படுத்தும் கூடாரங்களும் எங்கள் வீடுகளின் அருகிலேயே காணப்படுகின்றது”, “இந்த குடுகாரர்கள் போதையில ரோட்டுல காட்டுக் கத்தல் கத்திக் கொண்டு திரிவதோடு தூஷனங்களும் சொல்லித் திரிகின்றனர்.”














இது இவ்வாறிருக்கையில் இன்று வர்த்தக ரீதியில் போதைப்பொருட்கள் சந்தைப் படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்ட விரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ் வர்த்தகம் நடைபெறுகின்றது. மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்படுவதாலும் இதற்கு உடந்தையாக வருமானத்தை பெற்று கொள்ளும் நோக்கில் சில பெரும்புள்ளிகள் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறி வருகின்றது. போதைபொருள் பாவனையால் ஏற்படும் தீங்குகளும் பாதிப்புகளும் அழிவுகளும் குறித்து மக்களிடையே வழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜூன் 26 ஆம் திகதி சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் சமுகத்தின் மத்தியில் ஏட்டுச் சுரைக்காயாகவே இதுபற்றிய விடயம் காணப்படுகின்றது.














சில சந்தர்ப்பங்களில் போதைபொருளானது கிராம மக்களிடத்தில் மருந்து பொருளாகவும் பாவிக்கப்பட்டது. இவ்வாறான மடமை செயற்பாடுகளும் மக்களிடத்தில் காணப்பட்டுள்ளது. இப் போதைப் பொருளானது தற்போது நவீன வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான போதைபொருட்கள் கடத்தவும் மிக இலகுவான முறையில் பாவனை செய்ய கூடியதாக காணப்படுகின்றது. இவைகள் பற்றி விளக்கம் வழங்கத் தக்க வகையில் 1988 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருளுக்கு எதிரான உலக மாநாடு நடைபெற்றமை குறிப்பிட தக்கது. அதாவது நாட்டின் உல்லாச பயணிகளின் வருகையால் இலங்கையில் நவீன போதைபொருட்களும் உருவெடுத்துள்ளது.












போதை ஒழிப்பை மேற்கொள்ள ஒவ்வொருபவரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் போதை பொருள் ஒழிப்புக்கு பல சட்டங்கள் மட்டும் இருந்தால் போதுமானது அல்ல சகலரின் ஒத்துழைப்பும் அவசியம். இதன் மூலமே போதை பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். போதைக்கு அடிபணிபவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் இளச் சந்ததினரை அதிலிருந்து பாதுகாப்தற்கும் அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற போதிலும் பல சமூக நாச சக்திகளா சமூகத்தின் மத்தியில் பல சீர்கேடுகள் இன்னமும் நிகழ்கின்றன.

2 comments:

  1. பதிவு அருமை. நல்ல சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகள். தொடருங்கள்.

  1. எல்லாம் பொம்பிளைப்பிள்ளையள் போதையடிக்கிற படமாக்கிடக்கு. ஆம்பிளைங்க எல்லாம் திருந்திட்டாங்களோ?

Post a Comment