twitter








இலங்கையில் பத்திரிகையில் இடம்பெறும் தவறுகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் பல ஆண்டுகளாக இருந்ததில்லை. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இலங்கைப்பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப்பத்திரிகை வெளியீட்டு அமைப்பும் இலங்கை சுதந்திர ஊடக அமைப்புமாக இணைந்து 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் திகதி "இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு" வை உருவாக்கியது. இதில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் உள்ளடங்குகின்றன. தெற்காசியாவிலேயே முதலாவதாக இம்மாதிரியான ஆணைக்குழு இலங்கையிலேயே உருவாக்கப்பட்டது.






1998 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றின் முடிவில் ஊடகங்களுக்கு சுயகட்டுப்பாடு அவசியம்;, தான்தோண்றித்தனமாகச் செயற்பட முடியாது. அத்துடன் ஏனைய நெருக்குவாரங்களின்றி ஊடகங்கள் இயங்க வேண்டும் போன்ற
காரணத்தால் இந்த பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்துப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவை முன்னுதாரணமாகக் கொண்டு 1995ம் ஆண்டு 11ம் இலக்க "பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் சட்டம்" மூலம் செய்தி ஆசிரியர்களுக்கான தொழில் நடைமுறைக்காக ஓர் ஒழுக்கக் கோவை தயாரிக்கப்பட்டது.

இந்த ஒழுக்கக் கோவையில் 9 தலைப்புகளின் கீழ் ஒழுக்க நெறிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமான சில

1. சரியான செய்திகளை வெளியிட வேண்டும். திரிவுபடுத்தல், பக்கம் சாராமை போன்ற பல்வேறு விடயம் பற்றி கவனமெடுத்தல் வேண்டும்.


2. தவறுகள் ஏற்படும் பட்சத்தில் அதனைத் திருத்தம் செய்து வெளியிட வேண்டும். அல்லது அச் செய்தி தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அவரது கருத்துக்களை பத்திரிகையில் வெளியிட வேண்டும்.


3. ஒவ்வொரு ஊடகவியலாளரும் அவரின் தொழிலின் கொளரவத்தைப் பேண வேண்டும்.

4. தனிப்பட்ட நபர் வாழ்க்கை நம்பந்தமான செய்திகளை வெளியிடும் போது அவர்களின் அனுமதியுடன் வெளியிட வேண்டும்.













இந்த நடைமுறைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் மீறும் போது ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடலாம். இதனால் அது ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கும். பாதிக்கப்பட்ட நபர்கள் செய்தி வெளியாகி 2 வருடங்களுக்குள் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறையிட வேண்டும். இதற்காக 11 பேர் உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 14 நாட்களுக்குள் தீர்வினை பெற்றுத்தர தவறுமிடத்து அவர்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம்.
பாதிக்கப்பட்ட நபர் சார்பாக நீதி மன்றத்திற்கு முறையிட பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு அதிகாரமில்லை.


இவ் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 5 வருடங்களுக்குள் 600 இற்கு மேற்பட் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதில் 90மூ ஆன முறைப்பாடுகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னுமொரு முக்கிய விடயம் இவ் ஆணைக்குழு
வின் மூலம் தொலைக்காட்சி வானொலிகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு
தீர்வைப் பெறமுடியாது.

0 comments:

Post a Comment