twitter













அண்மைக்காலத்தில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளால் சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான வட பகுதி மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் ஏறக்குறைய ஆறுமாதகாலமாக அங்கு சொல்லொனாத் துயரங்களை அனுபவித்தனர். பின்னர் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சமூகசேவைகள் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா ஆகியோரின் துரித முயற்சியில் கட்டம் கட்டமாக அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். தடுப்புக்காவலில் வைத்திருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள், சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டனர். இன்னமும் ஒன்றரை இலட்சத்திற்கும் குறைவானவர்களே மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக வழங்கப்பட்ட சலுகையா? அல்லது தேர்தல் முடிந்தபின்னும் அந்த நடவடிக்கைகள் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.








மீள்குடியேற்றம் என்பது நம்; நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தக் கூடியதாகும். இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படும் போது இழந்த அவர்களது வாழ்வாதாரத்துடன் சரிந்த தேசத்தின் பொருளாதாரமும் மேம்பாடடையும். வடபகுதி பிரதேசங்களைப் பொறுத்த வரையில் வளம் மிகுந்த மண்ணைக் கொண்டது, நீர்ப்பாசனத் திட்டங்களைக் கொண்டது. விவசாயத்துக்கு ஏற்ற பிரதேசம். பயிர்ச் செய்கையில் புகழ் பெற்ற வடபகுதியின் பெரும்பாலான இடங்கள் இன்று வெற்று நிலமாகவே காணப்படுகின்றது.









இதுமாத்திரமல்லாமல் மீன்பிடியிலும் வடபகுதி சிறந்து காணப்படுகின்றது. நன்னீர், உவர்நீர் இந்த இரண்டு மீன்பிடியில் மக்கள் ஈடுபடுகின்றனர். தளர்த்தப்பட்டிருக்கும் மீன்பிடிக்கட்டுப்பாடுகளுடன் மீனவர்களுக்குத் தேவையான உரிய வசதியையும் இந்த அரசு செய்து கொடுக்கட்டும். இவ்; வெற்று நில பயிர்ச்செய்கைகளையும் மீன் பிடியினையும் மீண்டும் மேம்படுத்த மனித வளம் மிக அவசியமானதே! மீள்குடியேற்றப்படும் மக்கள் உற்பத்திகளை மேம்படுத்தும் போது அவை உரிய முறையில் சந்தைப் படுத்தப்பட்டு வருவாயினைப்பெற்றுக் கொள்ள முடியும்.
பொருளாதார நெருக்கடியானது உலக நாடுகளைப் போல நமது நாட்டிலும் அதிகரித்து வருகின்றதுடன் அரசாங்கமும் பெருமலவிலான கடன்களை பெற்றுள்ளது. இதற்கு மாற்றீடாக நம் நாட்டின் உற்பத்திகளை அதிகரிக்கச் செய்கினற போது பொருளாதார வீழ்ச்சிகளை ஓரளவாவது குறைக்க முடியும்.


தேர்தல் காலங்களில் வடபகுதி மக்களுக்கு வழங்கி வந்த சலுகைகள் தொடர வேண்டும். புதிய அரசாங்கம் நாட்டினதும் நாட்டு மக்களினதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

0 comments:

Post a Comment