twitter



வணக்கம் பதிவுலக நண்பர்களே!

இன்று உலகச் சுருங்கி விட்டது. அச்சு ஊடகங்களை விட இலத்திரனியல் ஊடகங்களும், இணையங்களும் மக்களை ஆட்டுவிக்கின்றன. குறிப்பாக இணைய எழுத்தாளர்கள். நம் சிந்தனையில் தோண்றும் எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்து அதனை வாசகர்களின் கைகளில் வலைப்பதிவுகளாக விட்டு விடுகின்றோம். பிடித்தால் பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்கின்றோம். இல்லாவிட்டால் உடனடித் திட்டுக்களையும் பெற்றுக் கொள்கின்றோம்.

இணையத்தில் ஏதோ கிறுக்கத் தொடங்கியவர்களில் பலபேர் கைதேர்ந்த எழுத்தாளர்களாக இன்று மாறியதனையும் மறுக்க முடியாது. என்னதான் இணையத்தில் எம் எழுத்துக்களை வாசித்தாலும், எம் எழுத்துக்கள் கைகளில் நூல் வடிவில் தவளும் போது, அதை பார்ப்பதே தனிச் சந்தோஷம்.

வலைப்பதிவு எழுத்தாளர்கள் பலர், பல ஊடகங்களில் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாது பல பதிவர்களது பதிவுகள் ஊடகங்களில் எடுக்கப்படுகின்றன. (களவாகவும்). ஆனால் வலைப்பதிவர்களின் பதிவுகளை திரட்டி ஒரு புத்தகமாகவோ அல்லது சஞ்சிகையாகவும் வெளிக் கொணர பலரும் முயற்சித்தாலும் (முயற்சித்து கொண்டிருந்தாலும்) அது பாரியளவில் கைகூடவில்லை.

நாங்கள் சிலர், நண்பர்களாக இணைந்து பதிவர்களின் வித்தியாசமான பதிவுகளைத் திரட்டி ஒரு சஞ்சிகை வடிவில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிட முயற்சிகளை எடுத்து வருகின்றோம். பக்க வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நாங்களே கையாளப்போகின்றோம். எனவே குறை நிறைகள் இருக்கும். ஆனாலும் உங்கள் கைகளில் கிடைக்கும் போது அது பூரணமான சஞ்சிகையாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கூடியவரை மேற்கொள்வோம்.

இது எந்த அமைப்பையோ, நிறுவனத்தையோ சார்ந்ததாக அல்லாமல் பதிவர்களின் கூட்டு முயற்சியாக இருக்கும். தகுந்த பக்க பலங்கள் இணையும் போது சஞ்சிகையை இலவசமாக கொடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.

எனவே அடுத்துவரும் 3 மாத காலப்பகுதிக்குள் ஒரு வலையுலக எழுத்தாளர்களின் சஞ்சிகை ஒன்றை எதிர்பாருங்கள். எல்லா பதிவர்களுடைய பதிவர்களையும் நாங்கள் மட்டும் கண்காணிப்பது என்பது இயலாத காரியம். எனவே நாங்கள் விசேடமாக குறிப்பிடும் காலப்பகுதியில் நீங்கள் வாசித்த, ஆக்க பூர்வமான பதிவுகளை நாங்கள் குறிப்பிடும் தொடர்பு முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.

ஒற்றுமையுடன் கைகோர்ப்போம்.

நன்றி

பி.கு : இது இலங்கைப் பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே!

13 comments:

  1. நல்ல முயற்சி, வாழ்த்துகள் :)

  1. முயற்சி திருவினையாக்கும் என நம்புகிறேன்!

  1. வாழ்த்துகள்

  1. நல்லது. இணையத் தொடர்பு கிடைக்காதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    தொடர்பு முகவரி எங்க? காணேல.

  1. இன்று தான் உங்கள் தளம் பார்த்தேன்...

    வாழ்த்துகள்...

  1. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  1. வாழ்த்தியவர்களுக்கு நன்றி.

    இது எங்கள் திட்டம் மட்டுமே! கூடிய விரையில் செயற்படுத்தவும் முயற்சிக்கின்றோம்.


    மதுவதனன் மௌ. / cowboymathu

    //எனவே நாங்கள் "விசேடமாக குறிப்பிடும் காலப்பகுதியில்" நீங்கள் வாசித்த, ஆக்க பூர்வமான பதிவுகளை நாங்கள் குறிப்பிடும் தொடர்பு முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.//

  1. இது இலங்கைப் பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே!//

    அப்ப நாங்கள் வரேலாதோ?
    சும்மா கேட்டன்.

    நல்லதொரு முயற்சி. தொடருங்கோ. வாழ்த்துக்கள்.

  1. வாழ்த்துகள்

  1. நல்ல விடயங்களுக்கு என்றும் என் ஆதரவும் உண்டு. தாமதமானதாய் இருந்தாலும் வாழ்த்துக்கள்

  1. வாழ்த்துக்கள். ஏற்கனவே ஒரு முயற்சி ஆரம்பித்து என்னால் தொடர இயலவில்லை. நீங்கள் செய்யுங்கள். என் வாழ்த்துக்கள் உண்டு

  1. Accidentally I saw roshniee's site and found this information. Actually this effort of bringing the valuable informations from electronic media and make people to read in the Print Media is really a useful task and this will help the people in various ways in the long run. Congratulations. May Almighty makes this venture a success.

  1. nalla muyarchi.
    thevaiyaanathum kooda.
    vaazhthukkal.
    nadpudan,
    mullaiamuthan

Post a Comment