“பிள்ளையள் எங்களுக்காக அனுப்பினம் நாங்கள் செலவளிக்கிறம். இதில என்னத்தைப் பார்க்கிறது” என்று கூறினார் திலகவதி. இப்படித்தான் எத்தனையோ பேர் தங்களை அறியாமல் பணத்தினை செலவளித்து கொண்டு இருக்கின்றார்கள். வெள்ளவத்தை பகுதியில் அதிகமான யாழ்ப்பாணத்தவர்களே வசிக்கின்றார்கள். அதிகமானோர் வெளிநாடு செல்வதற்காகவும் வெளிநாட்டு வருமானத்துடன் வெளிநாட்டையே மையமாக வைத்து வாழ்கின்றார்கள். வருமானமானது அதிகமாகவே கிடைப்பதால் பொருட்களின் விலைகளைப் பொருட்படுத்துவது இல்லை.
நகரத்தை நோக்கி வந்தவர்களில் அதிகமானோர் கிரமவாசிகள் தான். அங்கு அவர்களின் வாழ்க்கை முறையானது முற்று முழுவதாக மாறுபட்டதாகத் தான் இருக்கும். வாழ்க்கைச் செலவானது குறைவாவே காணப்படும். ஒரு புது உடுப்பு எடுக்க வேண்டும் எனின் தைப்பொங்கல் அல்லது வருசம், தீபாவளிக்கு காத்து கொண்டு இருப்பார்கள். ஏதாவது செலவு செய்ய வேண்டிய தேவை இருந்தாலும் ஆயிரம் தடவைகள் யோசிப்பாகள. ஆனால் அவர்களே நகரத்தை நோக்கி நகரும் போது நடைமுறையுடன் இயல்பாகவே ஒன்றி விடுவார்கள். இதற்கு காரணம் ஒன்று புதிய கலாச்சாரங்களின் வருகை மற்றயது அதிகரித்த வெளிநாட்டு பணமும்தான்.
சுவாதி கூறுகையில் “என்னுடைய கணவர் எனக்காக காசு அனுப்பும் போது நான் ஒன்றுக்கும் யோசிக்கத் தேவை இல்லை”. இப்படித்தான் எத்தனையோ பேர் செயற்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நல்லதொரு உதாரணம் வெள்ளவத்தையில் மற்றைய இடங்களுக்களுடன் ஒப்பிடுகையில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகமாகவே காணப்படுகின்றன. புறக்கோட்டையில் 7 தோடம்பழம் 100 ரூபாய் வெள்வத்தையில் 1 தோடம்பழம் 30ரூபாய். நாரகேன்பிட்டி அரச வணிக சந்தையில் 1 கிலோ கத்தரிக்காய் 20 ரூபாய், வெள்ளவத்தையில் 80 ரூபாய்.
“எங்கட பிள்ளைகள் 4 பேரைப் போல வெளிநாடு போக வேணும் தானே இதுக்கெல்லாம் காசைப்பாக்க ஏலாது. இது ஊரில்லயே” என்கிறார் பிருந்தா. புதிய புதிய நாகரீகங்களின் வருகை அத்தோடு ஒன்றிப் போகும் மக்களும் கலாச்சாரத்திற்கும் முகம் கொடுக்க பணம் தேவை அது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. விலைகளை சரியாக அறிந்து கொள்ள முடியாமல் கேக்கிற பணத்தை கொடுகின்றார்கள். இதற்கு முதல் பிரச்சனையாக இருப்பது மொழிப் பிரச்சனை தான். சிங்களம் தெரியாத காரணத்தால் சரியான முறையில் கொடுக்கல் வாங்கல்களை செய்ய முடியாது உள்ளது.
இன்னொரு பிரச்சனை அவர்கள் பணத்தை கொட்டிக் கொடுப்தால் விற்பனை செய்பவர்களும் இவர்களிடம் பணத்தை கறக்கலாம் என கூட விலைகளைச் சொல்வார்கள். வேறு இடங்களிற்குச் சென்று வாங்குவதற்கும் அவர்களுக்கு போக்குவரத்து பிரச்சனையாகவே உள்ளது. வருமானத்தை விட அதிகமாகவே செலவு செய்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து உறவுகள் அனுப்பும்; பணத்தை தங்களுடையது என்று சரியாகத் திட்டமிட்டுக் கொள்வதில்லை. இதனால் வரவை விட செலவு அதிகமாகவே உள்ளது. அதிகமாகக் பணம் வருவதால் இவர்களுக்கு அது தெரிவதில்லை. மாதம் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்பவர்கள் கூட இருக்கின்றார்கள். (ஒருவருக்கான பணம்)
இது தொடர்பாக கிருலப்பனையிலுள்ள ஒருரைக் கேட்ட போது அவர் கூறினார் “வெள்ளவத்தையில் வெளிநாட்டுக்காரர் தான் இருக்கின்றார்கள்”; குண்டூசியில் இருந்து குளிரூட்டி வரை எல்லாம் 3 மடங்கு விலையாகத்தான் உள்ளது”. இப்படி ஒரு கருத்து காணப்படும் போது அதை அங்குள்ள மக்கள் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். வெள்ளவத்தை என்றாலே அது குட்டி யாழ்ப்பாணமாகவே உள்ளது. நுகர்வின் போது நுகர்வோர்கான பொறுப்பு இருக்கின்றது. இதை அவர்கள் சுயமாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பி.கு : நட்சத்திர வாரத்தில் நான்கு நாள் இடுகை இடாமல் விட்டுவிட்டேன். எல்லாத்துக்கும் அதிகரித்த வேலைப்பளு தான் காரணம். எனவே மன்னியுங்கள். இனியும் பதிவெழுதாமல் ஏமாத்தாமல், இந்தப் பதிவு. கடந்த வருடம் ‘களச் செய்திச் சேகரிப்பின்’ போது கல்லூரிக்காக எழுதப்பட்டது.
July 30, 2010 at 8:11 AM
//பிள்ளையள் எங்களுக்காக அனுப்பினம் நாங்கள் செலவளிக்கிறம். இதில என்னத்தைப் பார்க்கிறது//
//ஒரு புது உடுப்பு எடுக்க வேண்டும் எனின் தைப்பொங்கல் அல்லது வருசம், தீபாவளிக்கு காத்து கொண்டு இருப்பார்கள்//
//என்னுடைய கணவர் எனக்காக காசு அனுப்பும் போது நான் ஒன்றுக்கும் யோசிக்கத் தேவை இல்லை//
நிதர்சனமான உண்மைகள், வித்தியாசமான பதிவு.
நட்சத்திர வாரத்திற்கான பிந்திய வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்கள் தோழி.
நீண்ட நாட்களின் பின் பின்னூட்டத்தின் ஊடக சந்தித்ததில் மகிழ்ச்சி