twitter


பதிவர்களை ஊக்குவிக்கும் யாழ்தேவி திரட்டியின் இவ்வார நட்சத்திரமாக என்னை அறிவித்திருக்கிறார்கள். அதற்கு முதலில் யாழ்தேவிக்கு நன்றிகள். பொழுது போக்காக ஆரம்பித்த வலைப்பதிவில், நாட்கள் செல்லச் செல்ல சில விடயங்களை எழுதியே ஆக வேண்டும் என ஆரம்பிப்பேன். பதிவாக வரும்போது நான் சொல்ல நினைத்ததில் அரைவாசி தான் இருக்கும்.



காரணம், என் பதிவுகளை வலையில் இட முதல் நண்பர்களிடம் காட்டுவேன். "ஊடகத்தணிக்கை" எனும் பெயரில் பல இடங்களை நீக்கி விடுமாறு கூறுவார்கள். மனம் அதற்கு உடன்படாவிடினும், கை உடன்படும். ஊடகவியாலாளனுக்கு முக்கியம் செய்தியல்ல, உயிர். இதனால் இன்று வரை நான் இடும் பதிவுகளில் எனக்கு நூறு வீதத் திருப்தி இல்லை.

நட்சத்திர வாரத்தில் பதிவுகளை தொடர்ச்சியாக இட முயற்சிக்கின்றேன். முடியாது போனால் பொறுத்தருள்க.

மண் குதிரைக்கு சமனான தென்னிந்திய நடிகர் சங்கம்

மண்குதிரையை நம்பி ஆத்தில போனால் என்ன நடக்கும் தெரியும் தானே! அதே மாதிரி தென்னிந்திய நடிகர் சங்கம் (தமிழ்) இருக்குது. நடிகர் சங்கத்தில யார் சொல்லுறது சரி. யார் உண்மையான தீர்மானங்களை எடுப்பவர்.? எவர் சொல்லுறதை நம்பலாம் எண்டு தெரியாமல் கிடக்கு. ஆளாலுக்கு பத்திரிகை காரங்களைக் கூப்பிட்டு பேட்டி குடுக்கிறாங்க. பிறகு எல்லாரும் சேர்ந்து கதைக்கிறாங்க. என்ன நடக்குது உங்கை?

இப்பிடித் தான் புவனேஸ்வரி விவகாரத்திலயும் பொங்கி எழுந்து, பத்திரிகைக் காரங்களுக்கு எதிரா கூட்டம், ஆர்ப்பாட்டம் எண்டு கலக்கினாங்க. பிறகு ரஞ்சிதா விவகாரத்தில பெட்டிப் பாம்பா அடங்கிட்டாங்க. அதே மாதிரி ஐஃபா வை காரணம் காட்டி இந்திய திரையுலகத்தையே புறக்கணிக்கக் கூப்பிட்டாங்க. குறைந்த பட்சம் தமிழ் சினிமாக் காரங்களை தன்னும் தடுத்தாங்க. பிறகு இலங்கைக்கு காலடி வைக்க நினைச்ச லியோனி, சுப்பர் சிங்கர்ஸ் ஜூனியர், சீனியர் எண்டு எல்லாரையும் மடக்கினாங்க. ரத்த சரிதம் படத்தை போடவிடாமல் பண்ணுவாங்க எண்டு நினைக்கும் போது, ஐஃபா செத்துப்போச்சு எண்டாங்க. இப்பிடி பல கதை சொல்லுவாங்க.

கடைசில அம்பிட்டது அசின், ஆளாளுக்கு கருத்து தெரிவிச்சாங்க. தமிழ் சினிமாவே நடிக்க விடமாட்டம் எண்டு துள்ளிக் குதிச்சாங்க. கடைசியா எல்லாரும் சேர்ந்து நேற்று கூட்டம் போட்டு கதைச்சு தொழில் மற்றும் தனிப்பட்ட விடயமா போறவங்க போகலாம் எண்டு பச்சைக் கொடி காட்டினாங்க. இதை முதல்லயே செய்திருக்கலாமே! நீங்க தமிழ்ல தடை செய்யலாம், அதுக்காக ஹிந்தில நடிக்க விடாம செய்யேலுமோ. இல்லைத் தானே! எதையும் பிளான் பண்ணி செய்யுங்கோ, இல்லாட்டி இப்படித் தான் ஆளாளுக்கு பந்தாடுவானுகள்.

அசின் யாழ்ப்பாணம் வந்தவாவெல்லோ, படங்களைப் பாருங்களன்.






3 comments:

  1. வாழ்த்துக்கள்

  1. வாழ்த்துக்கள்! தாமதமானதற்கு மன்னிக்கவும்!

  1. வாழ்த்திய, வாழ்த்தும் உள்ளங்களுக்கு நன்றி.

Post a Comment