twitter


போக்கிரி படத்தில நெப்போலியன் கமிசனரா பொறுப்பேற்றதும் என்கௌன்டரில ரௌடிகளை போட்டு தள்ளுவர். இதே போல ஒரு விஷால் படமும் ஸ்டார்ட் பண்ணும். இந்த என்கௌன்டர் மாட்டரை நாங்க சினிமாவில தான் பார்த்திருக்கம், தமிழ் நாட்டில நேற்று முன்தினம் ஒரு ஸ்பெஷல் என்கௌன்டர் நடந்திருக்கு, படத்தில ஹீரோ செய்யுற வேலையை உண்மையா ஒரு போலீஸ் அதிகாரி செய்திருக்கிறார். இந்த இடத்தில் சில வாரங்களுக்கு முன் ரௌடிகளால் வெட்டி கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரையும் மறக்கேலாது, எதனையும் செய்ய துணிவு வேணும், படத்தில் விஜயகாந்த் , அர்ஜுன் மாதிரி சும்மா போட்டு தல்லேலாது.




















குற்றவாளிகளான கவியரசு, முருகன் ஆகியோரை, உதவி போலீஸ் அத்தியட்சகர் வெள்ளைதுரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளின் அதிரடியால், ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நேற்றைய இந்திய ஊடகங்களின் முக்கிய செய்தி, மதுரை நோக்கி பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவரை, போலிஸார்கலான தென்னரசு, கணேசன் மறித்தனர். அவர்கள் பைக்கை நிறுத்துவது போல் போக்குக்காட்டி, அவர்களை கத்தியால் குத்தி விட்டு, தப்ப முயன்றனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, வெள்ளைதுரை கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடிவந்தார். பைக்கில் தப்ப முயன்ற இருவரையும் அவர் , துப்பாக்கியால் சுட்டார். படுகாயமடைந்த இருவரையும், ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் இருவரும் இறந்தனர். காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி "செஞ்சுரி' போட்ட கவியரசுவும், முருகனும் தற்போது மதுரையில் உதவி கமிஷனராக உள்ள வெள்ளைதுரையின் தோட்டாக்களுக்கு இரையாகியுள்ளனர்.

இதேவேளை மணல் திருட்டை தடுக்கச் சென்றபோலீசாரை, மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதப்படை போலீசார் நான்குபேர் மணல் திருட்டு வண்டிகளை கண்காணிக்க சென்றனர். இவர்கள் சாதாரண உடையில் இரண்டு மோட்டார் சைக்கிள் களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த வழியே மணல் கடத்திச்சென்ற டிராக்டரை மடக்கினர். டிராக்டரில் இருந்த மூன்றுபேர் இறங்கி ஓடினர். டிராக்டரை போலீசார் பிடித்தது குறித்து, அவர்கள் அக்கிராமத்தில் தகவல் கூறினர். சுமார் 50 பேர் அரிவாள், ஆயுதங்களுடன் வந்தனர். ஆயுதங்களுடன் வந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், நான்கு போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. கும்பலாக வந்தவர்கள் நான்குபோலீசாரையும் சரமாரியாக தாக்கி, தரையில் உட்கார வைத்தனர். பின், அங்கிருந்த மின்கம்பங்களில் நால்வரையும் கயிற்றால் கட்டி வைத்து,அடித்து உதைத்தனர்.

இப்ப விளங்குதா.. சினிமா வேறு! வாழ்க்கை வேறு!















"நான் ரேஸுக்கு போன மாதிரி எஸ் ஜே சூர்யா நடிக்க போட்டார்" என நக்கலாக அஜித் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். காரணம் இருவரும் தங்கள் பாதையை மாற்றியதால் இழப்புக்கள் தான் அதிகம், வெற்றி இயக்குனராக வலம் வந்த சூரியா தோல்வி பட நடிகரானார். அஜித்துக்கு ஜனா, ஆஞ்சநேயா என வரிசையாக தோல்விப்படங்கள். 'ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது' எண்டுவினம்.

சென்னையில் நடந்த கார் ரேஸ் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் தோல்வியை தழுவினார். எம்.ஆர்.எப். ரேஸிங் சேலஞ்ச் 2010 போட்டியின் 3வது மற்றும் கடைசி சுற்று பந்தயம் சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் நடந்தது. இதன் எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் உள்பட 10 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கடைசி 2 கட்ட பந்தயங்கள் நேற்று நடந்தது. தலா 15 சுற்று கொண்ட இந்த பந்தயத்தில் காலையில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித் குமார், கடைசி நிமிடத்தில் காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பந்தயத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏமாற்றத்துடன் நடிகர் அஜித் குமார் ஷெட்டுக்கு திரும்பினார். இருப்பினும் பின்னர் அவர் போட்டிக்கு மத்தியில் சில ரவுண்டுகள் வலம் வந்தார்.




















முன்னதாக அஜித் கார் ரேஸில் பங்கேற்கும் ‌தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் இருங்காட்டுகோட்டையில் திரண்டிருந்தனர். அஜித் ஓட்டிய கார் பழுதானதால் அவர் பந்தயத்தில் இருந்து விலக நேரிட்டதை பார்த்த ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். "தல தோற்க மாட்டார். அவர் எப்பவும் ஜெயிக்கக் கூடியவர்" என்று ரசிகர்கள் கூச்சலிட்டனர். சில ரசிகர்கள் அங்கு கட்டப்பட்டிருந்த விளம்பர பேனர்களை கிழித்து எரிந்து ரகளையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை சமாளிக்க முடியாமல் போட்டி அமைப்பாளர்கள் திணறினார்கள். இதை தொடர்ந்து நடிகர் அஜித் குமார், போட்டி சுமூகமாக நடைபெற ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மைக் மூலம் வேண்டுகோள் விடுத்தார். அஜித்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் இயல்பு நிலை திரும்பியது.




















கல்கத்தாவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் சேவாக், சச்சின் சதமடித்து தூள் கிளப்பினார்கள் .
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
















முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த சேவக், சச்சின் ஜோடி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. பொறுப்புடன் ஆடிய சேவாக் , டெஸ்ட் அரங்கில் தனது 19வது சதமடித்தார். மறுமுனையில் அசத்திய நச்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின், 47வது சதம் கடந்தார். இந்திய அணி தற்போது 5 விக்கட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களை பெற்றுள்ளது.
















எங்கும் ஒழிக்கப்பட வேண்டியது தீவிரவாதமே! அருமையான மணல் சிற்பம்




















உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலிக்காமல் இருப்பவர்களை கண்டறிவது கடினம். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு தருணத்தில் காதல் வந்து, சென்றிருக்கும். ஜாதி, மதம், மொழியை கடந்து இரண்டு இதயங்கள் இணைவது தான் காதல். இத் தினத்தில் காதலர்கள் மட்டுமின்றி, திருமணம் செய்த தம்பதியர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து, தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.















காதலர் தினம் என்ற பெயரில் கலாசாரம் மீறப்படுவதைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில், நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று நடந்தது. திருப்பூர் பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன் நடந்த, "நாய் திருமண' நிகழ்ச்சிக்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து நாய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. பல்வேறு இன நாய் ஜோடிகளுக்கு, புரோகிதரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. கூடியிருந்த தொண்டர்கள், திருமண ஜோடிகளுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர். இதுகுறித்து இந்து முன்னணி கோட்ட ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார் கூறியதாவது: காதல் என்பது மிகவும் புனிதமானது. வள்ளுவரும், வாசுகியும் வாழ்ந்த புண்ணிய பூமியில், காதலர் தினம் என்ற பெயரில், ஆண்டுதோறும் ஒவ்வொரு நபர்களுடன் அட்டூழியம் நடக்கிறது. உண்மையான காதலர்கள் இவ்வாறு கொட்டம் அடிப்பதில்லை. சமுதாயத்தில் கலாசாரம் மற்றும் பண்பாட்டை பாழ்படுத்தி வரும் இத்தகைய காதலர் தின கொண்டாட்டம் தேவையில்லாதது. இத்தகைய கலாசார சீர்கேடுகளை களைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்து முன்னணி, நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கிறது. காதலர் என்ற பெயரில் பல நாய்கள் செய்யும் வேலையைத் தான், இளைய சமுதாயத்தில் சிலர் செய்து வருகின்றனர். இன்று நாய்களுக்கு திருமணம் செய்வது போலவே, நாளை (இன்று) தாறுமாறாக சுற்றித் திரியும் காதல் ஜோடிகளுக்கு, அதே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படும். அதற்காக, பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கிஷோர்குமார் கூறினார்.











இந்திய பாலியல் சங்கம், இந்திய பாலியல் மருத்துவ மையம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக உளவியல் துறை, மானுடவியல் துறை இணைந்து நடத்தும் ஐந்தாவது சர்வதேச பாலியல் மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது. சர்வதேச பாலியல் சங்க முன்னாள் தலைவர் அடைக்கண் கணேசன் மாநாட்டை தொடக்கி வைத்தார்.
மாநாட்டில் இந்திய பாலியல் மருத்துவ மைய இயக்குனர் காமராஜ் உரையாட்டுகையில் நாட்டில் சாமியார்கள் பெண்களிடம் பாலியல் தொல்லை செய்வது, பெரியவர்கள், குழந்தையிடம் சில்மிஷம் செய்வது, எய்ட்ஸ் நோயின் தாக்கம், ஆண்மைக்குறைவு போன்றவை அதிகரித்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் செக்ஸ் குறித்த சரியான புரிதல் வேண்டும். தற்போது கள்ளக்காதல், விவாகரத்து போன்றவை அதிகரித்து வருகிறது. இவை தவிர்க்கப்பட, மூளையின் செயல்பாடுகளின் போது அன்பு, காதல் மற்றும் வெறுப்பு ஆகிய செய்கைகளின் போது என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தனர். கணவன் - மனைவி இருவரும் தங்களுக்குள்ளே பரஸ்பரம் காதலை தூண்டி வாழ்ந்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. இந்த கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது தான் காதல் வங்கி. மேலும் செக்ஸ் கல்வி கொண்டு வருவதன் அவசியம் குறித்தும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், பாலியல் செயல்பாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுத்துவதும் குறித்தும் இம்மாநாட்டில் அலசப்படும். இவ்வாறு காமராஜ் பேசினார்.













‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’. ‘வாழ்கை என்பது ஒரு வட்டம், இங்க ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்கிறவன் ஜெயிப்பான்’ இதுகள் தான் இப்ப இலங்கையில நடந்திட்டு வருது. “24 மணத்தியாலங்கள் தேவையான மருந்து இல்லாமல் இருந்தார் பொன்சேகா”. அனோமாவுடன் பார்வையிடச் சென்ற வழக்கறிஞர் கூறுகிறார். என இன்றைய ஊடகங்களில் செய்தி வெளியாகியிருப்பதனைக் கண்டேன். இதற்கு முன்னர் தனது கணவனை பார்வையிட அனுமதிக்குமாறு எல்லோரிடமுடம் கோரி இருந்தார் அனோமா. ஐயகோ…! இது என்ன கொடுமை.

வன்னியில் எத்தனை பேர் தமது தந்தையை, தாயை, அண்ணாவை, தம்பியை, அக்காவை, தங்கையை, கணவனை, மனைவியை பார்வையிட அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மட்டுமன்றி எத்தனையோ அமைப்புக்களிடம் கோரியிருந்தும் பயனளிக்காமல் இருந்தது.

புலிகளை அழித்து ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றோம் என்று கூறிக் கொண்டு தமிழ் இனத்தையே கொன்று குவித்து நாசமாக்கினர். எத்தனையோ தமிழ் மக்களின் அவலக் குரல்கள் அப்போது யாருடைய காதிலும் ஒலிக்கவில்லை. இப்போது சரத்பொன்சேகாவின் மனைவி கண்ணீரும் கம்பலையுமாக ஊடகங்கள் முன் தோன்றியவுடன் அனைவரது பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது.




















போர் கால பகுதியில் மீட்கப்பட்ட மக்களை நலன்புரி முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர். அந்த மக்களிற்கு ஒரு போத்தல் தண்ணீர்கூட வழங்குவதற்கு அனுமதிக்கவில்லை. எத்தனையோ மாதங்கள் சென்றும் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று இவருக்காக எத்தனையோ பேர் முன் வருகின்றார்கள். இன்று நிகழ்ந்தது சதி இல்லை, நேற்று நடந்த பழி பாவங்கள் தான்.

இவருக்கு மட்டும்தான் என்று நினைக்காதீங்க… அண்ணன் இன்று உள்ளுக்கு என்றால் தம்பிமார் நாளைக்கு லைன் கட்டி உள்ளுக்கு வரத்தானே வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம். அண்ணன் உண்மையைக் கக்க லைனில வரப்போகும் தம்பிமாரை பொறுத்து இருந்து பாருங்களேன்.

சரத்பொன்சேகாவின் உயிர் என்பது பெரிசு, தமிழ் மக்களின் ஒவ்வொரு உயிரும் தூசா? ஒவ்வொரு மனிஷருக்கு ஆளுக்கு ஒரு நீதிதானே வழங்கப்படுகிறது. இது எல்லாம் சகஜம் தானே.










பொன்சேகராவை ஏன் கைது செய்தனர்?
  • ஊழலை வெளிப்படுத்திடுவேன் என்று கூறியதாலா?
  • இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாலா?
  • ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இட்டதாலா?
  • நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்ற பயமா?
  • இவற்றின்; கூட்டு உள், உறக்கங்கள் வெளிவந்து விடுமோ என்ற பயத்தினாலா?

அரசாங்கம் தெரியாத்தனமா பொன்சேகராவை தூக்கி உள்ளுக்கிள்ள போட்டிட்டினம். அரசாங்கம் எப்படியும் பொன்சேகாவை தமக்கு சாதமாக்கி அதாவது தம்முடனே அவரை வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவார்கள். ஏனெனின் தம்முடைய உள் பூசல்கள் அனைத்தையும் வெளிவிடாமல் பேணிக் கொள்வதற்காக. ஆனால் இது எந்தளவில் சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்றே கொள்ளும் என்பதற்கு காலம் படிப்பித்த நல்ல உதாரணம். கூட்டுகள் பிரிவதுதான் நல்லது. ஏனெனின் பாம்பின் கால் பாம்பு அறியும். ஆட்டுபவரும் நாளை ஆட்டங்காணலாம்.