twitter


ட்ரிப் போயிருக்கீன்களா? எடுத்தவுடனே ட்ரிப் போனிங்களா என கேட்கிறேன் என பார்க்கிறீன்களா? இதில தானே விடயமே இருக்கு. என்ன வில்லங்கம் என கேட்கிறீர்களா? ஒரு வில்லங்கமும் இல்லை வாங்க சேர்ந்து வாசித்து உங்க ட்ரிப் அனுபவங்களையும் சொல்லுங்க. (யாழ்ப்பாணத்தில் வசித்தவர்களுக்கு அதிகளவாக ஒத்து வரும் என நினைக்கிறன்)

அதிகமாக அஞ்சாங் கிளாசில ஒரு ட்ரிப் ஒன்னு போயிருப்பீங்க என நினைக்கிறன். அதுவும் பாடசாலையால தான் கூட்டி கொண்டு போயிருப்பாங்கள். ஸ்கொலசிப் எக்ஸாம் எடுத்த மாணவர்களுக்காக ஒரு ட்ரிப். ஐஞ்சு நாள் பத்து நாள் இல்லைங்க. அது ஒரு நாள் ட்ரிப் தான்.

அந்த ட்ரிப்பை நினைத்து எத்னையோ நாள் தூங்காமல் அந்த நாள் எப்போ வரும் என எதிர்பார்த்து காத்து இருந்த காலமும்; உண்டு. அந்த நேரத்தில ஒரு நாள் ட்ரிப் எனின் ஏதோ லண்டன், கனடா போற மாதிரி.

ட்ரிப் அன்று காலையில அம்மா எழுவதற்கு முதல் எழும்பி அம்மாவையே நாங்கள் எழுப்பி விடுவோம். மற்றும்படி எவ்வளவு மல்லுக்கட்டி அம்மா எங்களை எழுப்பினாலும் ம்கூம்…. எழும்பவே மாட்டோம்.

அம்மா சாப்பாடு செய்து டிபன்பொக்ஸில சாப்பாட்டினை வைத்து யூஸ் கரைத்து மிக்ஸர், பகோடா என எவ்வளவு தின் பண்டம் தேவையோ அவ்வளவையும் வைத்து பத்தாக்குறைக்கு 2 பணிஸையும் பாக்குக்குள்ள அடைந்து வடிவா சாப்பிடு பிள்ளை என தந்து விடுவினம ஏதோ பத்து பதினஞ்சு நாள் பிரிந்து இருக்கிற மாதிரி)

அதுமட்டும் அல்ல 50ரூபா காசும் எங்கட கையில தருவாங்கள். பெரிய சந்தோஸம். நான் படிக்கிற காலத்தில 50ரூபா என்பது எனக்கு பெரிய காசு மாதிரித்தானுங்க. எல்லா பெத்தவர்களும் எங்களிடம் கூட வரும் வகுப்பாசிரியர்கிட்ட பிள்ளை ஏதாவது ஆசைப்பட்டால் வாங்கி குடுங்க என அவரிடம் சிறியளவிலான பணத்தினை கொடுத்து விடுவார்கள். சிறிது மனக்கஷ்டம் இருக்கும்தான் எங்களிடம் தராமல் வகுப்பாசிரியரிடம் கொடுப்பது. அந்த நேரத்தில அதுவா முக்கியம்? ட்ரிப் போனால்சரி……….

யாழ்ப்பானத்தில ட்ரிப் எனின் எங்கையங்க கூட்டிக்கொண்டு போவினம்? வல்லிபுரக்கோவில,; சந்நிதி கோயில் கீரிமலை இப்படியான பிரதேசங்களுக்குதானுங்க. இந்த இடங்களுக்கு போறதுக்கு தானுங்க ஒரு மாதமாக ஆர்ப்பாட்டம் செய்வது.

அவ்வளவு கஸ்ரப்பட்டு வெளிக்கிட்டு பஸ்சுக்குள்ள சத்தி எடுத்து களைத்து தூங்கி விடுவார்கள் சில பேர். பஸ்காரனுக்கு “சீ” என்று போய் விடும். அந்த சின்ன வயசில பஸ்சிலை எல்லாம் பயணம் செய்வது புதுசுதானே. பஸ் முன் பக்கம் சென்று கொண்டிருக்க மரங்கள் வாகனம் எல்லாம் பின்னோக்கி செல்வது போல இருக்கும். “இங்க பாரேன் எங்கட இடத்தில மரம் எல்லாம் நிக்கும். ஆனால் இங்க மரம் எல்லாம் ஓடுது. என மற்றவர்கட்கு விளக்கம் வேற வைப்போம். அந்த நேரத்தில அதுதானுங்க அறிவு.

பின்னர் 9ஆம் ஆண்டில ரியூசனால் ஒரு ட்ரிப் ஒன்னு போயிருப்பீன்களே. அதில சில பேர் போயிருக்கமாட்டார்கள். ஏனெனில் வீட்டில அனுமதி கிடைக்காது. எல்லாரும் சேர்ந்து போறது (ஆண்கள், பெண்கள்) போக வேணாம் என ஒரு பூகம்பம் தோணும். தேவை எனின் அந்த இடத்துக்கு நாங்கள் கூட்டிக்கொண்டு போறம் என்பார்கள். இவையளுடன் போனால் எங்கே என்ஜோய் பண்ணுவது? சொன்னால் புரியவா போகுது? தலையை ஆட்டி விட்டு பேசாமல் இருப்போம்.

சில பேருக்கு வீட்டில இலகுவாக அனுமதி கிடைத்து விடும். அவர்கள் ட்ரிப்புக்கு செல்ல ஆயத்தமாவார்கள். திரும்பவும் அதே இடங்கள்தான். என்ன இன்னும் ஒரு இடம் வித்தியாசமாக இருக்கும். அது கடற்கரை தான். போய் வந்தவர்கள் அதைப்பற்றி கூறும்போது போகாதவர்கட்கு ஒரு மாதிரித்தான் இருக்கும்.

யாழ்ப்பாணத்தில நிறைய இடங்களுக்கு செல்வதற்கு அந்த நேரத்தில தடை விதித்து (அனுமதி இல்லை) இருந்தார்கள். அதனால் பல இடங்களுக்கு செல்ல முடியாது இருந்தது. அந்த நேரத்தில அனுமதி கிடைத்து இருப்பின் சந்தர்ப்பங்கள் கிடைத்த வேளை பயன்படுத்தி இருக்கலாம். அந்த நேரத்தில் சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு…………..
“இப்போ யாழ்ப்பாணத்துக்கு ட்ரிப் ஒன்னு அரேஞ் பண்ணுவோமா” என பலர் பலரிடம் கேட்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்து இருக்கும்.

அதன் பிறகு பாடசாலைக்கல்வி முடித்ததும் அடுத்த கல்விக்காகவோ அல்லது வேலை வாய்ப்புக்காகவோ வேறு இடங்களுக்கு சென்று இருப்பீர்கள். அந்த நேரம் நீங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்து இருப்பீங்க இப்போ……..
இப்போது செல்வது ட்றிப்புக்காக இருந்தாலும் ஒவ்வொரு பிரதேசங்களும் அவர்களது வாழ்க்கை முறைகளும் எப்படி இருக்கும் என வித்தியசமான வியூகத்தில பார்ப்பீர்கள் என நினைக்கிறன்.

நாங்களும் கல்விக்காகத்தான் ஒரு ட்ரிப் சென்றோம். அது ஒரு நாள் ட்ரிப் இல்லைங்க நாலு ஐந்து நாள் ட்ரிப்புங்க. சின்ன வயசில போன ட்ரிப் மாதிரி இல்லைங்க. வளர்ந்தவுடன் போவோம் பாருங்க அதிலதானுங்க இருந்தது ஒரு சந்தோஷம்.

யாழ்ப்பாணத்திலையே எத்தனையோ இடங்கள் இருக்கு அதை எல்லாம் பார்க்காமல் விட்டு விட்டு இப்போ பிற இடங்களுக்கு சுற்றுலா மேற்கொள்கின்றோம். நாம் பிறந்து வளர்ந்த இடங்களுக்கு பக்கத்தில உள்ள ஊர் கூட சிலருக்கு ஒழுங்காக தெரியாது.
ட்ரிப்பை பற்றி எழுத வந்ததற்கு காரணம் இருக்குங்க. ஒன்று நான் வேலை செய்யும் இடத்தில் ட்ரிப் ஒன்னு அரேஞ் பண்ணுகின்றார்கள். இரண்டாவது விடயம் இன்றைய செய்தி தானுங்க.. வடக்கு மாணவர்களுக்கு இலவசமாக சுற்றுலா மேற்கொள்ள உள்ளதாக வடமாகான ஆளுனர் மேஜர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்து இருந்தார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 500பேரை இவ்வாறு அழைத்து செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்கட்காக 16 இலட்சம் ரூபா நிதியை கீழ் 8 நாளைக்கு வெளி மாவட்டங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர்.

முதல் கட்டமாக 250 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் தமது முதலாவது சுற்றுலா பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளனர். தரம் 8 முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களே இந்த இலவச சுற்றுலாவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ம்….. என்ன செய்வது? அதில நான் இல்லையே……

சுற்றுலாவின் போது மாணவர்கள் பாராளுமன்றம், நூதனசாலை, உயர் கல்லூரிகள், அனுராதபுரம், காலி, மாத்தறை, கதிர்காமம், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளனர்.


எதற்காக அழைத்து செல்கின்றார்கள் இதற்கான பின்புலம் என்ன என்பது எல்லாம் வேறு. ஆனால ட்ரிப் போகிறார்கள்.

இப்படி எல்லோரும் ட்ரிப் என வெளிக்கிடும்போது பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் ட்ரிப்பினை அரேஞ் பண்ணி நல்ல இடத்தினை தெரிவு செய்து ஏன் ட்ரிப் ஒன்று போகக்கூhது…………? முடிந்தால் ட்ரைய் பண்ணி பாருங்க பதிவர்களே………

6 comments:

  1. we can go.....

  1. உங்களுடைய இந்த பதிவினை மிகவும் இரசித்தேன். என்னுடைய பழைய ஞாபகங்களை மீட்டிபார்க்க வைத்துவிட்டது இந்த பதிவு. நான் வேலைசெய்ய தொடங்கியபின்தான் இலங்கையில் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு செல்ல முடிந்தது. இன்னும் கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலையும்தான் மிச்சம் என்று நினைக்கிறேன்.அங்கும் விரைவில் சென்றுவிடுவேன் உங்களுடைய சுற்றுலா தொடர்பாக பலருடன் கலந்தாலோசிக்க வேண்டும் பதிவர் சந்திப்பு ஒன்றை அண்மையில் ஒங்கு செய்தால் இதுபற்றியும் கதைக்கலாம்

  1. போகத்தான் வேணும் இப்ப இல்லை, யோசிப்பம்....

  1. அருமை பதிவு .........வாழ்த்துகள்

  1. ஆமால்ல...
    உங்களுக்கு 50ரூபா தந்திருக்காங்களே பெரியமனசுக்காரய்ங்க... எனக்கு 5ம் ஆண்டில் கையில் தந்தது 20ரூ(சாப்பிடுறதுக்கு காசுவேணும்னா கேளு எது வேணாலும் பண்ணித்தரேன் கடைல சாப்பிட்டா ஒடம்புக்காகாதுன்னு தத்துவ வௌக்கம் வேற..)
    அதுவும் செல்லசன்னதில நூல் கட்டுறதுக்கு (தலைக்கு 5ரூ) நண்பர்களுக்கு கடன் கொடுத்ததில காணாமப்போயிடிச்சு(பயபுள்ளங்க இன்னும் திருப்பித்தரவேயில்ல..)
    நிலாவரை கிணறு திக்கம் அண்ணா பாம் எண்டெல்லாம் பல இடங்கள காட்டினாங்க இன்னிக்கு உலகின் 7அதிசயங்களுக்கு ரூர் போனாகூட யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ரூர் மாதிரி இனிக்குமா...




    பசுமையை மீட்டும் நல்லதொரு பதிவு தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

  1. அருமை... பயணங்கள் முடிவதில்லை

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

Post a Comment