“பள்ளிக்கூடத்திற்கு வருவது விளையாடுவதற்காகவா? ஓடுங்கோ ஓடிப்போய் வகுப்பறையில் இருங்கோ. சோடி சோடியாய் கதைப்பதற்கும் அலம்பி திரிவதற்கும் பள்ளிக்கூடமா உங்களுக்கு கிடைத்தது?” என சிலாபம் சென் பெனடிக் பாடசாலை அதிபர் பெனடிக் அன்ரனி ரொஜர் மிரான்டர் தடி எடுத்து கலைத்துக் கொண்டிருந்தார்.
பாடசாலை எனின் கற்றல் கற்பித்தல் போன்றன நடை பெற வேண்டிய இடமாகத்தான் அமைய வேண்டும். இப் பாடசாலைகளில் கல்வியை வழங்குவது மட்டும் அல்லாது இன்றைய காலங்களிற்கு ஏற்ப பொருந்தி வாழ்வதற்கும் அறிவினை வளர்ப்பதற்காகவும் சமூகத்துடன் ஒன்றுபடுவதற்கும் தகுதிப்பாட்டினை வழங்குவது இப்பாடசாலைகளே. அது மட்டுமல்லாது இந்த நாட்டில் நற்பிரஜையாக வாழ்வதற்கு ஒவ்வொரு இளம் தலை முறைகளையும் வளர்த்த விடுவதற்கான உத்தரவாதத்தினை வழங்கி நிற்கிறது.
“அண்மை காலங்களில் அன்றாடம் பத்திரி;கைகளில் மாணவர்களே கொலை செய்வதாகவும் கப்பம் கோருவதாகவும் தான் பத்திரிகைகளில் அன்றாடம் செய்தி வருகிறது. இவ்வாறான சம்பவங்களிற்கு மாணவர்களே பொறுப்பு எனும்போது பாடசாலைகள் மாணவர்களை எந்த அளவிற்கு வளர்த்து விடுகிறது? அவ்வாறு எனின் மாணவர்களை வளர்த்த எடுப்பதில் பாடசாலைகள் தோல்வி கண்டுள்ளதா?” என கேள்வி எழுப்பகிறார் மீனவத் தொழிலாளியான ராஜபவன்.
இதற்கு பெனடிக் கல்லுரி ஆசிரியர் அன்னவாகினி “பாடசாலை மாணவர் சமூகத்தை ஓரளவேனும் நல்ல பழக்க வழக்கத்துடன் வளர்த்து விடுகிறது. கல்வியை முடித்து விட்டு சிறிது காலம் பெறுபேறிற்காக காத்து இருக்கும் போதுதான் தீய பழக்க வழக்கத்திற்க்கு உள்வாங்கப் படுகின்றார்கள் பாடசாலைகசளில் கல்விதான் முக்கியமாக வழங்கப்படுகின்றது.” இவ்வாறு முக்கியம ;பெறும் கல்வியானது சிலாபத்தில் வீழ்ச்சி அடைந்து காணப்படுவதை நாம் செய்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
“பாடசாலைகளுக்கு தேவையான உட்ககட்டுமான வசதிகள் பலவீனமாக் காணப்படுகின்றது. கற்ப்பித்தலை மேற்க கொள்வதற்க்கான வகுப்பறைகள். தளபாட வசதிகள் இல்லை உயர்தர மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு படிக்கும் பிள்ளைகளின் தளபாடங்களிள் இருந்துதான் தமது கல்வியை மேற்க்கொள்கின்றனர். ஒரு சிறு பிள்ளையின் மேசையில் உயர்தர மாணவர் இருந்து படித்தால் எவ்வாறு இருக்கும்?” என்கிறார் கல்லூரி ஆசிரியரான எலிசபெத் பாடசலையில் உட்க்கட்டுமான வசதிகள் இல்லை எனின் அங்கு கற்ப்பித்தலை மேற்க்கொள்வது எப்படி?. மாணவர்களின் மனநிலையும் எந்தளவு தூரத்திற்க்கு மாறிவிடும்.
சிலாப தமிழ் பாடசாலைகளிலே சென்பெனடிக் அதன் அதிபர் பெனடிக்ற் அன்ரனி ரொஜர் மிராண்டாவின் கருத்தானது “ ஆசிரியர் பற்றாக்குறை என்பது அதிகளவாகக் காணப்படுகின்றது. பள்ளைகளின் முழு எண்ணிக்கையாக 639 மாணவர்கள் காணப்படுகின்றார்கள். இதலே 319 மாணவிகளும் 320 மாணவர்களும் காணப்படுகின்றனர். மொத்தமாக 22 ஆசிரியர்கள்தான் காணப்படுகின்றார்கள். ஆனால் எமது பாடசாலைக்கு இன்னமும் 13 ஆசிரியர்கள் தேவை. அதிலும்
தொண்டர் ஆசிரியர்கள் 07 பேர்தான் உள்ளார்கள். அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட ஆசிரியர்கள் 15 பேர்தான் அரசினது ஒத்துழைப்பு சறிது கூட எமது பாடசாலைக்கு இல்லை. இது பெரிய கவலைக்குரிய விடயமாக உள்ளது.
போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்றாலும் சென்ற முறை உயர்தரப் பரீட்சையின் ஊடாக பல்கலைக் கழகத்திற்க்கு 06 மாணவர்களுமஇ; கல்வியியற் கல்லூரிக்கு 03 மாணர்களும் சென்றுள்ளார்கள். சிறிதளவேனும் மாணவர்களை மேற் படிப்பிற்க்காக அனுப்பி வைக்கினறோம் என்பதில் சந்தோசம் அடைகின்றோம். அதுமட்டும் அல்லாது வருகின்ற புலமைப் பரிட்ச்சையிலும் 05 மாணவர்கள் சித்தி எய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். 10 -15 வருடங்களாக எந்த மாணவர்களும் பல்கலைக்கழகம் சென்றதும் இல்லை. ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்ச்சையில் சித்தி அடைந்ததும் இல்லை. சென்ற வருடத்தில் இருந்துதான் ஓரளவு இப்பாடசாலை முன்னேறி உள்ளது.
பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லை எனினும் மாணவர்களின் செயற்ப்பாட்டிற்க்கு எவ்வித குறைபாடும் இல்லாமல் அவர்களுக்குத் தேவையானவற்றை எம்மால் முடிந்தளவு அவர்களுடைய செயற்ப்பாடுகளை வளர்த்துள்ளோம். மேலதிகமாக நாமும் ஆசிரியர் மூலமும் அதனை பூர்த்தி செய்து வருகின்றோம். ஆனால் எல்லா மாணவர்களுக்கும் உரிய தேவைகளை எம்மால் பூர்த்தி செய்ய முடியாது உள்ளதாக இருப்பினும் ஓரளவாவது எம்மால் சமாளித்துச் செல்லக்கூடியதாக உள்ளது எனகிறார் அதிபர்.
“அதிபர் ஆசிரியர் கூட 40 வருடங்களுக்கு முன்னர் அக்கறை காட்டிய மாதிரி இன்றைய கால கட்டத்தில் காட்டவில்லை கல்வியை கட்டி எழுப்புவதற்க்காகவே அக்கறையாகவும் ஆழுமையாகவும் பாடசாலைகளுடனே நேரம் செலவிட்டு பாடசாலைகளின் குறை நிறைகளை ஆராய்ந்து குறைகளுக்கு தீர்வு கண்டு பாடசாலைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இன்று வாய் பேச்சளவில்தான் எல்லாம் காணப்படுகின்றதே ஒழிய செயற்ப்பாட்டளவில் எதுவும் இல்லை. மாணவர்களிற்க்கு செயற்ப்பாடுகளை வழங்குகின்றோம் என கூறுகின்றார்கள் ஆனால் அதில் போதிய அளவு திருப்தி இல்லை” எனகிறார் பாடசாலை நலன் விரும்பி தோமஸ் அல்விஸ்.
பாடசாலை கணித பாட ஆசிரியர் இதனை முற்றிலும் மறுக்கின்றார் “05 வருடங்களுக்கு முன்னர் தோமஸ் கூறியது உன்மையாக இருக்கலாம். தற்ப்பொழுது எதுவிதமான குறைபாடுகளும் இல்லை. இப்பாடசாலையில் கணணிகள் உன்டு. அதற்க்கான ஆசரியர்கள் இல்லை ஆனால் நாம் அப்படியே விட்டு விடவில்லை கணணி ஆசரியரை வெளியில் இருந்து எடுத்த படிப்பிக்கின்றோம். மாகாண சபை அமைச்சர்கள் மூலம் பாடசாலைக்கு சிறு சிறு உதவிகள் கிடைத்து உள்ளது. அவ் உதவியிலேயே எமது பாடசாலைக்கு நிரந்தரமான 02தமிழ் ஆசிரியர்களாக உள்ளனர். எமது பாடசாலையை அரசாஙகம் பாராமுகமாக இருப்பதையிட்டு நாம் கவலை அடைகின்றோம்.
எமது பாடசாலையில் வளப்பற்றாக் குறையும் ஆசிரியர் பற்றாக்குறையும் பூர்த்தி செய்வதாக இருப்பின் எமது பாடசாலை கல்வியில் உயர்ந்து காணப்படும்.” ஒரு பாடசாலைஇ ல்வி அறிவில் முன்னேற வேண்டும் எனின் ஆசிரியர்களே முழுமையாக பாடுபட வேண்டும் அவ் ஆசிரியர்களில்தான் ஒவ்வொரு மாணவர்களினது கல்வியும் பழக்க விழக்கங்களிலும் தங்கியள்ளது. இவ்வாறு முக்கியம் வகிக்கும் பாடசாலைகளிலே ஆசிரியர்கள் தமிழ் பாடசாலைகளிள் இல்லை எனின் அங்கே கல்விக்கு ஏது முன்னேற்றம்.? ஆசிரியர்கள் போதியளவில் இல்லை எனபது தமிழ் முஸ்லிம் பாடசாலைகளிலே பெரியதொரு பிரைச்சினையாகக் காணப்படுகின்றது.”
“கடந்த 10 -15 வருடங்களில் சிலாப கல்வி அபிவிருத்தியினை மைய்யமாகக் கொண்டு ஆசிரியர் இடமாற்றக் கொள்கைகள் ஆசிரியர் நியமனம் ஆசிரியர் ஒதுக்கீடு என்பன சரியான அடிப்படையில் இடம் பெறவி ல்லை. இதையே மேல் மாகாணத்துடனேயும் வட மாகாணத்துடனேயும் இவ் ஆசிரியர் தொகையை ஒப்பீட்டுப் பார்த்தால் மிகப் பெரியதொரு சரிவை காணலாம். அத்துடன் ஆசிரியர் தொகையும் வித்தியாசமாகவும் காணப்படும். நகரத்தில் ஆசரியர் தொழில் செய்தால்தான் பிரபல்யமாக இருக்கும் அபிவிருத்தி இல்லாத பாடசாலைகளில் கடமை ஆற்றினால் மதிப்புக் குறைவாக இருக்கும் என ஆசரியர்கள் எம்மிடம் கூறுகின்றார்கள்.
இவ்வாறு ஆசிரியர்கள் காணப்படும் போது இதற்;கு அரசாங்கமும் ஆதரவாக உள்ளது. முகமன் பார்த்து செயற்படுகின்றது. ஆரமபத்தில் ஆசிரியராக கடமை செய்ய வருபவரை வெளி மாவட்டங்களிலே 05 வருடங்கள் கடமையாற்ற வைக்க வேண்டும். அதிலும் பின் தங்கிய பாடசாலைகில் கற்ப்பித்தலை மேற்க்கொள்ள வைக்க வேண்டும். எந்த விதமான பாரரபட்சமும் பரர்க்கக்கூடாது அரசாஙகம்” எனக் கூறுகின்றார் பாடசரலை அபிவிருத்தி சங்க அங்கத்தவரான டேவிட் றொஸான்.
குறிப்பாக மேல் மாகாணத்துடன் தமிழ் கல்வியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாரியதொரு வித்தியாசத்தை காணக் கூடியதாக உள்ளது. கொழும்பு கல்வி என்பது விசேசமான கல்வியாகத்தான் உள்ளது. சிலாப சமூகத்தில் இருக்கக்கூடிய புத்திஜீவிகள் கல்வி மான்கள் வலுவானவர்களாக இல்லை ஏனோ தானோ என வாழக்கூடியவர்களாகத்தான் உள்ளனர். அதுமட்டும் அல்லாது மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்க்கு சென்றுள்ளவர்கள் மக்களது தேவைகளை மக்களது பிரைச்சினைகளை பகிரங்கப்படுத்தி அதற்;கொரு தீர்வு கொண்டு வந்து பாடசாலை சிறுவர்களை சாதனை படைக்கக்கூடிய முதுகெழும்பு இல்லாத அமைச்ச ர்கள்தான் சிலாபத்தில் உள்ளார்கள எந்தவித வசதிகளும் பாடசாலையில் இல்லை” என்கிறார் பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தவரான ஜெயா.
சிலாபத்தில் இன்று தமிழ் கல்வியில் பின்னோக்கி நிற்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறையே காரணம். நான் படிக்கும் காலத்தில் எல்லாம் தேவையான அளவு ஆசிரியர்கள்காணப்பட்டார்கள்.இன்று தமிழ் ஆசிரியர்கள் இல்லை. வகுப்பறையில் பாடம் நடக்காது விடின் ஏன் பாடம் நடக்கவில்லை எனக் கேட்டால் அந்த பாடத்துக்கு ஆசிரியர் இல்லை. இவ்வாறு கற்கின்ற பாடங்களுக்கு ஆசிரியர் அறவே இல்லை எனின் மாணவர்களது கல்வி நிலை பின்னோக்காமல் முன்னோக்கியா செல்லும். புpன்னர் கல்வியின் தரம் எப்படி முன்னேறுவது” என கூறுகின்றார்.
பழைய மாணவியான 40 வயதுடைய ஜென்ஸிகா மரியதாஸ்“கல்வி வீழ்ச்சி தமிழில் கல்வி கற்க்கும் மாணவர்கள் படித்து முடிந்ததும் பழய மாணவர்கள் என்று சிறிதும் சிந்திப்பத இல்லை பாடசாலைகளில் தேவையான வசதிகளோ அல்லது மாணவர்களது முன்னேற்றம் கருதி அவர்களுடைய செயற் ;பாட்டிற்க்கு இயன்ற அளவு உதவிகளை பங்கேற்ப்பதுஇல்லை பாடசலைக்குத்தேவையான பிரச்சினைகளை ஒனறாகக்கூடி கதைத்து அப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது இல்லை. பழய மாணவர்களே ஒன்றும் செய்யாத போது வேறு யார் தமிழ் பாடசாலைகலை முன்னேற்றுவதற்க்கு முன்வருவார்கள். எல்லா பழய மாணவர்களும் வாயால்தான் எதையும் சொல்வார்களே தவிர செயளால் எதையும் செய்யமாட்டர்கள்” எனகிறார் 48 வயதுடைய கல்வியாளரான அன்ரோனி.
“சிலாபத்திலிருக்கும் மூன்று மதங்களையுடைய பாடசாலைகளும் ஒற்றுமை இல்லை. சுமுகமான உறவுகளை வைத்துக் கொளவது இல்லை. மூன்று பாடசாலைகளும் தனித்தனியே இயங்குகிறது. ஒருவருடைய கருத்தை ஒருவர் ஏற்பது இல்லை. அதே மாதிரி அவருக்கு எதிராக மாற்று கருத்துக்களை கொண்டு வருவது. இவ்வாறான நிலையில் எவ்வாறு கல்வியில் வளர்ச்சி ஏற்படுவது? ஆனால் என்றுமே 3 பாடசாலைகளும் நேருக்கு நேராக முரண்பட்டது கிடையாது” என்று ஆசிரியர் ஆலோசகர் கந்தசாமி. கூறினார்.
சிலாப பிரதேசத்திற்கு தமிழ் ஆசிரியர்கள் குறைவாக காணப்படுகின்றார்கள் .விஷேசமாக உயர் தரத்திற்கு ஆசிரியர்கள் இல்லை என்றே கூறலாம். ஆவ்வாறு உயர்தரத்திற்கு ஆசிரியர்கள் உள்ளார்கள் எனின் அவரது முழு ;தகவல்களையும் அதிபர் தந்தார் எனின் அவ ஆசிரியரை நியமிக்க ஏற்பாடு செய்கின்றோம். எம்மிடம் ஆசிரியர்கள் இல்லை. இல்லாதபோது ஆசிரியரை எவ்வாறு வழங்குவது?” என்கிறார் சிலாப கோட்டக் கல்வி அதிகாரி.
சிலாப பிரதேசமானது அசமத்துவமான வளர்ச்சியாக தான் காணப்படுகிறது. இது தமிழ் கல்வியிலும் அதிகளவான செல்வாக்குச் செலுத்துகிறது. இதை நிவர்த்தி செய்வதற்காக பல தீர்வுத்திட்டங்களை அரசாங்கம் கொண்டு வரலாம். 5 ஆண்டு அல்லது 10 ஆண்டு கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பல மாணவர்களை பல்கலை கழகத்திற்கும் கல்வியற் கல்லுரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இளம் தலைமுறைகளிற்கு இவர்களை முன் மாதிரியாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாது ஆசிரியர்கள் மீதும் அதிகளவு அக்கறை கொள்ள வேண்டும் பின் தங்கிய கிராமங்களில் வேலை செய்யும் ஆசிரியர் களுக்கு சம்பளம் சிறிதளவேனும் அதிகமாக கொடுக்க வேண்டும். அவர்களுடைய சிறிய செயற்பாட்டையும் பெரிதாக எடுத்து பாராட்ட வேண்டும். கல்வித்தகுதி உடைய அதிபர்களை நியமிக்க வேண்டும். ஒரே பாடசாலையில் கல்வி கற்று அதே பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுத்து அவரை உற்சாகப்படுத்த வேண்டும். ஆரசியல் வாதிகளை சிலாப பிரதேசம் மீது திசை திருப்பி கல்வி வளர்ச்சியைக் கட்டியெழுப்பினால் அப்பிரதேசம் கல்வியில் சிறந்து விளங்கும்.