undefined
undefined
undefined
சரியாக நான்கு மாதங்களின் பின் ஒரு பதிவுடன் சந்திக்கின்றேன். அதுவும் 3ஆவது இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு நெருங்கும் வேளையில். (நானும் இலங்கைப் பதிவர் எண்டு காட்டோணும் எல்லோ!). அதிகரித்த வேலைப்பழுக்களால் பதிவுலகத்தை மறந்து விட்டேன்.
தமிழ்ச் சங்கத்தில் நடந்த முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டேன். 2ஆவது சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. மூன்றாவது சந்திப்பில் கலந்து கொள்வேனா என்பது 50 - 50 வாய்ப்பிலேயே இருக்கின்றது. அதனால் வருகையை உறுதி செய்யவில்லை. சந்திப்பு மாலையில் இடம்பெற்றால் எனக்கு வசதியாக இருந்திருக்கும். (ஒவ்வொரு பதிவர்களின் நேரத்தையும் தனித்தனியே கேட்க முடியாது தானே!) அதனால் சந்திப்பு சிறப்பாக இடம்பெற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். ஏற்பாட்டாளர்களினால் வழங்கப்பட்டிருக்கும் நிகழ்வு பற்றிய அறிவிப்பு கீழே...

நிகழ்வு: பதிவர் சந்திப்பு 2010
திகதி: 19-12-2010
நேரம்: காலை 09:31
இடம்: கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
நிகழ்ச்சி நிரல்
- அறிமுகவுரை
- பதிவர்கள் அறிமுகம்
- கலந்துரையாடல் 1 – கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.
- கலந்துரையாடல் 2 – தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.
- இடைவேளையில் இன்னிசை.
- கலந்துரையாடல் 3 – பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
- கலந்துரையாடல் 4 – பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
- பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.
- நன்றியுரை.
எனவே பதிவர்கள், பதிவு எழுத விரும்புபவர்கள், பதிவுலக வாசகர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வரவேற்கின்றோம்.
இந்த பதிவர் சந்திப்பை பற்றிய மேலதிக தகவல்களை நிரூஜா, வதீஸ், அனுதினன்,வரோ, அஷ்வின், பவன். ஆகிய ஏற்பாட்டு குழு அங்கதவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். வெளியூரிலிருந்து வந்து கலந்து கொள்ள விரும்புவோரில் தங்குவதற்கு இடவசதி தேவைப்பட்டால் 13ம் திகதிக்கு முன்னதாக அஷ்வின்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இலங்கைத் தமிழ் பதிவர் சந்திப்பு 2010 இற்கு Earthlanka நிறுவனத்தினர் அனுசரணை வழங்குகின்றனர் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

December 14, 2010 at 9:20 AM
சந்திப்பு சிறப்புற எனது வாழ்த்துக்கள்...