twitter


ஏனைய பதிவர்களுக்கு எப்படி கடந்த இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு போனது என தெரியவில்லை. ஆனால் நான் உட்பட அதிகமான பதிவர்கள் என்ஜோய் பண்ணி இருப்பார்கள் என்று மட்டும் எனக்கு நம்பிக்கை.

தெரியாத முகங்கள் அனைவரையும் சந்திப்பில் நேரில் பார்க்கக்கூடியவாறு இருந்தது. பதிவர்கள் சிலரை பெயர் மூலமே அறிந்து வைத்திருத்தேன். ஆனால் இங்கு அனைத்து பதிவர்களும் கண்களிலே சிக்கி விட்டனர். அனைத்து நண்பர்களுக்கும் 'ஹலோ' சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

என்னடாப்பா நேரிலே கண்டு காணாதது போல நின்ற இந்தப் பிள்ளை ப்ளாக்கரில வந்து ஹலோ சொல்லுகின்றாளே என பார்க்கின்றீர்களா? எல்லாமே வெட்க சுபாவம் தானுங்க. (அப்படீன்னா?)

முதலாவது காரணம் எல்லோரும் பழக்கப்பட்டவங்கள் இல்ல. அடுத்தது பெண்களின் வருகை குறைவாக காணப்பட்டது. மூன்றாவது கிளாசுக்கு போக வேணும் என்ற அவசரம். பதிவர்களில் அதிகமானவர்கள் ஆண்கள். அவர்களுடன் நானாகச் சென்று கதைப்பதற்குத் தயக்கமாக இருந்தது. பெண்களை விட ஆண்கள் தான் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் போலும். ஏனெனில் யாருமே வநது எங்களுடன் கதைக்கவில்லை. இவற்றையெல்லாம் விட காரணங்களும் இல்லாமல் இல்லை...

முதலிலே நாங்கள் எப்படி சென்று கதைப்பது என்றதொரு பிரச்சினை. அப்படி இருந்தும் மருதமூரான் அண்ணா, கூல்போய் கிருத்திகன், தாருஹாஷினி, ஜனா அண்ணா போன்றவர்கள் ஒரு நிமிடமோ இரு நிமிடமோ வந்து உரையாடி விட்டு சென்றார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. வதிசசும், நிரூயாவும் ஒரு தடவையேனும் போட்டோ எடுத்து விட்டு செல்லுங்கள் என்றதொரு வார்த்தையாவது சொல்லி வைத்தார்கள். அவர்களுக்கும் நன்றி.

பதிவர் சந்திப்பும் சரியாகத்தான் சென்றது பெரிய பிரச்சினை என்று ஒன்றும் வந்ததாகத் தெரியவில்லை. கருத்து முரன்பாடுகள் இருந்தது உண்மைதான். அக் கருத்து முரண்பாடு எங்கேயும் ஒன்று இருக்கத்தான் செய்யும். ஏனெனில் எல்லோருடைய மன நிலையும் ஒரே மாதிரியானது இல்லையே!

ஆழகான விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார் மு.மயூரன். அவருடைய பெரும்பாலான கருத்துக்கள் எனக்கு சரியாகவே தோன்றியது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. லோஸன் அண்ணா கடந்த சந்திப்புக்களில் கதைத்த அளவிற்கு கதைக்கவில்லை. அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்தார். அருண் அண்ணாவும் தன் பங்கிற்கு விளக்கம் தந்தார்.

ஆனால் ஒன்று பதிவர்களே! புல்லட் அண்ணாவிற்கு ஒரு பெரிய கவலை பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து ஓய்வூதியம் கொடுக்கவில்லை என. புறவாயில்லை அடுத்த தடைவை இதை பற்றி யோசிக்கலாம் என்று இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால் கவலை வேண்டாம் புல்லட் அண்ணா.

நிரூஜாவும் நன்றாகவே தொகுத்து நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். குழுமத்தினை எவ்வாறு கையாளுவது என கௌபோய் மது கூறியிருந்தார். என்னுடைய நண்பி ஒருவர் இன்னமும் குழுமத்தில் இணையாமல் உள்ளார். அவவும் குழுமத்தில் இணைவதற்கு மது ரொம்பவே உதவி புரிந்துள்ளதாக கூறினார். கடனை வாங்குவது போல் பயந்து பயந்து காசைச் சேகரித்தார் பவன். நிறையவே புதியவர்கள் வந்திருக்கிறார்கள்.

கோபி வாங்கி வந்த வடை தூள் தூளாகி விட்டது என நினைக்கிறன் . மன்னிக்கனும் அது பகோடா என பின்னர் தான் தெரிந்து கொண்டேன். (ஹீ ஹீ) அது நன்றாக இருந்தது. ஆனால் அனுதினன் வீட்டில் செய்த றோல் பெஸ்ட். அவங்க அம்மாவுக்கும் நன்றிகள். கேசரி நிரூஜா வீட்டிலிருந்தாம் வந்தது. ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்ல. இடைவேளை சிற்றுண்டி அனைத்தும் நன்றாக இருந்தது.

பதிவர்கள் பதிவுலகைத்தாண்டி என்ன செய்யலாம் என ஆராயப்பட்டிருந்தது. நிச்சயமாக எதையாவது செய்ய வேண்டும். அதுவும் ஒற்றுமையாக.. நானும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
டிஸ்கி : என்னங்க தலைப்பினை பார்த்தவுடன் பயந்திட்டீங்களா? அப்படிச் சொன்னால்தானே இந்தப்பக்கம் வர்ரீங்க. வாங்க வந்துட்டீங்களா.? உங்க கருத்தையும், வாக்கையும் மறக்காமல் பதிவு செய்யுங்களன்.

31 comments:

 1. உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

 1. அக்கோய், கதைக்க கூடாதென்றெல்லாம் இல்லை அக்கோய். எனக்கு நேரம் கிடைக்கவில்லை. குறிப்பாக யாருடனும் நான் அதிகம் பேசவில்லை. அப்படி இருந்தும் நான் ஒருமுறை ஒன்றாக கூடியிருந்த உங்களிடம் கதைக்க வரும்போது என்னை திருப்பி அனுப்பினீர்களே நினைவிருக்கா?

 1. cool:)

 1. philosophy prabhakaran-:
  "வாருங்கள் வாருங்கள். நன்றி"

  நிரூஜா-:தம்பி நீங்க ரொம்ப பிசியாகத்தான் இருந்தீங்க. கதைக்கத்தான் வருகின்றீர்கள் என்றால் ஏன் நாங்க முகத்தை திருப்ப வேணும்? சந்தோசமாக கதைத்து இருப்போம் . மன்னிக்கணும் தம்பி வேணும் என்று அப்படி செய்து இருக்க மாட்டோம் . திருப்பி அனுப்புவதா..................? இன்னொரு சந்தர்ப்பம் வந்தால் நானே அழைத்து கதைக்கிறேன். நன்றி தம்பி கதைக்க வந்ததற்கு தம்பி

 1. மருதமூரான்:-
  "எப்பவுமே உங்களைப்போல கூல்தான் அண்ணா"

 1. பயமெல்லாம் இல்லைங்கோ காசுக்கணக்கு பிழைச்சா நிரூஜா அண்ணன் பகோடா தரமாட்டார்...:P

  அனைவரையும் சந்தித்தது ரொம்ப சந்தோசம்..:-)

 1. என்னுடைய நண்பி ஒருவர் இன்னமும் குழுமத்தில் இணையாமல் உள்ளார். அவவும் குழுமத்தில் இணைவதற்கு மது ரொம்பவே உதவி புரிந்துள்ளதாக கூறினார்.//
  உண்மையில் அவ குழுமத்தில இருக்கிறாவா இல்லையா??? :)

 1. //ஆனால் அனுதினன் வீட்டில் செய்த றோல் பெஸ்ட். அவங்க அம்மாவுக்கும் நன்றிகள்//

  நன்றிகள். உங்கள் நன்றியை அம்மாவுக்கு சொல்லி விடுகிறேன்.

  உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!! என்ன கதைக்கவில்லை என்ற குறையை தவிர...!

 1. பதிவர் சந்திப்பை பற்றி நான் பார்த்த முதலாவது பதிவு!
  வாழ்த்துக்கள்!

 1. Bavan ;-
  "பகோடாவுக்கா இந்த பம்மல் பம்மினது சொல்லி இருந்தால் என்னுடைய பங்கினையும் சேர்த்து தந்து இருப்பேனே தம்பி .........."

  மதுவதனன் மௌ ;-
  உண்மையிலே குழுமத்தில் இல்லை. "பிளாக்கர் எல்லாம் இருக்கின்றது இனித்தான் எழுத தொடங்கப்போகின்றேன்" என குறிப்பிட்டு இருந்தாவே. கவனித்தீர்களோ தெரியவில்லை அவதான் ஆள்.

  Anuthinan S:-
  "இன்னொரு தடவை சந்திக்கும்போது உங்க குறையை போக்கிடலாமே"

 1. நாம் நினைத்தது போலவே பதிவர் சந்திப்பும் சிறப்பாகவே நடைபெற்றது மிக்க மகிழ்ச்சியே... அடுத்த முறை எல்லோரையும் கட்டாயம் சந்திப்பேன்...

  மதி.சுதா.
  யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

 1. //ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்ல//
  அதான் நான் அவர குடிக்க வச்சு ஆரோக்கியமா இருக்காரான்னு அவதானிச்சிட்டு அரைமணிநேரம் கழிச்சு தான் குடிச்சேன்.

  //கேசரி நிரூஜா வீட்டிலிருந்தாம் வந்தது.//
  கேசரியா அது..!!! நான் பாயாசம்னுல்ல நெனச்சிட்டிருந்தேன்...

 1. //ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்ல//

  வரோ கரைச்சா கல்லும் கரையும். கதவு காத்துக்கு திறக்காம வச்ச கல்லையும் சேர்த்துக் கரைச்சுப்போட்டார். அதுதான்.

 1. கார்த்தி :-
  "நன்றி" பதிவு எப்பவோ எழுதி விட்டாச்சு படம்தான் கிடைக்கா இல்லை . அப்படி இருந்தும் லோஷன் அண்ணா ரக் பண்ணின படங்கள் எடுத்தேன் அது ஏனோ தெரியவில்லை எனது கணனிக்கு அப்லோடாகவில்ல. பிறகு வரோவிடம்தான் படங்கள் பெற்று கொண்டேன். நன்றி வரோ. வரோ பதிவர் சந்திப்பில் இருந்து நேற்றுவரை பிஸியாக இருந்ததனால் எனக்கும் படங்கள் கிடைக்க இல்லை. அதனால்தான் தாமதம். இன்னமும் நான் எதிர் பார்த்தேன் நிறையப்பேர் பதிவர் சந்திப்பினை பற்றி எழுதுவார்கள் என, அனால் எனது பதிவுதான் முதலாவதாக உள்ளது எனின் அதிசயமாக உள்ளது.

 1. தலைப்பை பார்த்துவிட்டு ஏற்பாட்டுகுழுவை கும்மப்போறீங்க எண்டு நினைச்சன்... எங்கட தலையே(மாலவன் அண்ணா) வெட்கப்படும்போது நாங்கள் வெட்கப்படாமல் இருப்போமா அதுதான் கதைக்கவில்லை...

 1. ம.தி.சுதா ;-
  உண்மைதான்., கண்டிப்பாக சந்திப்போம்.

  Cool Boy கிருத்திகன் :-
  ////""அதான் நான் அவர குடிக்க வச்சு ஆரோக்கியமா இருக்காரான்னு அவதானிச்சிட்டு அரைமணிநேரம் கழிச்சு தான் குடிச்சேன்.""/////
  அவ்வளவு பொறுமை இருந்ததா உங்களுக்கு..? நம்பிட்டம். உங்க ஊரில அதுக்க(கேசரிக்கு) பெயர் பாயசமா....?

  Mathuvathanan ;-
  /////""வரோ கரைச்சா கல்லும் கரையும். கதவு காத்துக்கு திறக்காம வச்ச கல்லையும் சேர்த்துக் கரைச்சுப்போட்டார். அதுதான்.""//
  உண்மையோ.......?

  வதீஸ்-Vathees ;-
  அடடா ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் வருமா............? பதிவர் சந்திப்பு நல்லதாகவே நடை பெற்றது கும்மும் படியாக ஒண்ணுமே நடக்க இல்லை. அதனாலே தப்பித்தீர்கள் சந்தோசமா?

 1. //மூன்றாவது கிளாசுக்கு போக வேணும் என்ற அவசரம். //
  யார் அந்த மாஹத்மா ?
  //பதிவர்களில் அதிகமானவர்கள் ஆண்கள். அவர்களுடன் நானாகச் சென்று கதைப்பதற்குத் தயக்கமாக இருந்தது. //
  ஏன் தோழி ?பதிவர்களில் பிறகென்ன ஆண் பெண் பதிவு ஒன்னுதானே சும்மா சாட்டு
  //பதிவர் சந்திப்பும் சரியாகத்தான் சென்றது பெரிய பிரச்சினை என்று ஒன்றும் வந்ததாகத் தெரியவில்லை.//
  நீங்களாவது ஒரு பிரச்சினையை கிளப்பியிருக்கலமே ..அட சிசி
  //ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்ல. //
  ஏன்னாது ட்ரிங்க்ஸ் ஆஅ சொல்லவே இல்ல நாங்களும் வந்து ஒரு கட்டு கட்டியிருப்பமேள்ளே
  ///இடைவேளை சிற்றுண்டி அனைத்தும் நன்றாக இருந்தது///
  இதுக்கவே தான் பிளாக்கர் மீட்டிங் போனிங்கள் உண்மையை அம்பலத்தில சொல்ல கூடாது

  பதிவு சூப்பர்

 1. பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு குட்.எனக்கு ஞாபகம் இருக்கு உங்களுக்கு கிட்ட மைக் வந்தும் திருப்பிடின்களே ....?
  அடுத்த பதிவர் சந்திப்பில சந்திப்பம் நிறைய கதைப்பம்

 1. பதிவர் சந்திப்பாக அல்லாமல் ஒரு குடும்ப சந்திப்பாக அமைந்தது மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் பெண் பதிவர்களின் தொகையும் கூடவேண்டும் 33 சதவீதம் அல்ல 50 சதவீத ஒதுக்கீடே தருகின்றோம். பலரையும் பதிவெழுத தூண்டுதலாக இருக்கவேண்டிய பொறுப்பு உங்களைப்போல் பதிவர்கள் ககைளிலேயே உண்டு. முற்கூட்டிய வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றி சகோதரி.

 1. //மூன்றாவது கிளாசுக்கு போக வேணும் என்ற அவசரம்//
  வாவ்... மூணாங்கிளாசுக்கு போறவங்க கூட பதிவெளுதறாங்களா... ஒலகம் ரொம்ப முன்னேறிடிச்சுப்பா...

  ////அரைமணிநேரம் கழிச்சு தான் குடிச்சேன்.""//
  அவ்வளவு பொறுமை இருந்ததா உங்களுக்கு..?நம்பிட்டம். //
  அண்ணாச்சி இது சுடுசோறு இல்லை... டிரிங்ஸ் தான் ஆறுதலாயும் உள்ளே இறக்கலாம்...


  //உங்க ஊரில அதுக்க(கேசரிக்கு) பெயர் பாயசமா....?//
  இல்லை பாயாசத்துக்கு பெயர் தான் கேசரி...lolzz

  அடுத்தவாட்டி ஒண்ணாகல(ந்து)க்குவோம் மதிசுதா...

 1. ம்ம கலகலப்பாகத்தான் போனது மூன்றாவது பதிவர் சந்திப்பு.இப்பிடி எல்லாரும் நிண்டு குறூப் போட்டோ எடுப்பியள் எண்டு தெரியாமல்ப் போட்டுது. தெரிஞ்சிருந்தால்போகவேண்டியிருந்த கலியாணவீட்டையும் கான்சல்(Cancel) பண்ணிப் போட்டு நிண்டிருந்திருப்பன்

 1. உங்கள் எல்லாரையும் சந்திச்சு கதைச்சதில எனக்கு உண்மையிலயே சந்தோசம்..பதிவுலக நட்பு எப்போதும் தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம்...பதிவுக்கு ந்னறி தர்சினி...:)

 1. aswamethan:-
  /////ஏன் தோழி ?பதிவர்களில் பிறகென்ன ஆண் பெண் பதிவு ஒன்னுதானே சும்மா சாட்டு////
  அப்படீங்களா ......?
  /////இதுக்கவே தான் பிளாக்கர் மீட்டிங் போனிங்கள் உண்மையை அம்பலத்தில சொல்ல கூடாது//////
  "எங்கேயும் அதிகளவில் நான் உண்மையத்தான் கதைப்பேன்"
  /////பதிவு சூப்பர்/////
  " நன்றி "

  Jana-:
  ////இனிவரும் காலங்களில் பெண் பதிவர்களின் தொகையும் கூடவேண்டும்/////
  "கண்டிப்பாக அதிகரிக்கும் என நினைக்கின்றேன்"
  /////பலரையும் பதிவெழுத தூண்டுதலாக இருக்கவேண்டிய பொறுப்பு உங்களைப்போல் பதிவர்கள் ககைளிலேயே உண்டு/////
  "அப்படியா..... நாங்களும் பொறுப்புடன் இனி இருக்கின்றோம் "

  Cool Boy கிருத்திகன்-:
  ////அண்ணாச்சி இது சுடுசோறு இல்லை... டிரிங்ஸ் தான் ஆறுதலாயும் உள்ளே இறக்கலாம்...//////
  "எப்பவும் உள்ளே இறக்கலாம். அது எனக்கும் தெரியும். நான் கேட்பது அவ்வளவிற்கு பொறுமை உங்களுக்கு இருந்ததா...? ஹி ஹி ஹி"

  வடலியூரான்-:
  அடுத்த தடவை முடிந்தால் வாருங்கள்.

 1. roshaniee
  ////// உங்களுக்கு கிட்ட மைக் வந்தும் திருப்பிடின்களே ....?/////
  "மைக்கை பார்த்தவுடன் வெட்கம் வந்து விட்டது"

  தாருகாசினி-:
  /////பதிவுலக நட்பு எப்போதும் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்////
  "எனக்கும் சந்தோசம்தான் உங்கள் விருப்பம் நிறைவேறும் தாருகசினி"

 1. KIPPOO said
  மைக்கை பார்த்தவுடன் வெட்கம் வந்து விட்டது//

  அடடே! உங்க கிட்ட இருந்து இந்த வார்த்தையைக் கேட்கவே சந்தோசமா இருக்கு. லைப்லயும் இப்பிடியே இருந்தா சிலர் சந்தோசப்படுவாங்க..

 1. மீள்வருகை புல்லரிக்க வைக்கிறது. அமைதியாக இருந்து எல்லாவற்றையும் உற்றுநோக்கியிருக்கிறீர்கள் போல! பி கெயார்புள்.. என்னைச் சொன்னன்.

 1. http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

  கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

  நூல் வெளியிடுவோர்:
  ஓவியர் மருது
  மருத்துவர் ருத்ரன்

  சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
  தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

  நாள்: 26.12.2010

  நேரம்: மாலை 5 மணி

  இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


  அனைவரும் வருக !

 1. //
  "எப்பவும் உள்ளே இறக்கலாம். அது எனக்கும் தெரியும். நான் கேட்பது அவ்வளவிற்கு பொறுமை உங்களுக்கு இருந்ததா...? ஹி ஹி ஹி" //
  பொறுமை இல்லை தான் ஆனா எனக்கு முன்னுக்கு கறுப்பு நமீதா நிரூஜா போன்ற பல பதிவர்கள் டிரிங்ஸ் வாளியை சூழ்ந்த படி ரொம்ப நேரம் நின்றிருந்ததால் பொறுமையாயிருக்கவேண்டியாகிவிட்டது...
  :(

 1. INVITATION
  See my vintage picture blogs:
  http://mynewoldpictures.blogspot.com
  http://mypetarts.blogspot.com
  http://mynaturepictures-benmil.blogspot.com
  http://www.flickr.com/photos/63274960@N00/
  http://www.warforum.cz/viewtopic.php?p=9015476#9015476
  http://www.warforum.cz/viewtopic.php?t=612362&start=2160

 1. //பொறுமை இல்லை தான் ஆனா எனக்கு முன்னுக்கு கறுப்பு நமீதா நிரூஜா போன்ற பல பதிவர்கள் டிரிங்ஸ் வாளியை சூழ்ந்த படி ரொம்ப நேரம் நின்றிருந்ததால் பொறுமையாயிருக்கவேண்டியாகிவிட்டது

  ங்கொய்யால, கொழும்புபக்கம் வந்தா கோல் பண்ணாத, உன்ன துவைத்து எடுத்துவிடுவேன் :@

 1. //KANA VARO said
  KIPPOO said
  மைக்கை பார்த்தவுடன் வெட்கம் வந்து விட்டது//

  அடடே! உங்க கிட்ட இருந்து இந்த வார்த்தையைக் கேட்கவே சந்தோசமா இருக்கு. லைப்லயும் இப்பிடியே இருந்தா சிலர் சந்தோசப்படுவாங்க.. //

  உலக அதிசயமடா சாமி...... உங்களுக்கு இயற்கையாகவே குரலில் மைக் பொருத்தியது அவர்களுக்கு தெரியாது ..பாவம்...

Post a Comment