twitter




புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர். 40 அமைச்சர்களுக்கு உட்பட்டதாக அமைச்சர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்ததன் பேரில் பதவி ஏற்பும் இடம் பெற்றது. இம்முறை வரையறுக்கப்பட்ட அமைச்சரவை ஒன்றை அமைக்கவுள்ளதாக கடந்த பொதுத் தேர்தலின் போது அரசாங்கம் பொதுமக்களுக்கு உறுதியளித்திருந்தது. இந்த அமைச்சரவை ஜனாதிபதி இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து கொள்ளும் வரை அமுலில் இருக்கும். அதன் பின்னர் சம்பிரதாய ரீதியாக புதிய அமைச்சரவை ஒன்று அமைக்கப்பபடும்.


அமைச்சர்கள் விபரம்

1. பிரதமர் T.M ஜெயரட்ன :
பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த :
எரிபொருள், கனியவள அமைச்சர்
3. ரட்ணசிறி விக்ரமநாயக்க :
அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர்
4. G.L.பீரிஸ் :
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
5. நிமல் சிறிபால டி சில்வா :
பெருந்தெருக்கள், நீர்வள அமைச்சர்
6. திஸ்ஸ கரலியத்த :
சமூகவேவைகள், மகளிர் விவகார அமைச்சர்
7. ராஜித சேனாரத்ன :
கடற்றொழில் அமைச்சர்
8. மைத்திரிபால சிறிசேன :
சுகாதர அமைச்சர்
9. தினேஷ் குணவர்த்தன :
நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர்
10. டக்ளஸ் தேவானந்தா :
பாரம்பரிய, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்
11. W.D.J. செனவிரத்ன :
பொது நிர்வாக அமைச்சர்
12. ரிஷாட் பதியுதீன் :
கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு
13. பசில் ராஜபக்ஷ :
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
14. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ :
கூட்டுறவு, நுகர்வோர் விவகார அமைச்சர்
15. மில்ரோய் பெர்னாண்டோ :
மீள் குடியேற்ற அமைச்சர்
16. குமார் வெல்கம :
போக்குவரத்து அமைச்சர்
17. ஜனக பண்டார :
காணி விவகார, காணி அபிவிருத்தி அமைச்சர்
18. DUE. குணசேகர :
சிறைச்சாலை, புனர்வாழ்வு அமைச்சர்
19. பந்துல குணவர்த்தன :
கல்வி அமைச்சர்
20. சம்பிக்க ரணவக்க :
மின்சக்தி எரிபொருள் அமைச்சர்


21. விமல் வீரவன்ச :
வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22. மஹிந்த யாப்பா அபயவர்த்தன :
விவசாய அமைச்சர்
23. டளஸ் அழகபெரும :
இளைஞர், வேலை வாய்ப்பு அமைச்சர்
24. C.B.ரத்நாயக்க :
விளையாட்டு அமைச்சர்
25. சுமேதா டி ஜெயசேன :
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
26. அநுர பிரியதர்சன யாப்பா :
சுற்றாடல்துறை, பாதுகாப்பு அமைச்சர்
27.அத்தாவுத செனவிரத்ன :
நீதி அமைச்சர்
28.மஹிந்த சமரசிங்க :
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
29.ஜீவன் குமரதுங்க :
தபால்துறை அமைச்சர்
30.பவித்ரா வன்னியாராச்சி :
தேசிய மரபுரிமைகள், கலாசார அமைச்சர்
31.காமினி லொக்குகே :
விவசாய அமைச்சர்
32.பியசேன கமகே :
சுதேச வைத்தியத்துறை அமைச்சர்
33. S.P.நாவின்ன :
தேசிய மொழி, சமூக நல்லிணக்க அமைச்சர்
34.பீலிக்ஸ் பெரேரா :
சமூக சேவைகள் அமைச்சர்
35.A.H.M.பௌசி :
இடர் முகாமைத்துவ அமைச்சர்
36. A.L.M. அதாவுல்லாஹ் :
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்


பிரதி அமைச்சர்கள் விபரம்

1. சாலிந்த திசாநாயக்க
2. டிலான் பெரேரா
3. சுசந்த புஞ்சிநிலமே
4.லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன
5. சந்ரசிறி கஜதீர
6. ஜெகத் புஷ்பகுமார
7. D.P.ஏக்கநாயக்க
8. மஹிந்த அமரவீர
9. ரோஹித்த அபயகுணவர்தன
10. S.M.சந்திரசேன
11. குணரத்ன வீரகோன்
12. மேர்வின் சில்வா
13. பண்டு பண்டாரநாயக்க
14. ஜெயரட்ன ஹேரத்
15. தயாசிறி டி திசேரா
16. துமிந்த திஸாநாயக்க
17. ரஞ்சித் சியம்பலாபிட்டிய
18. லசந்த அழகியவண்ண
19. M.R.மித்ரபால
20. நிர்மல கொத்தலாவல
21. பிரேமலால் ஜெயசேகர
22. கீத்தாஞ்சன குணவர்த்தன
23. விநாயகமூர்த்தி முரளீதரன்
24. இந்திக பண்டாரநாயக்க
25. முத்து சிவலிங்கம்
26. சிறிபால கம்லத்
27. W.P.ஏக்கநாயக்க
28. சந்ரசிறி சூரியாராச்சி
29. நியோமால் பெரேரா
30. சரத் குணரத்ன
31. நந்தமித்ர ஏக்கநாயக்க
32. நிரூபமா ராஜபக்ஷ
33. நவீன் திஸாநாயக்க
34. சரத் குணவர்த்தன
35. ரெஜினோல்ட் குறே
36. விஜித் விஜேமுனி சொய்சா
37 M.L.A.M.ஹிஸ்புல்லாஹ்
38. ரோகண திஸாநாயக்க
39. வீரகுமார திஸாநாயக்க

விடுபட்டவர்களின் விபரங்கள் விரைவில்...

















அனைவருக்கும் எனது தித்திக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


















சித்திரை வருடப்பிறப்பிட்காக யாழ் வந்துள்ளதால் பதிவுகள் இட்டு நாட்கள் பல ஆயிற்று. இரண்டு வருடங்களின் பின் உறவினர்கள் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடுகின்றேன், மிகுந்த சந்தோசமாக உள்ளது. இந்த சந்தோசம் தொடர வேண்டும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.

















ஏங்க சிரிப்பா இருக்கா… உண்மைங்க… யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டம் கிடைத்த அனைவரும் சொல்லிக் கொண்ட வசனம் இது…

வடக்குக் கிழக்கை பொறுத்த மட்டில் கம்பஸ் கிடைக்கிறது அவ்வளவு கொடுமையா?... கம்பஸ் கிடைக்காதவர்களெல்லாம் தங்கள் வழிகளில் முன்னேறி இன்று உயரத்தில் இருக்கும் போது, கம்பஸ் கிடைத்த இறுமாப்பை எங்கு காட்டுவது… காத்திருந்தது தான் மிச்சம். துன் மகனை படிக்க வைத்து கம்பஸ் அனுப்பிய தந்தை மூன்று வருட கால தாமதத்தால் மகளின் முழுமையை பார்க்க முதல் இறந்த சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றது. இனி பட்டம் கிடைத்தென்ன, சந்தோஷப்பட அப்பாவா இருக்கிறார்… என சொல்லிய மாணவர்கள் எத்தனை பேர்.

எனக்கு கம்பஸ் என்றாலே பிடிக்காது ஏனெனில் நான் ஏயலில் எடுத்த றிசல்ட் அப்படி.. அதனால என்னை கம்பஸிற்குள்ளே விடமாட்டன் என்றுட்டான்கள். அதுதான் பிடிக்கல நானும் ஒரு காலத்தில கம்பஸ் போகனும் என்ற ஆசையிலதானுங்க இருந்தனான். என்ன செய்வது….?
















ஆனால் கடந்த காலங்களில் கம்பஸ் படிப்பது வீண் என்பது என்னுடைய வாதம். கம்பஸில படிக்கிற காலத்திற்கு தனியார் உயர்கல்வியை மேற் கொணடால் காலமும் மிச்சமானது. அதேநேரம் நடைமுறையுடன் சேர்ந்த கல்வியை கற்று முடித்து விடலாம். படிக்கும்போதே கற்ற கல்வியுடனான வேலையையும் அனுபவத்துடனும் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.

யாழ் பல்கலைகழகத்தை பாருங்களேன் நான்கு வருடத்திற்கு பிறகுதான் பட்டமளிப்பு விழா நடக்குது. பல்கலை கழகம் படித்த மாணவர்கட்கு இது எவ்வளவு பாரதூரமான தாக்கியுள்ள ஒரு விடயம். சில ஆயுதக்குழுக்களின் அழுத்தம் காரணமாகவே (அச்சுறுத்தல்) இப்பட்டமளிப்பு விழா இடைநிறுத்தப்பட்டது. நாடு சுமூகமான நிலை அடைந்ததால் (அப்பிடீன்னு எல்லோரும் சொல்றான்கள்) பட்டமளிப்பு விழா நடைnறுகிறது என்கிறார்கள்.
ஐந்து வருட காலம் நடைபெறாத இந்த பட்டமளிப்பு விழா தொடர்ந்து மூன்றுநாட்கள் நடைபெற்றது. இவ்வளவு காலமும் இப் பட்டமளிப்பு விழாவை எதிர்பார்த்த மாணவர்கட்கு எவ்வளவு சந்தோஷத்தை அளித்துள்ளது இந்த பட்டமளிப்பு விழா.

சுமார் மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தி இரண்டு (3972) மாணவர்கட்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது. இதில் வர்த்தகம், கலைப்பிரிவு மாணவர்கள் அதிகளவாக பட்டம் பெற்று வெளியேறினார்கள் (முடிந்தது சனியன்)
















பிரிந்து இருந்த நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இருந்தது.; சொன்ன காதல்கள், சொல்லாத காதல், சொல்லி…. விட்ட காதல்கள்… எல்லாம் அவர்களை சந்திக்கிற ஒரு கணம் மீள நினைத்து பார்க்கும் சந்தர்ப்பம். எத்தனையோ பேர் தங்கள் கணவன், மனைவி, பிள்ளை குட்டிகள் சூழ தமது நண்பர்களை அறிமுகப்படுத்தி பட்டத்தினை ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாக அமைகிறது. இதற்குள் எவ்வளவோ நடந்து விட்டது.. என்னவெல்லாம் முடிந்து விட்டது.

இப்பட்டமளிப்பு விழா பிந்தியதால் எத்தனையோ பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் இதற்கான பதில் சொல்ல யார் உள்ளார்கள்………? வேலைக்காகவே பல பட்டதாரி மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளார்கள். இதனால் பட்டதாரி மாணவர்கள் பலரை இலங்கை இழந்து உள்ளது. பட்டங்களை வழங்காது இலங்கையில் இருந்து சாதிக்க வேண்டிய புத்திசாலிகளை வெளியேற வைத்துள்ளார்கள்.

அது மட்டும் அல்லாது எத்தனையோ மாணவர்கள் கஸ்ரப்பட்டு கல்வி கற்றும் பட்டங்களை பெறாது போரால் இறந்துள்ளனர். இறந்த மாணவர்களது ஆசைகள் அனைத்தும் நிராசையாக மாறியுள்ளது. இவை அனைத்தும் ஒரு தடைவ சிந்தித்து பார்க்க வேண்டிய ஒரு விடயம்.

பட்டமளிப்பு விழா பிந்துவதால் எத்தனையோ வேலைகளுக்கு அப்பொயின்ட் மென்ட் குடுக்காமல் கிடக்குது. இதனால் வேலை வாய்ப்புக்கள் இருந்தும் இதனையே சாட்டாகக் காட்டி தட்டிக்கழிக்கிறார்கள். இதுவும் வேலையில்லா வீதத்தை தூண்டுகிது எனலாம். உரியவர்கள் கவனமெடுத்தால் போதும். இனிவரும் காலங்களில் சாக்கடை அரசியலுக்கு மாணவர்களைப் பயன்படுத்தாதீர்கள்…













கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி தலைநகரில் ஒரு வலைப்பதிவர் சிறு சந்திப்பு நிகழ்ந்ததை ‘அகசியம்’ மூலம் அறிந்தேன். பார்க்க ‘தலைநகரில் பதிவர்கள் சந்திப்பு – பகீர் ரிப்போர்ட்’

நேற்று முன்தினமும் (மார்ச் 21) மீண்டும் கொழும்பில் பதிவர்கள் எல்லோரும் கதைப்பதற்காக ஒன்று கூடியுள்ளார்கள் என்பதே அதே ‘அகசியம்’ இன் மூலம் அறிந்தேன். பார்க்க ‘ப்ளீஸ் என்னைக்கற்பழிச்சிடாதீங்க – காங்கோன் புலம்பல்’

மாதம் ஒரு முறை சந்திப்பீர்களா? இனி எப்போது? அடுத்த மாதம் 21ஆம் திகதியா? எங்கே? யார் தலைநகர் வருகின்றார்? யார் ஏற்பாடு செய்கிறார்கள்? தயவுசெய்து காற்றுவாக்கிலாவது தெரியப்படுத்தவும். இது பங்குபற்றுபவர்களுக்கு நல்லது என நினைக்கின்றேன்.

காரணம் உங்கள் மீது பழி வந்துவிடாமல் இருப்பதற்காகத் தான். சந்திப்பு பற்றியும், நோக்கம் பற்றியும் முழுமையாக கேட்டறிந்து கொண்டேன். இவ்வாறான சந்திப்புக்கள் ஆரோக்கியமானவை. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்ப்பதிவர்கள் தங்களிடையே நட்புறவை வளர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் ‘பதிவர்’ என்ற சொல்லினைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவேண்டும். அன்று ஹோல்பேஸில் சந்தித்தார்களே! அந்த நட்பு எதனால் உருவானது? யோசித்து பார்க்க வேண்டும். எனவே ‘பதிவர்கள் சந்திப்பு’ என்ற பெயரில் மீண்டும் மீண்டும் சந்திக்கும் போது அந்த மாவட்ட பதிவர்களுக்காவது குறைந்த பட்சம் தெரியப்படுத்துங்கள்.

ஏதோவொரு வகையில் எல்லாப்பதிவர்களும் ஒரு வலையமைப்பில் இருக்கிறார்கள். எனவே தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு கூறுவார்கள். அதற்கு ஏற்றவகையில் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்யுங்கள். தாய்க் குலங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். கூகிள் குழுமத்தினூடாக இனி அறியத்தருவதாக ஆலோசித்ததாகக் கேள்விப்பட்டேன்.

பதிவர் ஹிஷாம் குழுமத்தில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அதே போல் வரோவின் மூஞ்சிப்புத்தகத்தில் இன்னொருவர் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கும் கலந்து கொண்ட சிங்கங்கள் பதிலளியுங்கள்.






























(சாரி வரோ, உன் தலை பல இடத்தில உருளுதா? என்ன செய்ய.. தெரிந்தவர்களை மேற்கோள் காட்டினால் நான் தப்பித்துக்கொள்ளலாம்.)

பி.கு : இந்தப்பதிவை குற்றச்சாட்டாக யாரும் எடுக்க வேண்டாம், சிறிய ஆலோசனை மட்டுமே!