twitter


















எம்பெஸ்ஸியிற்கு கடிதம் கொடுத்து ஒரு வருடம் ஆகி விட்டது. “நாளைக்கு ஒருக்கால் எம்பெஸ்ஸி பக்கம் போயிற்று வந்து விடு” என எனக்கு அம்மா நச்சரித்து கொண்டு இருந்தா.. ஒன்றும் செய்ய முடியாத நிலை. ஏனெனில் நான் கொழும்பில இருக்கிறேன். அதை விட மூத்த பிள்ளையும் நானே. பொறுப்பு எல்லாம் என் தலையில் தான்.
எம்பெஸ்ஸியிற்கு போவோம் என முடிவு எடுத்தேன். 10.30 ற்கே புறப்பட்டு விட்டேன். அங்கு போன பின்புதான் விஷயமே தெரிந்தது. நான் இலங்கையில எங்க இருந்தாலும் பறவாயில்லை வெளிநாடு என்ற ஒன்றுக்கே போகப்படாது என்று.

ஏனென்று நீங்க கேட்பது புரியுது. 10.30 ற்கு போனேன் என்று சொன்னேன் தானே வீட்டிற்கு வந்தது 02 மணிக்குதான். அவ்வளவு நேரமும் நேரத்தையும் வீணாக்கியது தான் மிச்சம். பொறுமையை கடைபிடித்து கொண்டு நின்றேன் கடைசியல ஒரு நிமிடம் கூட கதைக்கவில்லை. எப்படி இருக்கும்..?

கனடா எம்பெஸ்ஸி என்றால் வந்திருப்போரை வரவேற்று பெரிய குஷன் சீற் எல்லாம் தருவார்கள் அங்கே களைப்பாறலாம் என்று மட்டும் நினைத்திடாதீங்க. அங்கு சென்ற நேரத்தில் இருந்து வெளியே வருமட்டும் ஒரு நிமிடம் கூட உட்காரவில்லை. இடமே இல்லைங்க பிறகு எங்கே இருப்பது...? கால் எப்படி கடு கடுத்திருக்கும்? அப்படி கால் கடுக்க நின்றால்தானாம் கனடா போகலாமாம். இப்படி எல்லாம் கனடா போக வேண்டுமோ?

நாலைஞ்சு இங்கிலிசு வார்த்தையை பயன்படுத்தி அவரிடம் போய் கதைப்பம் என்றால் தமிழிலையே கதைத்தார்கள். பறவாயில்லை என்ர இங்கிலிஸை கேட்க அவை குடுத்து வைக்கலை. ஒற்றை வரியிலே என்ன பிரச்சனை என்றார்கள். அப்ளை பண்ணி ஒரு வருடம் ஆகி விட்டது அதுதான்… பிரச்சனை இல்லை வீட்டிற்கு போங்க கடிதம் அனுப்பி வைக்கிறோம். என்றார்கள்.

அவ்வளவு தான் வேறை கதை கதைக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எழும்பி வந்ததுதான் மிச்சம். இப்படித்தான் கஸ்ரப்பட்டு… எல்லோரும் வெளிநாடு போயிருப்பினமோ…?

இப்படி எல்லாம் வெளிநாடு போக வேண்டுமோ…?





















நல்லாட்சியையும், ஊழல் கட்டுப்பாட்டையும் மேம்படுத்துதல் என்பதில் ஊடகங்களின் நடிபங்கு மிக முக்கியமானதாகும்.

இது தனியே ஊழல் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும், அவற்றின் விளைவுகள் அவற்றுக்கான தீர்வுகள் என்பவை பற்றிமட்டும் அறிவூட்டுவது அல்லது, அத்துடன் ஊழல் சம்பவங்கள் பற்றி அறிக்கைப்படுத்துவதுமாகும்.

தகவல்களின் கிடைப்பனவு வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றோடு புலனாய்வுப் பத்திரிக்கையாளனின் தொழில்வாண்மையான துறை மற்றும் ஒழுக்கவியல் செயல்நிலைப் பிரிவு என்பவற்றிலேயே ஊடகங்களின் பயனுறுதிவாய்ந்த தன்மை தங்கியுள்ளது.

ஊழல் என்றால் என்ன?

நேர்மை நாணயம் என்பவற்றோடு நடக்க வேண்டிய ஒரு நபர் எங்கே நேர்மையீனத்துடன் குற்றமென்று தெரிந்தும் இலஞ்சம் பெற்றுக் கொள்கிறாரோ (ஏற்றுக்கொள்கிறாரோ) அது ஊழலாகும்.

ஏதேனும் பொது (அரச) அல்லது தனியார் அல்லது கடமை தொடர்பாக பொறுப்பளிக்கப்பட்டவர்கள் அவர்களின் கடமையையாற்றுவதற்கு அவர்களிற்கு சட்டபூர்வமாக உரித்தாகவுள்ள கொடுப்பனவுகளுக்குப் புறம்பாக வேறு ஏதாவது வகையில் அவனோ/அவளோ ஏதும் கொடுப்பனவுகளுக்கு வற்புறுத்துவது ஊழல் ஆகும்.

எங்கே தமக்கு விதிக்கப்பட்ட ஒழுங்குகளின் அடிப்படையில் கடமைகளிற்குப் புறம்பாக தமது சொந்த இலாபங்களிற்கு தமது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்கிறார்களோ அங்கே ஊழல் இடம் பெறுகிறது.


பொதுச் செயற்பாடுகள் (அரச) மூலம் தனிப்பட்டவர்கள் நன்மை பெற்று அது அரசாங்கத்திற்கும் பொதுமக்களிற்கும் நட்டத்தை விளைவிக்க காரணமாக அமையுமெனில் அது ஊழலாகும்.

அதிகாரத்தை கொண்டுள்ளவர்கள் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல்.

சொந்த நலன்களிற்காக (இலாபங்களிற்காக) சட்டபூர்வமற்ற செயற்பாடுகளை செய்ய விரும்புதல்.

தவறான செயல்களைச் செய்யுமாறு தூண்டுதல்.

தனது கடமையைச் செய்வதற்கு ஒருவர் ஏதாவது வெகுமதிகளை எதிர்பார்த்தல்.






















ஊழலின் வடிவங்கள்

  • பெரிய மற்றும் சிறிய ஊழல்கள்
  • வெளித்தெரிகின்ற வகையில் பிறரால் தூண்டப்பட்டிருந்த ஊழல்(Active)
  • வெளத்தெரியாத தன்முனைப்பல்லாத ஊழல் (Passive)
  • இலஞ்சம்
  • தன் பொறுப்பிலுள்ள பொருளை /பணத்தைக் கையாடுதல்
  • திருட்டு மற்றும் ஏமாற்று மோசடி
  • அச்சுறுத்திப் பணம் பறித்தல்
  • நம்பிக்கை மோசடி (நம்பிக்கை துஷ்பிரயோகம்)
  • சலுகையளித்தல், உறவினருக்கு ஆதரவளித்தல், தன் சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு சலுகையளித்தல்
  • நடத்தையை உருவாக்குதல், அல்லது முரண்படும் ஆர்வங்களிலிருந்து சுரண்டுதல்,
  • முறையற்ற அரசியல் பங்களிப்புக்கள்.




















என்ர பிரண்ட் வேலைக்கு போறாள் இதை பெருமையாக கூறப்போகிறேன் என நினைக்காதீர்கள். அவள் வேலைக்கு போய் சம்பாதிக்கிறாளோ இல்லையோ ஆனால் நிறைய முரண்பாடுகளையும் எதிர்கணிய கருத்துக்களையும்தான் சம்பாதிக்கிறாள்.



காலையில எழும்பி பஸ்சுக்கு வெளிக்கிடுறதில இருந்து வீட்டுக்கு வந்து சேருமட்டும் இவள் மற்றவைக்கு பேசிக்கொண்டு இருப்பாள். தனக்கு தானே பேசினால் பறவாயில்லை போனை எடுத்து என்னிடம் வாசிக்க தொடங்குவாள் ஒரு அளவு கணக்கு இல்லை.



என்ன செய்வது நண்பியாக போய் விட்டாள். தன்னுடைய மற்ற நண்பியை வெளிக்கிட்டு பஸ்சுக்கு வரச் சொல்லி விட்டு…… பிறகு அதை தனியா சொல்றன்… என்ன அவளைப்பற்றி தான் வேற என்ன சொல்ல போறன்…….



நபர் தமிழன்தான் அவருடன் தமிழ் கதைப்பது என்பது கல்லில் நார் உரிப்பது மாதிரித்தானாம். இன்னொரு பிரச்சினை அவளுக்கு சிங்களம் தெரியாது. ஆனால் அங்கே ஒப்பீஸில் கூட்டம் நடைபெறும் அங்கு என்ன நடைபெறுகிறது என தமிழில் கூறுங்கள் எனின் வாயே திறக்க மாட்டாராம். இப்படியும் ஒரு பிறப்பு இருக்குது என கண்டபடி பேசுவாள். என்ன ஒரு கொடுமை எனின் அவள் இனி அவருடன்தான் வேலை செய்ய வேண்டுமாம்.






















அது மட்டும் அல்ல ஏதாவது விசேஷம் எனின் சிற்றுண்டி வழங்குவதிலும் அதே நிலைதான். ஒரு நாள் யாற்றையோ கலியான வீடாம் என்று கேக் கொண்டு வந்து தந்தவையாம். அப்ப கேக் குடுத்துக் கொண்டு வரேக்க பிரண்ட் தான் முதல் வரிசையில் இருந்தவளாம். கேக் குடுத்துக் கொண்டு வந்தவ தமிழ் தான். இருந்தாலும் அவளுக்கு கேக் குடுத்தது கடைசியாத்தான்.




பாருங்கோவன் இதிலையும் பெரும்பான்மையா?
ஒபீஸ்ல எல்லோருக்கும் தனிதனி போன் குடுத்தவையாம்…….
ஆனால் இவளுக்கு ஒரு போன் கூட குடுக்கல்லயாம். பிறகு வேலையை ஒழுங்கா செய்யல்ல எண்டு பேச்சாம்… ஓழுங்கா குடுத்திருந்தா அவள் வேலை செய்திருப்பாள் தானே…..
அவயள் தட்டிக் கழித்தால் நாங்களும் விட்டுடுவமா???



தலைவர் சொல்லியிருக்கிறார் நாட்டில பெரும்பான்மை இல்லை என்று ஆனால் நடப்பது வேறு தானே …



என்னத்ததான் கதைத்துப் பேசினாலும் அவன் அவன் தன்ர வேலையைத் தான் செய்வாங்கள்…சும்மா போங்கோ...
கேக் குடுக்கிறதிலயே இப்பிடி எண்டா……. உரிமை குடுக்கிறது எண்டால் எப்பிடி??? ஐயோ நினைகவே தேவையில்ல.
நாங்கள் சாகும் வரை கத்த வேணும் அவங்கள் கேட்டுக் கேட்டே சகாகட்டும். இழவு விழுந்தவை….
























“இலங்கையில எத்தனை புத்தகத்தை வாசித்தாலும் இந்திய புத்தகம் வாசிக்கிற மாதிரி ஒரு திருப்தி எனக்கு இல்லை” என்கிறார் கல்லூரி மாணவி மஞ்சுளா. இவருடைய கருத்தோடு ஒத்ததாகவே இலங்கை வாசகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்;றனர். கடந்த வருடம் BMICH ல் நடை பெற்ற புத்தக கண்காட்சியில் சந்தித்த வாசகர்களும்; இக்கருத்தையே முன் வைத்தார்கள். இலங்கையில் அற்புதமான இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் எழுத்தாளர்கள் பலர் இருந்தும் அவர்களை அறியாதோர் பலர் இருக்கின்றனர். ஆனாலும் சாதாரண வாசகர்கள் பெருமளவில் இலங்கை புத்தகங்ககளை நாடுவதே இல்லை. என்ன காரணம்? இதற்கான பதிலை கண்டறிய முற்பட்டோம்.













புத்தக கண்காட்சியிலே இந்தியப் புத்தகங்களை வருவோர் போவோரெல்லாம் வாங்கும் போது இலங்கைப்புத்தகங்களை ஒரு சிலர் தான் வாங்கிச் செல்கின்றனர். அவர்களும் தங்கள் படிப்புக்கோ அல்லது சொந்த தேவைக்காகவோ தான். இந்திய புத்தகம் அதிகளவாகவே விற்பனையானதற்கு வாசகர்கள் பல்வேறு கருத்தினை முன் வைத்தார்கள். “இந்திய புத்தகங்களின் மொழிநடை வாசிக்கிறதிற்கு லேசாக இருக்குது. நடைமுறையுடன் சேர்ந்த மாதிரியே இருக்குது. புத்தகத்தை எடுத்து வாசிச்;சம் என்றால் தொடர்ந்து வாசித்து கொண்டு போறம் விளங்கேலை என்று திருப்பி வாசிக்க வேண்;டிய தேவை இல்லை”. என்கிறார் குடும்பப் பெண் ஒருவர்.

“இந்தியப் புத்தக கதையமைப்பு ஒரு படத்தை பார்ப்பது போல இருக்குது வாசிக்கும்போது ஆர்வத்தை தூண்டுகிறது. நாங்கள் அந்த உணர்விற்குள் நிற்கிற மாதிரியே இருக்கிறது. பக்கத்தில் நிண்டு யார் கூப்பிட்டாலும் காதில விளாது. அப்;படியே கதைக்குள்ள போய் விடுவேன்”. என்கிறார் வெளிநாடு செல்ல இருக்கும் சாவித்ரி. “இந்திய புத்தகங்களின் அட்டை படத்தை பார்த்தாலே புத்தகத்திற்கு பக்கத்துல போய் நிண்டு ஒரு முறை தடவிப்பார்க்க வேண்டும் போல் இருக்கும். அப்படி ஒரு அழகு இருக்குதே அதிலே ஒரு ரசனையை தூண்டுகிறது அதன் பின் புத்தகத்தை சொந்தமாக வேண்ட வேண்டும் போல இருக்கும்” என்கிறார் பாடசாலை ஆசிரியரான பாலேஸ்வரன்.

















“இந்திய எழுத்தாளர்களது படைப்புக்கள் நமக்கு பழக்கப்பட்டு விட்டது. இவர்களது படைப்புக்கள் இன்னமும் பழக்கப்பட இல்லை. இலங்கை புத்தகத்தை நாம் மாற்றி வாசிப்பதற்கு எங்களது ரசனையை இன்னமும் எழுத்தாளர்கள் கண்டு பிடிக்கவில்லை. எமக்கு ஏற்ற வகையில் அவர்களால் எழுத்து மூலம் எழுதி விளங்கப்படுத்த முடியவில்லை இந்தியர்களது எழுத்துப் பாணிக்கு அடிமைப்பட்டு விட்டோம். அதில் இருந்து இன்னமும் மீளமுடியாது உள்ளோம்” என்கிறார் கொழும்பு பல்கலைகழக மாணவன் டேவிட்.

இலங்கை எழுத்தாளர்களை பிரபல்யமாக தெரிவது இல்லை. இந்திய எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை எழுத்தாளர்கள் தங்களை பிரபல்யப்படுத்தும் வகையிலும் சீரியசாக எழுதுவது இல்லை. தொடர்ச்சியான எழுத்து பாணியில் தொடர்ந்து எழுதுவது இல்லை. எழுத்தாளர்கள் இந்தியாவில கூட்டாக கலந்துரையாடி செயற்படும் பழக்கம் உண்டு. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. அதிகளவாக எல்லோரிடமும் இங்கே போட்டியும் பொறாமையுமாகத்தான் காணப்படுகிறது.














1960 காலப்பகுதிகளில் இலங்கையில் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக போராடியது அந்தக் காலப்பகுதிகளில் சஞ்சிகைகள் வெளிவந்தன. அந்த போராட்டத்தின் விளைவாக ஓரளவுக்கேனும் இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்களிற்கு வளர்ச்சியை காட்டியது. இது தொடர்ந்திருந்;தால் வளர்ச்சி நிலையை எட்டிஇருக்கும்.

“இலங்கை எழுத்தாளர்கள் காட்சிப்படுத்தல் ஊடக எழுதாதற்கு காரணம் வாசகர்களை பல்வேறு விதமாக யோசிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்;. அவர்களை ஒற்றை வழியாக யோசிக்க வைக்க விடக்கூடாது. அவ்வாறு அவர்களை யோசிக்க வைத்தால் சிந்திக்கிற ஆற்றல் தடைப்பட்டு விடும் ஆதலால்தான் அவர்கள் காட்சி படுத்தல் ஊடாக எழுதுவது இல்லை. அதுமட்டும் அல்ல அவர்களுடைய சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. அது மட்டும் அல்ல எல்லோருக்கும் விளங்க கூடிய வகையில் இந்தியத் தமிழ் உள்ளது” என பேராசிரியர் சிவத்தம்பி கூறுகிறார்.











இந்தியத்தமிழ் எல்லோருக்கும் விளங்க கூடியதாக உள்ளது ஏனெனின் சிறு வயதில் இருந்தே சினிமா பார்த்து பார்த்து இந்தியாவில் பேசும் தமிழ் மொழிக்கு பழக்கப்பட்டு விட்டார்கள்;. ஆகவே அவர்களிற்கு கடினமான விதத்தில் இந்திய மொழியில் கூறினாலும் உடனே புரிந்து கொள்வார்கள்;. இலங்கை மொழியில் நல்ல விடயங்களை சுலபமாக எழுதினால் கூட கடினமான நடையாகத்தான் இருக்கின்றது. இதற்கு ஊடகங்கள்தான் காரணம் என்கிறார் ஊடகவியளார், விரிவுரையாளர் தேவகௌரி.
“இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது இல்லை எழுத்தாளர்களிற்கு தேவையான நிதிகள் வழங்கப்படுவது இல்லை. விடய ரீதியான படைப்புகளிற்கு அரசினால் நிதியீட்டம் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த வருடம் தமிழ் மொழியிற்கு எந்தவிதமான நிதியீட்டமும் பாடசாலைகள் உட்பட வழங்கப்படவில்லை. இதனால் புத்தகசாலைகளில் இலங்கை எழுத்தாளர்களின் புத்தகம் பெரிதாக விற்பனை ஆகவில்லை என்கிறார். ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லை எழுத்தாளர்களிற்கு தேவையான நிதி வழங் கப்படுகிறது” என்கிறார் நூல் விமர்சகரான மதுசூதனன்.

சாதாரண மக்கள்தான்; வாசகர்களாக உள்ளார்கள். ஆகவே அவர்களிற்குதான் எழுத்தாளர்கள் எழுதும் எழுத்தைப்பற்றி தெரிந்து இருக்கின்றது ஆகவே அவர்களுடைய கருத்தை மறுதலிக்க முடியாது.