twitter





















“கற்றது கை மண்ணளவு…” எண்டுறது மாதிரி கிரிக்கட்ல எனக்குத் தெரிஞ்சதும் ஒரு பிடி தான். ஆனாலும் றொம்ப விருப்பம்… பைத்தியம் எண்டெல்லாம் இல்லை. எங்கட நாடு எண்டதாலயோ என்னவோ தெரியல இலங்கை விளையாடினா பிடிக்கும்… அதுக்காக இலங்கை வீரர்களைத் தான் பிடிக்கும் எண்டில்லை.

















நண்பர் ‘அகசியம்’ வரோதயன் என்னைத் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். “கிரிக்கட் காய்ச்சல் - தொடர்பதிவு” கிரிக்கட் பிடித்த பெண் ரசிகை எண்டெல்லாம் பில்ட்அப் வேற… சரி அவருக்காகவாவது ஏதாவது எழுதத் தானே வேணும்.. தொடர்பதிவில் நான் அழைத்தால் இன்னும் இருவராவது தொடர்வார்கள். இது ஒரு சுவாரசியமான விளையாட்டும் தானே!

சரி ஆரம்பிப்போமா?

விதி முறைகள்:

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

மிக மிக அண்மைக்கால வீரர்களாகவும், எல்லோருக்கும் பொதுவானவர்களாகவும் தான் இருப்பார்கள்.















(1) பிடித்த போட்டிவகை : ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20

(2) பிடிக்காத போட்டிவகை : டெஸ்ட் போட்டிகள்

(3) பிடித்த அணி : இலங்கை

(4) பிடிக்காத அணி : எதுவுமில்லை

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர் : மகேந்திரசிங் தோணி

(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்; : வி.வி.எஸ் லக்ஸ்மன்

(7) பிடித்த விக்கட் காப்பாளர் : குமார் சங்கக்காரா

(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : கம்ரான் அக்மல்

(9) பிடித்த களத்தடுப்பாளர் : யுவராஜ் சிங்

(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : நுவன் சொய்ஸா

(11) பிடித்த வேகப்பந்து வீச்சாளர் : சமிந்த வாஸ்

(12) பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் : அன்ரு நெல்

(13) பிடித்த ஸ்பின்னர் : முரளி

(16) பிடிக்காத ஸ்பின்னர் : அனில் கும்ளே

(17) பிடித்த ஆடுகளங்கள் : லண்டன் லோட்ஸ்

(18) பிடிக்காத ஆடுகளங்கள் : எதுவுமில்லை

(19) பிடித்த சகலதுறை வீரர் : ஜக் கலீஸ்

(20) பிடிக்காத சகலதுறை வீரர் : இர்பான் பதான்

(21) பிடித்த அணித் தலைவர் : சனத் ஜெயசூரிய

(22) பிடிக்காத அணித்தலைவர் : சவ்ரவ் கங்குலி

(23) கனவான் வீரர்கள் : சச்சின் டெண்டுல்கர்

(24) பிடித்த வர்ணனையாளர் : டோனி கிரேக்

(25) பிடிக்காத வர்ணனையாளர் : ரசல் ஆனல்ட்

(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் : ரொம் மூடி

(27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் புச்சனன் (சரியா? அவுஸ்ரேலியா OLD கோச்)

(28) பிடித்த போட்டி : கிரிக்கட்டே பிடிக்கும், இதிலென்ன..

(29) பிடித்த வளரும் வீரர் : சஜித பீரிஸ் (ரீமுக்கு இன்னும் வரலயாக்கும்)

(30) பிடிக்காத வளரும் வீரர் : பெரிசா தெரியல.

வரோவின் ஐடியாவுடன் நான் தொடர அழைப்பவர்கள்…

1. நா கௌபோய் மது (வலைப்பதிவு - இங்காலிப்பக்கமே ஆளைக்காணல)
2. வியாபஹிஷைலஜா (வந்து வந்து போறா, எதிரிகள் கூடீட்டாங்க பொல)

13 comments:

  1. தொடர்ந்தமைக்கு நன்றி… தெரிவுகள் நன்றாக இருக்கின்றன.

  1. கிப்பு...

    நான் வலைப்பதிவுப் பக்கம் வந்து தசாப்தங்கள் ஆகின்றது என்பதொருபுறம் நிற்க...

    உண்மையாகவே எனக்கு கிரிக்கட் தெரியாது. அதன் விதிமுறைகள் தெரியாது. நான் பார்க்கத் தொடங்கினதே 20twenty போட்டிகளிலிருந்துதான்.

    டெஸ்ட் போட்டிகள் எவ்வாறு நடக்கின்றன். அதிலேன் கூட ரண்கள் எடுத்தாலும் சமநிலையில் முடிகின்றன என்பவற்றை நண்பர்கள் விளக்க முயற்சித்து தோல்விதான் கண்டனர்.

    நான் 20Twenty பார்க்க ஆரம்பித்த காலத்தில் அதாவது கிரிக்கட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் என்னுடன் இருந்தவர்கள் இந்தியா விரும்பிகள்.

    ஆகவே என்னால் பதிலளிக்கக் கூடிய மூன்று வினாக்கள்..

    பிடித்த போட்டி வகை : 20Twenty
    பிடித்த அணி : இந்தியா
    பிடித்த வீரர் : தோனி

    இவை தவிர எனக்கு எதுவுமே தெரியாது.

    அழைத்தமைக்கு நன்றி.

    பிரியமுடன்,
    மதுவதனன் மௌ.

  1. உங்கள் தெரிவுகளும் நன்றே. தொடருங்கள்.

  1. மன்னிக்கவும் ........பதிவு சூப்பர்

  1. VARO said...
    தொடர்ந்தமைக்கு நன்றி… தெரிவுகள் நன்றாக இருக்கின்றன//

    நன்றி

  1. மதுவதனன் மௌ. / cowboymathu said...
    கிப்பு..//

    வலைப்பதிவிட்டு நாட்கள் பல ஆகின்ற படியால் தான் உங்களை அழைத்திருந்தேன். இன்னமும் தொடர்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் அழைத்துருக்கலாம்.

    பரவாஜில்லை வருகைக்கு நன்றி

  1. SShathiesh said...
    உங்கள் தெரிவுகளும் நன்றே. தொடருங்கள்.//

    எழுதமாட்டாராம்

  1. aswamethan said...
    மன்னிக்கவும் ........பதிவு சூப்பர்//

    உங்களால் என் பின்னூட்ட பெட்டியை மூட வேண்டிய அபாயம் ஏற்படுமோ தெரியவில்லை. எனக்கு பின்னூட்டங்கள் முக்கியமில்லை.

    வருகைக்கு நன்றி

  1. பதிவு அருமை வித்தியாசமான கட்டுரைகள் எதிர் பார்க்கின்றோம் ..................

  1. ஏனுங்கோ கிரிகட்டிலையா விழுந்தீங்க ...............?
    மச்சான் இது ரொம்ப ஓவரடா ...............

    வித்தியாசமா எழுதடா..............

  1. டேய் மச்சான் நீயா கிப்பூ
    இவ்வளவு நாளும் நானும் குழம்பி கொண்டுதான் இருந்தேன்
    இப்போதானட நிம்மதி ..............
    ஆனாலும் நீ சனத் ஜெயசூர்யாவை விட்டு விட்டைதானே ...........
    ஏன் அவர் உனக்கு சொல்லாமல் அரசியலில் இறங்கி விட்டார் என்ற கோபமோ............?

  1. நான் நாக்கை புடுங்கிக்கொண்டு சாகப்போறன்..

    அது சரி ஏன் எல்லாரும் உங்களை மச்சான் என்கிறார்கள்? :-o

  1. ////நான் நாக்கை புடுங்கிக்கொண்டு சாகப்போறன்.. /////

    ஐயயோ................
    அப்படி எல்லாம் செய்து விடாதீங்க ..................

    //////அது சரி ஏன் எல்லாரும் உங்களை மச்சான் என்கிறார்கள்? :-o/////

    என்ன புல்லட் அண்ணா எல்லாம் தெரிந்து கொண்டே கேட்கிறீர்கள் ........................
    இது உங்களுக்கு அழகு இல்ல ..........

Post a Comment